October 5, 2024, 8:28 PM
29.4 C
Chennai

மோடியின் வழியில் இலங்கையை சீர்திருத்த… ராஜபட்சவுக்கு அர்ஜுன் சம்பத் கடிதம்!

modi rajapakshe
modi rajapakshe

இலங்கையில் அண்மைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மஹிந்த ராஜபட்சவுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எழுதிய பகிரங்கக் கடிதம்…

காஷ்மீர் தீர்வு இலங்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு!

அண்மையில் இந்தியாவில் காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும், இலங்கையில் தமிழீழ விவகாரம் குறித்தும், மாநிலங்களுக்கு விசேஷ அதிகாரங்கள் கொடுக்கப்படுவதால் வரும் கேடுகளுக்கு எடுத்துக்காட்டு இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் உரிமைகள் பரிக்கப்பட்டது போலவும், இதே போல இலங்கையில் இந்து தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகான உரிமைகள் பரிக்கப்பட வேண்டும் என்றும் மோடி இதற்கு நல்வழி காட்டி இருக்கிறார் என நீங்கள் கூறியதாக கொழும்பு வீர கேசரி இதழில் படித்தேன்.

மத்திய அரசில் ஆட்சி அதிகாரங்களைக் குவிப்பதோ, மாநிலத்தின் ஆட்சி அதிகாரங்களைக் குறைப்பதோ பாரத பிரதமர் மோடியின் நோக்கம் அல்ல. அத்தகைய நோக்கத்தை மோடி கொண்டிருந்தார் என நீங்கள் கருதினால், நீங்கள் மோடியை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வடக்கே திருக்கயிலாயம் திபெத் நாட்டில்
தெற்கே கதிர்காமம் இலங்கையில்
மேற்கே காந்தாரம் ஆப்கானிஸ்தானில்
கிழக்கே ஐராவதி மியன்மாரில்
இவ்வாறு நீண்டு அகன்று விரிந்த பழம்பெரும் பாரதத்தின் பண்பாட்டுக்கூறுகள் பல கோடி ஆண்டுகள் பழமையானவை. இவற்றை மீட்டும், பிழைகளைத் திருத்தியும், பட்டறிவின் தளத்தில் உயர்ந்தவற்றைத் ஏற்றும், சிறந்தவற்றைப் பேணிச் செதுக்கிச் காப்பாற்றியும், நீண்ட நெடிய பாரம்பரியம் உடைய பாரத பண்பாட்டைப் பேணுவதே காஷ்மீரில் பிரதமர் எடுத்த நடவடிக்கையின் உயரிய நோக்கம்.

இலங்கையில் உள்ளவர்களுக்கும் இந்த உயரிய நோக்கத்தை எடுத்துக் காட்டியது பிரதமர் மோடியின் அளப்பரிய பங்களிப்பு ஆகும். பிரதமர் மோடியின் ஜனநாயக நடவடிக்கையால் காஷ்மீரில் அரசியல் ஆட்சி அதிகாரம் பெருகி உள்ளது. உண்மைக் காஷ்மீரிகள் தாம் இழந்த மண்ணை திரும்ப பெறுகிறார்கள். காஷ்மீரிகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தங்களுடைய பண்பாட்டையும், நிலபரப்பையும் மீட்டு நிலை நாட்டுவார்கள்.

கடந்த 1000 ஆண்டுகளாக முகமது கஜினியும், கோரியும், தைமூரும், பாபரும் நடத்திய ஆக்கிரமிப்பு வடுக்களை அகற்றுவதில் காஷ்மீர் மக்கள் வெற்றி காண்பார்கள். சுமேரியா முதல் இந்துகுஷ் மலை வரை படர்ந்து உலகையே அதிர்விக்கும் பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதலில் இருந்து மக்கள் விடுதலை பெறுவார்கள்.

இஸ்லாமிய ஜிகாதி சக்திகளால் துடைத்து எறிந்து, வழக்கிலிருந்து நீக்கிய காஷ்மீர மொழியை அதன் எழுத்துருவுடன் மீட்டு பெருமை மிக்க, புகழ் மிக்க வரலாற்று பயன்பாட்டிற்கு காஷ்மீர் மக்கள் கொண்டு வருவார்கள். காஷ்மீர் மண்ணின் மக்கள் ஒவ்வொருவரும் பூமியின் புத்திரன் ஒவ்வொருவரும் தனது ஆளுமையைத் தனது முன்னோர் வழியில் வளர்த்துப் பூத்துக் காய்த்துப் பழமாக்கி உலகம் பயன்பெற வளர்த்து எடுப்பார்.

