October 19, 2021, 8:44 am
More

  ARTICLE - SECTIONS

  இந்தியாவுக்குத் தேவை.. பொது சிவில் சட்டம்!

  இந்திய அரசியலில் சிக்கிச் சீரழிந்த இந்திய மக்களுக்கு முக்கியத் தேவையாக அதன் அரசியல் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை இந்தியர்கள் பலரும் உணர்ந்திருக்கின்றனர்.

  constitution of india - 1

  ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற முக்கால் நூற்றாண்டு காலத்தில், இன்று திரும்பிப் பார்க்கும் போது, இந்திய அரசியலில் சிக்கிச் சீரழிந்த இந்திய மக்களுக்கு முக்கியத் தேவையாக அதன் அரசியல் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை இந்தியர்கள் பலரும் உணர்ந்திருக்கின்றனர்.

  இந்தியா மதசார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டாலும் சிறுபான்மை மதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் நாடு இந்தியா.

  ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற பாரபட்சக் கொள்கைகளுடன், நாட்டின் பெருபான்மை அப்பாவி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு, சிறுபான்மை மக்களுக்கு தாராள நிதிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்ற நாடு இந்தியா.

  பெரும்பான்மை மக்களின் வரிப் பணத்தை சிறுபான்மை மதத்தினருக்கு வாரிவாரி இறைத்துக் கொண்டிருக்கும் நாடு இந்தியா.

  இங்கே, பெரும்பான்மை ஹிந்து கல்லூரி மாணவனுக்கு கல்வி உதவி தொகை 6000 /- கிறிஸ்துவ மாணவனுக்கு ரூ. 24,000 /-

  ஆலயத்துக்கு மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூபாய் 8.50.
  ஆனால்… சர்ச் மசூதிக்கு ரூபாய் 2.50.

  கோவில் பூசாரிகள் குருக்களுக்கு 600 ரூபாய் மாத ஊதியம். ஆனால், மசூதி இமாம்களுக்கு ரூ.20,000 மாத சம்பளம். சர்ச் பாதிரிகளுக்கு இரட்டை சம்பளம் பல ஆயிரங்கள்.

  கல்வி நிலையங்களிலும் இதே நிலைதான். அன்னிய நாட்டுக்காரனின் கடவுளான ஏசுவை வணங்கினால் சலுகை.. அரபு நாட்டுக்காரனின் மதமான அல்லாவை வணங்கினால் சலுகை. ஆனால் இந்த மண் சார்ந்த கடவுள் வழிபாட்டை வழிபடுபவர்களுக்கு பாரபட்சம்.

  சிறுபான்மை மதத்தினர்களுக்கு சலுகைகளோ ஏராளம். தொழில் கடன் குறைந்த வட்டியில் கடன் வேலை வாய்ப்பு அனைத்தும் என பல விதங்களிலும் சலுகைகள் வாரி இறைக்கப்படுகிறது.

  இந்தியாவிற்கு வெளியே இருக்கும் நமது நாட்டு எதிரிக்கு இவர்களின் முழு ஆதரவு.

  இந்து கோவில் வருமானம் முழுவதும் அரசுக்கு. ஆனால், இந்தியாவில் உள்ள சர்ச்சுகளின் வருமானம் அன்னிய வாடிகன் கட்டுப்பாட்டில். அதாவது இந்தியனின் உழைப்பில் உழைத்த பணம் வாடிகனுக்கு செல்கிறது.

  ஒரு நாட்டைப் பிடிக்க இப்போது போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கேனப்பய ஊருக்குள்ள கிறுக்கு பய நாட்டாமை என்ற பழமொழி நமது நாட்டு அரசியல் வாதிகளுக்கே பொருந்தும்.

  நமது நாட்டில் அந்நியனுக்கு கூட்டிக் கொடுக்கும் கோழைகளும் துரோகிகளும் மதசார்பற்ற அரசியல்வாதிகள் என்ற பெயரில் மலிந்து கிடக்கின்றனர். அவர்களின் துணையுடன் இது போன்ற சட்ட திருத்தங்களை உருவாக்கியுள்ளான் பிரிட்டீஸ் வெள்ளைக்கார கிறிஸ்துவன்.

  மதம் சார்ந்த இச்சலுகைகள் எல்லாம், நம் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. பல மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையாக இருந்தாலும் அவர்களுக்கு சிறுபான்மை சலுகை கிடையாது.

  ஒரு 18 வயது பெண் வெள்ளை சேலை அணிந்து அமங்கல விதவை கிறிஸ்துவ கோலத்தில் இருப்பது இந்திய கலாச்சாரமா? அதை இந்திய நாட்டில் அனுமதிக்கலாமா?.

  எனவே, அந்நிய மதமாற்றத்தால் இந்திய கலாச்சாரம் திட்டமிட்டே போலி மதசார்பற்ற அரசியல்வாதிகள் துணையுடன் சிதைக்கப்படுகிறது… என்பதை நாம் உணர வேண்டும்!

  இந்து கோவில் வருமானத்தை அரசு எடுப்பது போல் சர்ச் மசூதி வருமானத்தையும் அரசு எடுக்க வேண்டும். அல்லது இந்து கோயில்களையும் அரசின் பிடியில் இருந்து விடுவித்து இந்துக்களே நிர்வாகம் செய்ய வழி செய்ய வேண்டும்.

  இதற்கு பொது சிவில் சட்டம் நம் இந்தியாவிற்கு அவசியத் தேவை.

  1948 லேயே அன்னல் அம்பேத்கர் முன்மொழிந்த (UNIFORM CIVIL CODE) இந்தியர்கள் அனைவருக்கும் மதரீதியான பாகுபாடில்லாத பொதுவான சிவில் சட்டத்தை இந்தியர்கள் எல்லோருமே ஒரு மனதாக ஆதரிப்போம்.

  #தேவை_பொது_சிவில்_சட்டம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,565FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-