spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமதரீதியாக அணுகக் கூடாதுதான்! ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன?!

மதரீதியாக அணுகக் கூடாதுதான்! ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன?!

- Advertisement -

கொரோனா தொற்று குறித்தும், அதன் தீவிரம்குறித்தும் பல முறை தெளிவுபடுத்தியும், நேற்று தென்காசியில் மசூதி ஒன்றில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய காவல்துறையினரை கடுமையாக தாக்கியதோடு, தங்களின் செயலை நியாயப்படுத்தியும் வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு, குறிப்பாக தமிழகத்தில் பல மசூதிகளில் தங்கியிருந்தது மாநில அரசின் பல்வேறு ‘கெஞ்சல்களுக்கு’ பிறகு தெரிய வந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த மசூதிகளுக்கு சென்றவர்கள், அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் சென்ற இடத்தில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தும் மசூதிக்கு நூற்றுக்கணக்கானோர் சென்றிருப்பது, இவர்கள், சட்டம், சமூக ஒற்றுமை, மதநல்லிணக்கம் போன்றவற்றை விட மத நம்பிக்கைகளுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

தங்களுக்கு நோய் வந்தாலும் பரவாயில்லை, தங்களுடன் வாழும் மற்றவர்கள் அழிந்தாலும் கவலையில்லை, தங்களின் மத அடிப்படைவாதம் தான் முக்கியம் என்ற நிலையில் உள்ளார்கள் என்பதை, கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் உணர்த்துகின்றன.

கொரோனாவால் நிகழக்கூடிய கடும் விளைவுகளை அரசும், காவல்துறையும் பலமுறை கெஞ்சி கூத்தாடி சொல்லியும், விழிப்புணர்வை பலவகைகளில் ஏற்படுத்தியும் ‘யார் எப்படி போனாலும் தங்களின் மத சடங்குகள் தான் முக்கியம்’ என்ற எண்ணமே மத அடிப்படைவாதம்.

மதரீதியாக இதை அணுகக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், மதரீதியான தவறுகளுக்கு, குற்றங்களுக்கு, சட்ட மீறல்களுக்கு தீர்வு தான் என்ன? அ தி மு க, தி மு க, காங்கிரஸ் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் நிலைப்பாடும், செயல்பாடும் இந்த விவகாரத்தில் கடைபிடிப்பது குற்றமே.

மதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனால் அந்த மதத்தின் வாக்குகளை இழந்து விடுவோமா என்ற எண்ணத்தில் நடவடிக்கை எடுக்க, கண்டிக்க, தண்டிக்க அஞ்சுகிறார்கள்.

ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினருக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் மட்டுமே மிக பெரிய அழிவிலிருந்து சில பகுதிகளை காப்பாற்ற முடியும். இது ஒரு சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் மிக பெரிய கேடு என்பதை அரசியல் கட்சி தலைவர்கள் உணர வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் மக்களை கண்டிக்கிற தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் (?), முற்போக்கு என்ற அடைமொழி கொண்ட அறிவாளிகள்(?), மூத்த பத்திரிக்கையாளர்கள் என்ற அடையாளத்தோடு அரசை விமர்சிக்கும் சிலர், ‘தங்களின் உயிரை பற்றி கவலைப்படாமல், மற்றவர்களின் உயிரைப்பற்றியும் கவலைப்படாமல்’, அது குறித்து கேள்வி கேட்டால், வன்முறையில் இறங்குபவர்களை, ‘மதசார்பின்மை’ என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு ஆதரித்து, மதஅடிப்படைவாதத்திற்கு துணை போவது மிக பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை உணரவேண்டும். சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

வாக்குகளை விட மக்களின் வாழ்க்கை தான் முக்கியம் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் உணரவேண்டிய தருணமிது. உணர்வார்களா?

காலம் பதில் சொல்லும். காலன் பதில் சொல்ல கூடிய நிலைக்கு தள்ளி விடாதீர்கள். மதம் மனிதனை புனிதப்படுத்தும்.மத அடிப்படைவாதம் மனித இனத்தை அழிக்கும்.

  • நாராயணன் திருப்பதி (செய்தி தொடர்பாளர், பாஜக.,)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe