தேவை… போலி சாமியார்கள் இல்லை! உழைக்கும் மக்கள்!

Published:

nithyanatha - 2026

By ஆர். நடராஜன்

பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். வருடம் மாதம் சரியாக நினைவில் இல்லை. என் நண்பர் ஒருவர் நித்யானந்தாவின் பெயரைச் செல்லி அவரைப் பற்றி வலம்புரிஜான் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார் அவர் மறைந்துவிட்டார்.

புதிதாக நித்யானந்தாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் எழுத வேண்டும் என்று அனுப்பிவைத்தார். பெங்களூரில் எனக்கு முன்பே தெரிந்த ஒரு நண்பர் அழைத்துசென்றார். விடதி ஆசிரமத்திற்கு சென்றோம் அங்கே நித்யானந்தாவை அறிமுகப்படுத்தினார். அவர் ஆசிரமத்தை சுற்றிக்காட்ட உடன் வந்தார். எனக்கு அவருடன் மனம் ஒன்றவில்லை. அவரை துளி கூட மதிக்க முடியவில்லை.

எந்த வித ஆர்வமும் காட்டாமல் அவருடன் பேசிக்கொண்டே நடந்து வந்தேன். அங்கு இருக்க பிடிக்காததால் மாலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் நண்பர் விடவில்லை மாலையும் என்னை அழைத்துச்சென்றார். அப்போது நித்யானந்தா ஒரு கொட்டகையில் இருந்தார். கொட்டகையின் சுவரோரம் ஒரு குட்டி பாம்பு சென்றது. கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் அது போயிருக்கும்.

அவர் கேமராமேனை அழைத்து போட்டோ, வீடியோ எடுக்கச் செய்தார். இன்னொருவரை அழைத்து பத்திரகைக்கு கட்டுரை போய்விட்டதா என்று கேட்டார். அவரை ஒரு அறிவாளியாகவோ, ஆன்மஞானியாகவோ என் மனம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள வில்லை.

சென்னைக்கு திரும்பி வந்தேன். அனுப்பி வைத்த நண்பரிடம் சொன்னேன். அவரைப் பற்றி புத்தகம் எழுத நான் விரும்ப வில்லை. என் மனம் அவரிடம் ஈடுபடவில்லை. ஒரு கோடி ரூபாயை ஒற்றை ரூபாய் நாணயங்களாக சாக்குகளில் போட்டு என் முன்னால் கொட்டினாலும் அவரைப் பற்றி எழுத மாட்டேன், என்றாவது ஒரு நாள் அவர் ஜெயிலுக்கு போவார் என்றேன். அது தான் நடந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் சென்னை புத்தக கண்காட்சியில் அவர் ஒரு ஸ்டால் கேட்டார். தரப்படவில்லை. என்னுடைய ஸ்டாலில் அவர் புத்தகங்களை வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். நான் ஒப்புக்கொள்ளவில்லை.

இவர் பின்னால் சுத்துபவர்கள், இவரை வழிபடுபவர்கள், பின்னால் வருந்துவார்கள் என்றேன். அதன்பின் நடந்த கூத்தெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

இன்னொரு சாமியார் சென்னையில் பெரிய தொழிலதிபர்களை பிடித்துக்கொண்டு ஒரு கலக்கு கலக்கினார்.

chaturvediswami - 2026

அவர் தத்துவம் பற்றி அருமையாக ஆங்கிலத்தில் பேசுகிறார். நீங்கள் கேட்க வரவேண்டும் என்று என்னை அழைத்தார்கள். அவர் தான் சதுர்வேதி சாமியார் என்று அழைக்கப்பட்டவர்.

அவர் தனக்கு பக்தர்களாக வாய்த்தவர்களை படாதபாடு படுத்தினார். அவர் முதல் முறை சென்னை வந்து டெல்லிக்கு திரும்பியபோது ஒரு தாயும், பெண்ணும் விமான நிலையத்தில் இருந்தார்கள். பெண்ணின் கன்னத்தை தடவினார் என்றார்கள். இவரும் ஜெயிலுக்கு போவார் என்றேன். அது தான் நடந்தது.

இதற்கிடையே இந்த காரில் தான் வருவேன். காரில் இப்படி சீட் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லி கார் சீட்டுகளுக்கு வேறு உறை போடச் சொன்னார். தன் முன்னால் எல்லோரும் சட்டை இல்லாமல் வேட்டியுடன் குனிந்து வணங்க வேண்டும் என்றார். நான் என் நண்பருடன் சென்றிருந்தேன் இதற்கு நான் உடன்படவில்லை.

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

அவரை ஒரு வெளிநாட்டு விசாவிற்காக நான் சிபாரிசு செய்ய வேண்டும் என்று என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்கள். அதே தினத்தில் விசா இன்டர்வியூக்கு ஏற்பாடு செய்து கொடுத்தேன். உள்ளே சென்றவர் சென்ற வேகத்தில் திரும்பிவிட்டார். செக்யுரிட்டி காரர்கள் அவரை செக் செய்ய முற்பட்டதற்கு மாட்டேன் என்று சொல்லி திரும்பிவிட்டார்.

நண்பர்கள் இப்படி ஆகிவிட்டது ஏதாவது செய்யமுடியுமா என்று கேட்டார்கள். பாதுகாப்பு பரிசோதனை இல்லாமல் அவர் உள்ளே அனுப்பப்பட மாட்டார். பாதுகாப்பில் இருப்பவர்கள் குடுமியை அவிழ்க்கச் சொன்னாலும் அவிழ்க்கவேண்டும். கோமணத்தை அவிழ்க்கச் சொன்னாலும் அவிழ்க்க வேண்டும் என்றேன். நண்பர்கள் சங்கடப்பட்டார்கள் ஆனால் அது தான் உண்மை.

அவரும் பெண்ணை துன்புறுத்திய குற்றங்களுக்காகவும் வேறு சில குற்றங்களுக்காகவும் ஜெயிலுக்கு போனார். சுற்றி வந்து தாழ் பணிந்த பெரிய மனிதர்கள் எல்லாம் அப்பறம் அவர் நிழலைக் கூட தொடவில்லை.

இவர்களைப் போல் இன்னும் சில போலி சாமியார்கள் இருக்கிறார்கள். எது எதிலோ மயங்கி விட்டில் பூச்சிகளாக விழும் பக்தர்கள் இருப்பதனால் தான் இவர்கள் பொழிக்கிறார்கள்.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

இவர்களை என்கௌண்டரில் ரௌடிகளை சுடுவது போல் சுட்டுக்கொல்ல வேண்டும். இல்லை சாக்கு மூட்டையில் பாறாங்கல்லுடன் சேர்த்து கட்டி அட்லாண்டிக் சமுத்திரத்திலோ, பசிபிக் சமுத்திரத்திலோ போட்டுவிட வேண்டும்.

தடுக்க வரும் பக்தர்களுக்கும் அதையே செய்ய வேண்டும். நாட்டுக்குத் தேவை போலி சாமியார்கள் அல்ல, உழைக்கும் மக்கள்.

Related articles

Recent articles

spot_img