ஏப்ரல் 21, 2021, 10:28 காலை புதன்கிழமை
More

  +2 மாணவர்களுக்கு மறுத்தேர்வு இன்று தொடங்கியது!

  student exam

  கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.

  ஆனால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

  அதாவது அவர்கள் மீண்டும் அந்த தேர்வை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த தேர்வை எழுதினால் தான் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

  ஆனால் மார்ச் 24 ஆம் தேதி நடந்த தேர்வை எழுதாத 32 ஆயிரம் மாணவர்களுள் 700 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அதனால் அந்த 700 மாணவர்களுக்கு மட்டும் வரும் ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

  இதனிடையே கடந்த 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மறுதேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 289 மையங்களில் சுமார் 700 மாணவ, மாணவியர்கள் அந்த தேர்வை எழுதி வருகின்றனர்.

  கொரோனா ஊரடங்கின் போது போக்குவரத்து பிரச்சனையால் தேர்வு எழுத முடியாதோருக்கு மறுதேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »