வெறுப்பு தர்மமாகாது!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
அண்மையில் ஆந்திரபிரதேசத்தில் ஒரு இடத்தில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பகவத்கீதை நூலை விநியோகித்துக் கொண்டிருந்த போது இந்துவல்லாத பிறமதப் பெண்மணியான ஒரு அரசியல் கட்சித் தலைவி, அந்த மனிதரை போலீசாரின் உதவியோடு அங்கிருந்து விரட்டினார். அதனைப் பாராட்டி அவருடைய மதத்தவர், “மத வெறி நூல்களைப் பற்றி பிரசாரம் செய்து வந்த மதவெறி பிடித்த மதத்தவரை விரட்டியடித்ததற்குப் பாராட்டுகிறோம்” என்று அவரைப் புகழ்ந்தனர்.
அதாவது அவருடைய பார்வையில் ஹிந்து மதம், ‘மத வெறி பிடித்த மதம்’. பகவத்கீதை ‘மதவெறி நூல்’. அவர்களுடைய மதம், ‘அன்பு மதம்’ என்பது அந்த அரசியல் தலைவியின் கூற்று.
பிற மதத்திற்கு மாறியவர்கள், தம் முன்னாள் மதமான ஹிந்து மதத்தைப் பற்றி எங்கு பேசினாலும், ‘மத வெறி பிடித்த மதம்’ என்றே குறிப்பிடுகின்றவர். அவர்களுடைய ‘பரிபாஷை’ இது.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஹிந்துக்களைத் தவிர பிற மதத்தவரிடம் உள்ள முக்கியமான குணம், வெறுப்பு. இந்த வெறுப்பு அவர்களுடைய ஒவ்வொரு அணுவிலும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும். அடுத்தவருடைய மதத்தை அவர்களால் சகித்துக் கொள்ள இயலாது. இந்த குணம் ஹிந்துவல்லாத பிற இரு மதத்தவரிடமும் காணப்படுகிறது.
குருதியின் சுவையை அறிந்த கொடூர மிருகத்திற்கு எந்த பிராணியைப் பார்த்தாலும் அடித்துக் கொன்று தின்ன வேண்டும் என்ற உணர்வே ஏற்படும். அதே போல் ஹிந்துவல்லாத மதங்களுக்குப் பிற மதத்தவரைப் பார்த்தால் வெறுப்பும், அவர்களைத் தம் மதத்திற்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் பொங்கி வருகிறது. இதை கவனிக்காத நிலையில் ஹிந்துக்கள் இருக்கிறார்கள்.
எதை ஆதாரமாகக் கொண்டு ஹிந்து தர்மத்தை, ‘மதவெறி மதம்’ என்று கூறுகிறார்கள்? தம் மதத்தில் தாம் இருப்பவர் ஹிந்து. மதம் மாற்றுவது என்பதை அறியாதவர் ஹிந்து. பிற மதங்களை நிந்திக்க மாட்டார். அதுமட்டுமின்றி, எல்லா மதங்களும் ஒன்றே என்று எண்ணும் அப்பாவி.
மத மாற்றங்களும் இகழ்ச்சியும் நடக்கையில் யாரோ ஒரு ஹிந்து, எங்கோ ஓரிடத்தில் அதற்கு எதிர்வினையாற்றுவர். அதுவும் மிகக் குறைவே.
இதன் மூலம், பிற மதத்தவர் எப்போதுமே ஹிந்து மதத்தை வெறுப்போடு பார்த்து எரிச்சலடைந்து ஹிந்துக்களிடம் அருவருப்போடு நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. வாய்ப்பு கிடைத்தால், தம் மதத்திற்கு மாறாத ஹிந்துக்களை, ஒரு கால்மணி நேரத்தில் அழித்து விடவேண்டும் என்று காத்திருப்பவர்கள் அதிகம். இதனை அவர்களுடைய அறிவிப்புகளே தெரிவிக்கின்றன.
இத்தனை துவேஷமும் வெறுப்பும் கொண்ட மதங்கள் தம்மை அன்பு மதங்கள் என்றும் அமைதி மதங்கள் என்றும் கூறிக்கொள்வது நகைப்புகுரியது.
இந்த வெறுப்புகள் இவ்வாறு இருக்கையில், ஹிந்து மதத்திற்குள்ளேயே ஒருவரை ஒருவர் வெறுப்பது வருத்தத்திற்கு உரியது. பிற மதங்களின் மீது கூட இரக்கம் கொள்வார்களோ என்னவோ, ஆனால் சொந்த மதத்தில் இருக்கும் மற்றொரு சம்பிரத்தாயத்தின் மீது வெறுப்பு கொண்டிருக்கும் பெரியவர்கள் ஹிந்து மதத்திலேயே உள்ளார்கள். விஷ்ணு பக்தர்கள் என்பர் கூறிக் கொண்டு சிவ துவேஷத்தையும், சிவ பக்தர்கள் என்று கூறிக் கொண்டு விஷ்ணு துவேஷத்தையும் பரப்பும் சிகாமணிகள் இன்றைய கால கட்டத்திலும் உள்ளார்கள்.
