தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 41 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவப் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்கள் இன்று வெயிடப்பட்ட பின்னர், தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தனியார் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



