நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் கரிசல் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள்…

கரிசல் திரைவிழா ஓர் அறிமுகம் :மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தால் 1993 ஆம் ஆண்டில் தொடர்பியல் துறை ஆரம்பிக்கபட்டது. பல திறமையான நபர்களை உருவாக்கி ஊடகத் துறைக்கு கொடுத்த பெருமை இதற்கு உண்டு.

2004 ல் இந்த துறை மாணவர்களின் தலைமையில் “மனோ மீடியா கிளப்” உருவாக்கப்பட்டது. இதனை நடிகர் சரத்குமார் துவக்கி வைத்தார். இது ஊடக நிபுணர்கள் மற்றும் தேசிய அளவிலான தொடர்பியல் துறை மாணவர்களை ஒன்றாக இணைக்கும் தளமாக திகழ்கிறது.

2005 ஆம் ஆண்டில் மனோ மீடியா கிளப் “மனோ மீடியா ஃபீஸ்டா” என்ற பெயரில் தேசிய அளவிலான ஊடக மாணவர்களை ஒன்றாக இணைத்து ஊடகத் துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடவும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல போட்டிகளை நடத்தி பரிசுகளை கொடுக்கவும் துவங்கியது.

இந்நிகழ்வு பெரிய வெற்றியைப் பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் மரபுவழி மண்ணின் அடையாளத்தை குறிக்கும் பொருட்டு, இந்த நிகழ்ச்சி “கரிசல் திரைவிழா” என மறு பெயரிடப்பட்டது.

இந்த நிகழ்வானது கடந்த பதிமூன்று ஆண்டுகளாக ஸ்பான்சர்கள், மாணவர்கள் மற்றும் துறையின் பேராசியர்களின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடுகின்றனர்.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான ஊடக துறை சார்ந்த மாணவர்கள் வருடா வருடம் பங்கேற்று வந்தனர்.

அனைத்துத் துறை கல்லூரி இளநிலை மாணவர்களும் ஊடகத் துறை பற்றி தெரிந்து கொள்ளும் வண்ணம் கரிசல் திரைவிழாவில் அனைத்து துறை சார்ந்த இளநிலை மாணவர்கள் மட்டும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • Press Team MSU
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...