December 6, 2025, 10:37 PM
25.6 C
Chennai

தாமதிக்கப்பட்ட நீதி .. தடுக்கப்பட்ட நீதி!

girl attack image - 2025

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ்வில் உயிரோடு கொளுத்தப்பட்ட பெண் “நான் இறப்பதற்கு தயாராயில்லை. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் தூக்கில் தொங்குவதை நான் பார்க்க வேண்டும்” என்று கதறியிருக்கிறாள் தன் சகோதரனிடம்.

நடந்துள்ள கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை கற்பழித்ததாக புகார் கொடுத்திருந்தார் அந்த பெண். சிவம் மற்றும் சுபம் திரிவேதி ஆகிய இருவரும் கடந்த டிசம்பரில் தன்னை கடத்தி கற்பழித்ததாக புகார் கொடுத்ததையடுத்து, இருவரையும் கைது செய்து வழக்கு தொடுத்தது காவல் துறை.

சுபம் திரிவேதி என்ற முக்கிய குற்றவாளி கடந்த 10 நாட்களுக்கு முன்னால் பிணையில் வெளிவந்துள்ளன. நேற்றைய முன் தினம் ரேபரேலி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கும் வழியில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் உட்பட ஐந்து நபர்கள் அந்த பெண்ணை வழிமறித்து தாக்கி அவள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்கள்.

அந்த பெண் தன்னை காப்பாற்றி கொள்ள ஓடி கொண்டே காவல்துறைக்கு அலை பேசியில் உதவி கேட்டிருக்கிறாள். அந்த இடத்திற்கு சென்று அவளை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

90 விழுக்காடு தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் டில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று மரணமடைந்தது அதிர்ச்சியளிக்கிறது.

நேற்று தெலங்கானவில் நடந்தது போன்ற ஒரு நடவடிக்கை தான் இந்த சம்பவத்திற்கும் தீர்வு என மக்கள் வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், “நான் இறப்பதற்கு தயாராயில்லை. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் தூக்கில் தொங்குவதை நான் பார்க்க வேண்டும்” என்ற அந்த பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்ற இனி முடியாது என்றாலும், தெலங்கானா என்கவுண்டர் மாதிரியோ அல்லது நீதிமன்றமே முன் வந்து அந்த பெண் எப்படி இறந்தா ளோ அதே போன்று தெருவில் ஓட விட்டு உயிரோடு கொளுத்தும் தண்டனையை அந்த ஐந்து பேருக்கும் வழங்க வேண்டும். அ

ப்போது தான் வன்மங்களோடு கூடிய மிருகத்தனம் குறையும். இனி இது போன்ற எண்ணமுள்ள சமூக விரோதிகளை எச்சரித்து, அச்சுறுத்தும் வகை இதுவே.

மேலும், இது குறித்து மீண்டும், மீண்டும் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் தான், என்கவுண்டர் செய்தாலோ அல்லது வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலோ ஐயோ! மனித உரிமை மீறப்படுகிறதே என்று கொந்தளிக்கிறார்கள் என்பதை அறிதல் நலம்.

சட்டங்கள் சமுதாயத்திற்கு முக்கியம் தான். ஆனால் நீதி தாமதமாகும் நிலையில், தீர்ப்பை நோக்கி வேகமாக செல்லும் கட்டாயமும், கடமையும் காவல் துறைக்கும், அரசுக்கும் உள்ளது.

நெஞ்சம் பதை பதைக்கிறது. தாமதமான தீர்ப்பு மறுக்கப்படும் தீர்ப்பு.

  • நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories