spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஉச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லி, போலி ஆடியோ வெளியிட்டு... : காங்கிரஸ் மீது பாய்ந்த அமித்...

உச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லி, போலி ஆடியோ வெளியிட்டு… : காங்கிரஸ் மீது பாய்ந்த அமித் ஷா

- Advertisement -

கர்நாடகாவில் காங்கிரஸார் தங்கள் தோல்வியைக் கொண்டாடி வருகிறார்கள் என்று குறிப்பிட்ட பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி, எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றதும், எப்படியும் அவரை பெரும்பான்மை பெற்றுவிடச் செய்து விடுவார் அமித் ஷா என்று பாஜக.,வினர் கூறி வந்த நிலையில், அமித் ஷா வேண்டாம் என்று சொல்ல, எடியூரப்பா ராஜினாமா செய்தார். ஆனால் இந்த அதிர்ச்சி முடிவுக்குப் பின்னரும் அமித் ஷா பெரிதும் எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில், திடீரென இன்று செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். மாலை 4 மணி அளவில் தில்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, கர்நாடக மக்கள் பாஜக.,வுக்குதான் அதிக அளவில் வாக்களித்தனர். இன்றைய சூழலில் மக்களிடம் பாஜக., முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜக.,வே தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஆட்சி அமைக்கும் உரிமையும் பாஜக.,வுக்குதான் உண்டு.

கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், தாங்கள் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், பாஜக., கூட்டணி ஆட்சி அமைத்ததாகக் கூறி வருகிறார்கள். உண்மையில், தனிப்பெரும் கட்சியாக இருந்தும் காங்கிரஸ் கட்சி அங்கெல்லாம் ஆட்சியமைக்க உரிமை கோரவே இல்லை.

தனிப் பெரும் கட்சியாக அவர்கள் அவ்வாறு உரிமை கோரியிருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் தவறவிட்டனர். அந்த நேரத்தில்தான் பாஜக., ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்தது என்று விளக்கம் அளித்தார் அமித் ஷா. ஆனால், அதுபோல் கர்நாடகத்தில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை இருந்தது. அதனால்தான் பாஜக., ஆளுநரிடம் உரிமை கோரியது என்றார் அமித் ஷா.

கர்நாடக தேர்தல் முடிவுகளில் இருந்து, காங்கிரஸார் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. அப்படிக் கொண்டாட என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா. ஒரு வேளை அவர்கள் தங்கள் தோல்வியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ என கேள்வி எழுப்பிய அவர், எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் 7 நாட்கள் மட்டுமே கேட்டார் என்று காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் கூறியது பொய் என்று கூறினார்.

இது போல் பாஜக., குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கூறுவதும் பொய் என்று கூறிய அவர், போலி ஆடியோ டேப்புகளை வெளியிட்டு காங்கிரசார் மகிழ்ச்சி காண்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் தேர்தலில் தோற்றுவிட்டனர். இந்தத் தோல்வியை காங்கிரஸ் ஏன் கொண்டாடி வருகிறது ? மக்கள் காங்கிரஸை விரும்வில்லை. முதல்வராக இருந்த சித்தராமய்யாவே ஒரு தொகுதியில் தோற்றுப் போயுள்ளார். ஆனால், இதனையும் காங்கிரஸ் கொண்டாடி வருகிறது.

37 தொகுதிகளில் மட்டுமே வென்ற மஜத.,வும் கொண்டடுவதற்கு என்ன இருக்கிறது? தேர்தலுக்கு முன்பு வரை அந்த இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துப் பேசினர். தேர்தல் பிரசாரங்களில் தாக்கிக் கொண்டனர். ஆனால் இப்போது சேர்ந்து கொண்டுள்ளனர். இது மக்கள் விரும்பாத ஒரு கூட்டணி.

கர்நாடக தேர்தலில் இந்த வெற்றிக்காக பாஜக., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அதற்காக நான் நன்றி சொல்கிறேன். கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக.,வுக்கு தான் மக்கள் அதிக இடங்களை அளித்தனர். அதற்காக நான் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

இப்போது கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார் அமித் ஷா.

அமித் ஷா வின் செய்தியாளர் சந்திப்பு குறித்த பதிவு….

 

2 COMMENTS

  1. Even after being rejected by the people, the brazen Con party has offered CMship to HDK and struck an unholy alliance with it just to keep the BJP out of office! People must identify the crooked,corrupt and fake secular parties and support only the truly secular and development-oriented BJP. It’s only BJP which practices “Sabka Saath Sabka vikas”, which alone is in the interest of this nation!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe