January 19, 2025, 4:23 PM
28.5 C
Chennai

திருப்பமாவது… ஒண்ணாவது…!?

என் நம்பிக்கையை சிதைத்த நாயகர் இவர். அதற்காக இவருக்கு ஒரு தூற்றி!
அட இவருக்குத்தான் என்னவெல்லாம் தலைப்பு கொடுத்து கட்டுரைஎழுத வேண்டியிருக்கிறது? திருப்பம் தரும் திருப்பட்டூர் (‘தினாவுக்குதினா !?) தலையெழுத்தைமாற்றி அருளும் பிரம்மா!….. இப்படிசில பல கவர்ச்சிகர தலைப்புகொடுத்து எழுதி…!!??
சென்ற வருடம் மார்ச் 14ல்இவரைப் போய் தரிசித்து மனக்குறைகொட்டி வந்தேன். கற் பிம்பமாய் சலனமற்றுஇருந்த இந்த பிரம்மா, அதேமஞ்சள் பொடி பூசி, ஆழ்ந்தமயக்கத்தில் கிடந்தார் போலும்!
தெய்வம்என்று உயரத்தில் வைத்திருக்கும் அவர் ஏமாற்றினாலும், மனிதநிலையில் இருக்கும் நானோ எந்த மாற்றமுமின்றிஇவரைப் பற்றி போற்றி எழுதினேன்
படிக்க….

நாளைக்குகுரு பெயர்ச்சியாம். இவுஹளுக்கு பெசல் பூசையெல்லாம் செய்யிதாவளாம்…! செய்தி வேற போட்டிருக்கு!

