
செங்கோட்டையில் பாஜக விளையாட்டுப் பிரிவு, பி.எல்.எம். ஸ்போர்ட்ஸ் அகாடமி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஊக்கதொகை வழங்கல்..
செங்கோட்டை பி.எல்.எம்.ஸ்போர்ட்ஸ் அகாடமி வளாகத்தில் வைத்து தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பி.எல்.எம்.ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.எம்.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ராஜேஸ்ராஜா, பி.எல்.எம்.ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனா் எல்எம்.முரளி ஆகியோர் தலைமைதாங்கினர். நகரத் தலைவா் வேம்புராஜ் முன்னிலை வகித்தார்.
செங்கோட்டை 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவா் பொன்னுலிங்கம் (எ) சுதன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குற்றாலம் விவேகானந்தா ஆசிரம நிறுவனா் சுவாமி அகலானந்த மகராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகை கொடுத்து ஆசியுரை வழங்கினார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் கோபிஆனந்த், 10ஆம் வகுப்பு ஆகாஷ், எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவிகள் கலைச்செல்வி, மோனிக்கா (இரண்டாவது இடம்), 10ஆம்வகுப்பு மாணவிகள் கார்த்திகா, சுகுணா (இரண்டாவது இடம்), அரசு உயர்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு மாணவன் எம்கே. கார்த்திக். ஆகியோருக்கு வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட மாதா அமிர்தானந்தமாயி சேவை மைய ஒருங்கிணைப்பாளா் முருகையா வாழ்த்துரை வழங்கினார். பாஜக நிர்வாகிகள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் மணிகண்டன் விளையாட்டுப் பிரிவு மாவட்டத் துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜமீன்முத்துக்குமார், விஷ்ணுகுமார், கிருஷ்ணன் செங்கோட்டை நகர் துணைத்தலைவர் லட்சுமணன், ஒன்றிய தலைவர் கண்ணபிரான், ஒன்றிய துணைத் தலைவர் சிவா, நகர பொதுச்செயலாளர் கோமதிநாயகம், நகரச்செயலாளர் முத்து, நகர இளைஞரணி பொதுச்செயலாளர் ஸ்ரீராம்கார்த்திக், ஒன்றிய நிர்வாகிகள், மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், உள்பட பலா் கலந்து கொண்டனா்.