திமுக., தலைவர் ஸ்டாலின் ஒரே வார்த்தையை அனைத்து மேடைகளிலும் வரிசை தவறாமல், தொனி மாறாமல் பேசுவார் என்பதை, தற்போதைய வீடியோக்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.
வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ … என்றால் உடனே ஸ்டாலினின் நினைவு வரும் வகையில், அவரது இம்மியும் இசகு பிறழாத வசனம் பலரின் மனத்தில் நங்கூரம் இட்டுக் கொண்டுள்ளது.
காரணம் நான் கலைஞரின் மகன் என்று அவர் சொல்லிக் கொள்வதும் அப்படியே!
இப்போது லேட்டஸ்ட் ட்ரெண்டாக, பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா… என்ற அவரது வார்த்தையை இப்போது மீம்ஸ் ஆக்கியுள்ளனர்.
வெவ்வேறு மேடைகளில் அவர் பேசும் பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா என்ற அவரது வசன நடையை நீங்களும் கேட்டு மகிழ … இதோ வீடியோ..!




