TN Governor RN Ravi

பரபரப்பான நேரத்தில்… தில்லி செல்கிறார் தமிழக ஆளுநர்..!

Featured தமிழகம்
rn ravi - 2026

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 7ஆம் தேதி தில்லி செல்கிறார். 3 நாள் பயணமாக தில்லி செல்லும் அவர், பிப்.9ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியினர் பெரும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்றும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தேறமாட்டார்கள், எனவே நீட்தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வரும் திமுக., நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஒரு மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது.

ஆனால் ஆளுநர் நீட் தேர்வு விலக்கு கேட்பது சமூக அநீதி என்றும், ஏழை மாணவர்களின் மீதான பொருளாதாரச் சுரண்டல் என்றும் கூறி மசோதாவை தமிழக சட்டபேரவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து பிப்ரவரி 5ஆம் தேதி நாளை அனைத்து கட்சி கூட்டத்தை ஆளும் திமுக கூட்டியுள்ளது.

தமிழகம் குறித்த பார்வை தேசிய அளவில் பரபரப்பாகியுள்ளது. இந்தநிலையில் நாளை ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக தில்லிக்கு செல்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.