அரசு பள்ளியில் ரவுடிகளின் அராஜகம்! நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

கல்வி சற்றுமுன் தமிழகம்
school 1
school 1

பள்ளி வகுப்பறையில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரில் கன்கார்டியா உயர்நிலைப்பள்ளி இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது.

இதனை சாதகமாக பயன்படுத்திய சமூக விரோத கும்பல் அந்த பள்ளியின் வகுப்பறை ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் மர்ம நபர்கள் அந்த வகுப்பறைக்குள் மது அருந்துவது, சூதாடுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்பின் அவர்கள் மது பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்வதால் பொதுமக்கள் அதனை தட்டி கேட்டுள்ளனர்.

இதனால் அந்த மர்ம நபர்கள் பொது மக்களை மிரட்டி செல்கின்றனர். எனவே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.