திபெத்துக்குத் தெற்கே புத்தர்களின் மரபு வழி வாழ்விடம் இலடாக் பகுதிய ஆகும். ஆங்கிலேயர் விட்டுச் சென்ற நாள் முதல் மக்மோகன் எல்லைக் கோட்டைச் சார்ந்த இலடாக் நிலப் பகுதியையும் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி இலடாக் மக்கள் குரல் கொடுத்து வந்துள்ளார்கள். ஆனால் யாரும் செவி சாய்க்கவில்லை.

அன்னிய மொழி அன்னிய வாழ்வுமுறை அன்னிய மதம் என்பன அண்மைக் காலங்களில் புகுந்து அவர்களின் மரபுகளை வாழ்வியல் முறைகளைப் பாழாக்கி வருவதைப் பலமுறை தில்லியிடம் கூறித் தமக்கு தனியான நிலப்பகுதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

காலம் கனிந்தது. மோடியும், அமித்ஷா அவர்களும் லடாக் மக்களுக்கு அவர்களின் கோரிக்கையான யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கி பாதுகாப்பு கொடுத்துள்ளனர். ரிஷி கஷ்யப முனிவரின் பூமி காஷ்மீர் சைவத்தின் வாழ்விடம். காஷ்மீரின் வீர சைவ மரபுகள் உலக புகழ் பெற்றது.

ஸ்ரீநகர் தால் ஏரியின் அருகே ஆதி சங்கரர் தவம் செய்த மலை குகைக் கோயில் உள்ளது. அந்த மலையின் பெயரையே சுலைமான் மலை என மாற்றிவிட்டார்கள். தமிழ் முனி இராமானுஜர் காஷ்மீரில் உள்ள சாரதா பீடம் சென்று தொல் சுவடிகளைக் கற்றுத் தேர்ந்து சரஸ்வதியின் அருளை பெற்றார். அவர் சென்ற சாரதா பீடமும், சரஸ்வதி கோயிலும், சிவன் கோயில்களும், சில புத்த விகாரைகளும் இன்றைய பாகிஸ்தானின் பிடியில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரத்தில் அழிக்கப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். அவற்றை மீட்டகவே பிரதமர் மோடி இலக்கு வைத்துள்ளார்.

உங்களின் முன்னோர், நீங்கள் அண்மையில் ஏவிய செயற்கை கோளின் பெயரைத் தாங்கிய பெருமகன், சிவ பக்தன் இராவணன், தனது ராஜ்ஜிய லட்சுமியின் கோயிலை காஷ்மீரத்தில் அமைத்துள்ளார். அந்தக் கோயிலின் மீது பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இராவணன் காஷ்மீரில் கட்டிய கோயிலை பாதுகாக்க வேண்டாமா?

மகாவமிசம் கூறிய முதலாவது இலங்கை மன்னன் நாகநாட்டு மகோதரன். பின்னர் கலிங்க விஜயன், கஜபாகு, மானவர்மன், செகராஜசேகரன், விஜயபாகு, பராக்கிரம பாகு, சங்கிலி எனத் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசர், கடைசிக் கண்டியரசன் இராஜசிங்கன் வரை எந்த இந்துக் கோயிலையாவது இடித்து இருக்கிறார்களா?

மாறாக ஒவ்வொரு மன்னரும் இடையில் வந்த மன்னர்களும் இலங்கையில் உள்ள இந்து கோயில்களுக்கு நிவந்தங்கள், மானியங்கள் கொடுத்துப் பூசைகளைப் பேணி வளர்த்திருக்கிறார்கள். கோயில்களை யாரும் இடிக்கவில்லை.

இலங்கையின் தென் பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்டதும் இராவணன், நரசிம்ம பல்லவன், பராக்கிரமபாகு போன்றோர் பேணியதுமான தென்னாவரம் சிவன் கோயிலை இடித்து உலூசியா சர்ச்சை கட்டியவன் போர்த்துக்கேயர் தளபதி தோமையன்.

இராவணன் முதல் கயிலாய வன்னியன் வரை பூசித்த திருக்கேதீச்சரம், திருக்கோணச்சரம் இரண்டையும் அழித்தவன் போர்த்துக்கேயத் தளபதி கொன்ஸ்டாண்டினாசா. அண்மையில் கிழக்கில் காளி கோவிலை இடித்து மசூதி கட்டியவர் அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லா.

கிருஸ்தவ மதத்தின் போர்வையில் ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்களாகப் பாரத கண்டத்தின் பராம்பரியத்தை அழிக்க முயன்றவர் இவர்கள்.

எனவே இந்திய பிரதமர் மோடியின் இலக்குத் தோமையர்களும், கொண்ஸ்டாண்டினாசாக்களும், ஹிஸ்புல்லாக்களும் அன்றி வேறல்ல.

