இந்தியா முழுவதிலும் மெடிக்கல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மார்ச் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நாளை தான் விண்ணப்பிக்க கடைசி தினம் என்ற நிலையில் சற்றுமுன் இந்த கால அவகாசம் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மார்ச் 12 வரை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த கால நீட்டிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.