அதுமட்டுமல்ல, ஒரே சம்பிரதாயத்தைச் சேர்ந்த அமைப்பிலும், ஒருவரைக் கண்டால் ஒருவருக்குப் பிடிக்காத மடங்கள் உருவாகுகின்றன. உண்மையில், அந்த அமைப்புகளில் ஒரே சித்தாந்தம், உயர்ந்த ஆச்சார்ய பரம்பரை, வேத சாஸ்த்திரங்களைப் படித்துப் பரப்புதல் போன்றவை சரியாக நடக்கின்றன. சனாதன தர்மத்தை விரும்புபவர்களுக்கு வேறு என்ன வேண்டும்? ஆனால், எங்களுடையதுதான் சரியானது என்ற தவறான அபிப்பிராயத்தால் அடுத்தவரை பாரபட்ச நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் வசைபாடுவதற்கும், மட்டம் தட்டிப் பேசுவதற்கும் கூட பின்வாங்காத நிலையைப் பார்க்க முடிகிறது.
உண்மையில், ஆச்சார்யர் என்ற தகுதியில் இருப்பவர்களிடம் இத்தகைய வேற்றுமைகளோ விமரிசனங்களோ இருக்காது. தவறான அபிப்பிராயத்தோடு ஒரு அமைப்பிற்கு கொம்பு சீவுபவர்கள், உண்மையில் சனாதன தர்மத்தையும், ஒரு நல்ல சம்பிரதாயத்தையும் அவமதிக்கிறோம் என்ற விஷயத்தை உணர்வதில்லை.
ஹிந்து மதத்தின் மீது தாக்குதல், ஆக்கிரமிப்புகள், வெறுப்புகள் எல்லாம் நடந்து வரும் நேரத்தில், சுயநலத்தோடு பரம்பரையாக வரும் சிறந்த தார்மிக அமைப்புகளின் மீதும், ஆச்சார்யர்களின் மீதும் விவாதங்களின் ஈடுபடுவது வருத்தத்திற்கு உரியது.
ஆச்சார்யர்களின் முன்னிலையில், தர்ம சாஸ்த்திர அறிஞர்களின் கோஷ்டியில் தெளிவிக்க வேண்டிய கருத்துக்களை, பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் சமூக வலைதளைகளிலும் வெறுப்பு வாக்கியங்களைக் கொண்டு இகழ்ந்து பேசி, நடுத்தெருவுக்கு இழுப்பது எவ்விதத்தில் தர்மத்தை ரட்சிப்பதாகும்? சாமானிய ஹிந்துவுக்கு குழப்பமும், ஹிந்து வெறுப்பாளர்களுக்கும் நாத்திகர்களுக்கும் திருப்தியும் அளிக்கும் இத்தகு செயல்களில் ஈடுபடும் ஹிந்து முக்கியஸ்தர்கள் சிந்திக்க வேண்டும்.
இவற்றைத் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, ஹிந்து எதிர்ப்பாளர்களைப் பரப்பும் மதமாற்று வெறியர்கள் மேலும் உற்சாகமடைகிறார்கள்.
‘முழுமையான தர்ம ரட்சணை’ என்ற ஒற்றைப் பெரிய லட்சியத்தை மறந்து விட்டு ஆதிக்கம் செலுத்துவதில் நாட்டம் கொண்டு, சமரசத்திற்குச் சற்றும் முயலாமல், வெறுப்புகளை மேலும் தூண்டுகிறார்கள்.
ஜாதிக்காக ஒற்றுமையாகப் போராடுபவர்கள், சனாதன தர்மத்திற்காக ஒன்றுபடுவதில்லை.
எங்கு பார்த்தாலும் வேற்றுமை, வேறுபாடு. இவற்றால் தர்மம் புறக்கணிக்கப்படுகிறது என்பதை உணர்வதில்லை. நம் தேசத்திலிருந்து துண்டாகப் பிரிந்த பக்கத்து தேசத்தில் ஹிந்துக்களின் மீது அதி பயங்கரமாகத் தாக்குதல்கள் நடத்தினாலும், அதேபோல் பாரத தேசத்திலும் நிகழ்த்துவோம் என்று அச்சுறுத்தி எச்சரித்தாலும், எந்த வித எதிர்வினையும் காட்டாத ஹிந்துக்களின் ஒற்றுமையின்மையால் ஹிந்துமதம் மேலும் சீர்குலைகிறது.
ஒன்றுபட்ட ஹிந்து சக்தியை சாதிக்கப் போகிறோமா? மதங்களுக்கு வெறுப்பு இருக்கலாமே தவிர, தர்மத்திற்கு வெறுப்பு கிடையாது. நம்முடையது மதமல்ல. தர்மம். இதனை ஹிந்துக்கள் அனைவரும் உணரவேண்டும்.
தேச நலனுக்கு மிக முக்கியமானவை ஹிந்து மத ஒற்றுமையும், சமரச நிலைப்பாடும். இவை சாத்தியமாக வேண்டும் என்று பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்வோம். சுயநலத்தோடு கூடிய வேறுபாடுகள் முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புவோம்.
(Source – ருஷிபீடம் ஆன்மீக மாத இதழ், ஜனவரி, 2025)