மும்பை: இந்தியாவின் வங்கிகளை ஏமாற்றி விட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிரவ் மோடியின் ரூ. 170 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் மோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கை அமலாக்கத்துறை, மற்றும் சிபிஐ., விசாரித்து வருகின்றன. நிரவ் மோடி அதற்கு முன்னதாக வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார்.
கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியின் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய நிலையில், இன்று மும்பையில் உள்ள ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலக்காத்துறை முடக்கியுள்ளது.




