+2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை!

கல்வி சற்றுமுன் தமிழகம்
school
school

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை மே மாதம் இறுதி முதல் நேரடியாக பள்ளிகளில் நடத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக இணைய வழியிலான குறுந்தேர்வுகள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.