கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை கோட்டூர் புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், இதனைத் தெரிவித்தார்.
அறிவிப்புப் பலகையில் தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி திறந்த நாளிலேயே மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்றார். மேலும், புதிய பாடத் திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.



