முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழகங்கள்!

கல்வி சற்றுமுன் தமிழகம்
Exam

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மே 3ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

மேலும் மே 10ஆம் தேதி நடைபெற இருந்த இறுதி பருவ தேர்வுகளையும் சென்னை ஐஐடி ஒத்தி வைத்துள்ளது. மே 17ஆம் தேதி முதல் பருவத் தேர்வுகளை நடத்த இருந்த சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.