நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு வரும் இன்று மற்றும் நாளை தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரப்பிய பணியிடமாறுதலுக்கான விண்ணப்பங்களை ஜூன் 7ம் தேதி வரை சமர்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கும் என்றும் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாளை தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.