அகண்ட பரத கண்டத்தில் பிரதமர் மோடியின் ஆட்சி அந்தப் புனித மரபைப் பேணும் ஆட்சி. கத்தியின்றி யுத்தமின்றி காஷ்மீரத்தில் அரசியலமைப்பு விதி மாற்றம் மூலம் அமைதியான அன்பளிப்பைக் காஷ்மீர மக்களுக்கு கொடுத்தவர் பிரதமர் மோடி. மேலை நாட்டு ஆட்சி அளவுகோல்களும் அரசியல் அளவுகோல்களும் கொண்டு பிரதமர் மோடியின் செயல்களை மதிப்பிடாதீர்கள்.

காஷ்மீரத்தில் இந்த நடவடிக்கைக்காக அவர் சிறு வயதில் இருந்தே மக்களிடம் பிரசாரம் செய்து இருக்கிறார், போராட்டங்கள் நடத்தி இருக்கிறார், அவர் நடத்திய அறப்போராட்டத்தின் விளைவாக அவரே ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்.

தங்கத் தாம்பாளத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியின் அணுகு முறைகளை உங்களுக்கு பரிசாகத் தருகிறேன். பரத கண்டத்தின் பண்பாடுகளை மீட்டெடுக்க உங்களுக்கும் அரிய வாய்ப்பு.

லடாக்கில் புத்த சமயத்தவருக்கு பாதுகாப்பாக தனி நிலப் பகுதியை உரித்தாக்கியமை வரலாற்று நிகழ்வு. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் தமக்கான நிலப் பகுதியில் இந்து சமயத்தைப் பேணி வந்திருக்கிறார்கள்.

2570 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூச நாளில் முருகனுக்கு விழா. அந்நாள், புத்தர் மாணிக்கக் கங்கை ஆற்றோரம் வந்தார். பின்னர் யாழ்ப்பாணம் வந்தார் அதை அடுத்து களனிக்கு சென்றார்.

அகண்ட பாரதத்தின் சிந்தனையூற்றுச் செம்மல் புத்தர். இலங்கையின் சைவ சமயத்தவர் அவரை ஏற்றனர். பலர் அவருடைய கொள்கைகளை கொண்டனர். நீங்கள் அத்தகையோரின் வழி வந்தவர்களே. அண்மையில் யாழ்ப்பாண நாக விஹாரையின் வணக்கத்துக்குரிய புத்தபிக்கு அவர்கள் இந்தச் செய்தியை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

இந்துக்களின் வாழ்விடங்களில் அடாத்தக அட்டூழியத்தில் ஈடுபடும் புத்த பிக்குகள் புத்தர்களே அல்லர் எனபது இத்தகைய மூத்த அறிவார்ந்த புத்தர்களின் நோக்கு. இலங்கையில் இரு நிலப்பகுதிகள். ஆதி குடிகளான இந்துப் பெரும்பான்மை நிலப்பகுதி ஒன்று. பின்வந்த புத்தர் சார்ந்த பெரும்பான்மையினரின் நிலப்பகுதி மற்றது. வேறு எவருக்கும் இலங்கையில் நில உரிமை கிடையாது.

இந்துப் பெரும்பான்மை நிலப்பகுதி ஒன்று, புத்தர் பெரும்பான்மை நிலப்பகுதி மற்றது என இலங்கையில் இரண்டு நிலப் பகுதியை அமையுங்கள். தர்ம நிலமும் தம்ம நிலமும் சத்+சித்+ஆனந்தமாய் நிர்வாணம் நோக்கிய தேசமாகும். பிரதமர் மோடி காட்டிய வழி அதுவே.

அகண்ட பாரதத்தின் பழம்பெரும் பண்பாடுகளைப் பேணுவதற்கு இத்தகை ஆட்சி முறையே சிறந்த வழி என்பதைப் பிரதமர் மோடி உங்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார். அவர் வழியைப் பின்பற்றி இலங்கையைச் செழிப்பும் செல்வமும் அன்பும் அறமும் அருளும் நிறைந்த நாடாக மாற்றுங்கள்.

நன்றி!

அர்ஜுன் சம்பத்,
தலைவர் இந்து மக்கள் கட்சி. இந்தியா.

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை சிறப்பு...

பஞ்சாங்கம் அக்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.05ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...

டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்

பஞ்சாங்கம் அக்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை சிறப்பு...

பஞ்சாங்கம் அக்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.05ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...

டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்

பஞ்சாங்கம் அக்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

இந்த ரயிலை நிரந்தரமாக சாதாரண முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத சாதாரண ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க தமிழக கேரள ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

ஸ்ரீவி., வடபத்ரசாயி பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலின் பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாணவர்களுக்கான ‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’; மதுரை ஆட்சியர் அழைப்பு!

1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.

Related Articles

Popular Categories