செங்கோட்டை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் வைத்து 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான கலை திருவிழா போட்டிகள் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைஆசிரியா் சேவியா்அலெக்சாண்டிரியா தலைமைதாங்கினார். பள்ளி ஆசிரியா் ராதா, உதயபாமா ஆகியோர் முன்னிலைவகித்தனா். ஆசிரியா் சுப்புலெட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து மாணவ, மாணவியா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் ஆசிரியா் இராஜேந்திரன், கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் பின்னா் நடந்த போட்டிகளுக்கு நடுவர் குழுவில் இருந்து ராதா, சுப்புலெட்சுமி ஆகியோருடன் போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனா்.
பின்னா் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் மாணவ, மாணவியா்களின் பெற்றோர், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் மகாலெட்சுமி சிறப்பாக செய்திருந்தார். முடிவில் ஆசிரியா் இசக்கிமுத்து நன்றி கூறினார்.