10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21 ல் வெளியாகும்

சென்னை; பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சபிதா இன்று வெளியிட்டார். இதன்படி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் மே 7 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 21 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் காலை 10 மணிக்கு மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.