காரைக்குடி: காரைக்குடி இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை முன்னாள் துணை வேந்தர் பாராட்டினார்.
காரைக்குடி அருகே அமராவதிபுதுாரில் ஸ்ரீ இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது.இப்பள்ளியில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுதேர்வில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற நிசாந்த் என்ற மாணவர் 475 மார்க் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
இம்மாணவரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் ஸ்ரீ இராஜராஜன் கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகருமான பேராசிரியர் சுப்பையா பாராட்டினர்.