கரூர் முதல் கலங்கரை விளக்கம் (மெரினா) வரை மாணவ, மாணவிகளை விமான பயணம் மேற்கொள்ள வைத்த கரூர் தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் நடவடிக்கையால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதன் முதலாக விமான பயணம் மேற்கொண்ட மாணவ மாணவியர் ஆச்சரியம் அடைந்தனர். அவ்வகையில், கரூர் தனியார் பள்ளி நிர்வாகம், மாணவ, மாணவிகளை விமான பயணம் மேற்கொள்ள வைத்து உற்சாகம் ஊட்டியது பேசுபொருளாகியுள்ளது.
கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்கின்ற தனியார் பள்ளி, அண்மையில் கரூர் முதல் கலங்கரை விளக்கம் மெரினா வரை விமான பயணம் என்ற தலைப்பில் அறிவுசார் கல்வி சுற்றுலாவை தொடக்கி, விமானத்தில் 50 மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்களையும் அழைத்து சென்றது.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு சென்ற மாணவர்கள், நம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களையும் பார்த்து அவர்களது வாழ்க்கை குறிப்புகளையும் அறிந்தனர். அதனை தொடர்ந்து அறிவாற்றலை அதிகப்படுத்தும் பொருட்டு, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று நூலகத்தின் நூலகத்தின் சிறப்புகளையும் அறிந்தனர்.
மேலும் இறுதியாக விண்வெளியை கண்ணெதிரே காண, பிர்லா கோளரங்கை கண்டு மகிழ்ந்ததோடு, அங்கிருந்து புறப்பட்ட மாணவ, மாணவிகள் ஆசிரியர்களோடு சென்னை விமான நிலையத்திலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து கரூர் வந்தனர்.
கரூர் மாவட்ட வரலாற்றிலேயே முதன்முறையாக, பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளை விமான பயணம் மூலம் அழைத்து சென்ற பள்ளி என்ற பெருமையை இந்த கரூர் அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிடித்த நிலையில், மாணவ, மாணவிகளிடையேயும், பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பிடித்துள்ளது.
இது மட்டுமில்லாமல் இப்பள்ளியின் தலைவர் முனைவர் டாக்டர் மணிவண்ணன் மற்றும் பள்ளியின் தாளாளர் கீதா மணிவண்ணன் மற்றும் பள்ளியின் முதல்வர் பகலவன் ஆகியோருக்கும் பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றது.