
மொழி தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ள நிலையில்10ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு ஒரே தேர்வு நடத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 10 வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கானமாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மாதிரி வினாத்தாளில் மொழி தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கு தமிழில் 57 வினாக்களும், ஆங்கிலத்தில் 47 வினாக்களும் இடம்பெற்றுள்ளன.