ஜூன் 13-ல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி

பெரம்பலூர்பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழாவெள்ளிக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.
குரு பகவான் மிதுன ராசியிலிருந்துகடக ராசிக்கு ஜூன் 13-ம் தேதிமாலை 5.57 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டுமேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள கோயிலில்சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
—————————
அதாகப்பட்டதுகுருபகவானுக்கு இவுஹ அதிதேவதையாம்! ஆவையினாலேகுருவுக்கு செய்யிற பூசையை எல்லாம்இவுஹளுக்குச் செய்யலாமாம்!
இப்டி ஒரு சங்கதியை அந்தக்காலத்துல சோசியக்காரப் பயலுவஏற்படுத்தி வெச்சிட்டானுவ!
அந்தக்காலத்துல எல்லாம் எல்லா எடத்துலயும்நவகிரக சந்நிதி இருக்க வாய்ப்பிருந்துருக்காதுல்லா…! அதான்எதுனா பரிகாரம்னு எவனாச்சும்போய் நின்னா.. இந்த சோசியக் காரனுவஎலேய் அங்கிட்டு இந்த சிவங்கோயில் இருக்குல்லாஅங்கன போய் தச்சினாமூத்திக்கு அர்ச்சனயசெஞ்சிட்டு வாஎல்லாம் சரியாப்போயிடும்னுசொல்லி வெச்சிருப்பானுங்க
ஏன்னாகுருபகவானுக்கு அதிதேவதை, பிரத்யதிதேவதைன்னு தட்சிணாமூர்த்தியையும் (தென்முகக் கடவுள்) அதான்இந்தபிரம்மாவையும் ஆக்கி வெச்சிருக்காங்க..
இந்த ஆளுக்குஅதான் இந்த பிரம்மாவுக்குமத்தவன் தலை எழுத்தை எழுதறதேவேலையாம்! ஆனாஇந்த கோயில்பிரம்மாவுக்கு தலை எழுத்தை மாத்தினதேநம்ம மாதிரி பேனா புடிச்சவன்எழுத்துதானோன்னு தோணுது!
ஆனாசாதாரண மக்கள் இவ்ளோ தூரம்இவுரு மேல நம்பிக்கை வெச்சிகும்பிடப் போனா  கல்லுமாதிரி அப்டியே இருக்குறாரே ஒழிய.. செயல் ஒண்ணுத்தையும் காணோம்! ஒரு வேளைநாம நம்பிக்கை வெச்சதுதான் தப்போ?
அப்டித்தான்தோணுது!
ஒரு கதைசின்ன வயசில்கேட்டது….
ஒரு குரு. நன்றாக கதைபிரவசனம் செய்வார். ஒருநாள் அவருக்கு உடல்நலக் குறை. அவரால் எழுதிருக்கமுடியவில்லை. ஆனால், கதை சொல்லப்போயாகணும்
வேறு வழியில்லை. அப்போ ஒரு சீடன்ஆர்வமா வந்தான். குருவே இன்னிக்கு நான்போய் கதை சொல்றேன்னு!
சரின்னார்குரு.
அன்னிக்குசொல்ல வேண்டிய கதையை பிரமாதமாஇருந்து உருப் போட்டு, சொல்லிப்பாத்தான். எத்தனை பேர் கேட்பார்கள். எத்தனை பேர் நம்மை புகழ்வார்கள். ஆஹா.. பேஷ் பேஷ் எல்லாம்காதுல கேட்கும்….
இப்டி ஒரு கற்பனையில கதைநடக்கற கோயில் சந்நிதிக்கு போனான். அதிர்ச்சியும் பயமுமா கதை சொல்லிமுடிச்சான்..  ஆச்ரமம்திரும்பினான்.
குரு கேட்டார்என்ன? கதை சொன்னதுக்குவரவேற்பு எப்டி?ன்னார்.
நல்லாருந்தது. ஆனா கேட்டவாள்லாம் பிரம்மாவின்பாட்டிகளாச்சே!ன்னு குமுறிட்டு உள்ளேஓடிட்டானாம்.
விவரம்புரிஞ்ச குரு சிரிச்சிட்டே, பயஇன்னும் பக்குவப் படணும்னு யோசிச்சிட்டிருந்தாராம்.
அதென்னாபிரம்மாவின் பாட்டிகள்!
பிரம்மாவுக்குஅப்பா விஷ்ணு. அதாவதுசயனத்தில்இருந்த விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்துபிரம்மா தோன்றினாராம். அந்த விஷ்ணு ஒருவாட்டிநரசிம்ம அவதாரம் எடுக்கயிலதூணைப்பிளந்து தோன்றினாராம். ஆகையினாலேபிரம்மாவுக்கு பாட்டியானது அந்தத் தூணாம்.
இந்த சீடப் புள்ளையாண்டான் சொன்னகதையை அந்த சந்நிதில இருந்ததூண்கள்லாந்தான் கேட்டுதாம்ரொம்ப சமத்காரத்துடனே சீடன்சொன்னான். குரு கேட்டு சிரிச்சார்ன்னுஒரு கதையை அவுத்து விடுவாங்க! 
இப்படியாகபாட்டி குணம் பேரனுக்கும் வரும்னுஒரு சொலவடை நம்மூர் பக்கங்கள்லஇருக்கறதாலேஅந்த தூணுக்கு உள்ளகுணமும் இந்த பிரம்மாவுக்கு வந்துட்டுதோன்னுசந்தேகமா இருக்கறதாலே….
யாருக்கும்நான் ரெக்கமெண்ட் செய்வதாக இல்லே! தலையெழுத்தை மாத்திதிருப்பம் தந்துவிருப்பம் நிறைவேத்திஅப்டி இப்டில்லாம் மாய்மாலவார்த்தை ஜாலத்தையெல்லாம் இட்டு நிரப்பவும் தயாராயில்லே!
அவர் மீது நான் வைத்தநம்பிக்கையைக் காப்பாத முடியாத ஒரேகாரணத்தாலேயேஅதுவும்அட.. இந்தப் பையன்நம்மள பத்தி என்னவெல்லாம் புகழ்ந்துஎழுதியிருக்கான்எப்டில்லாம் பாராட்டி போற்றியிருக்கான்.. ஆனா, நாம அவன்வேண்டுதலை நிறைவேத்த முடியலியேங்கிற இயலாமை உணர்ச்சியில் கழுத்தில்கிடக்கிற பூமாலையையே சுருக்கு போட்டுக் கொண்டு இவுஹ தொங்கிவிடலாம்!
ஏற்கெனவேபூலோகத்திலே உனக்கு கோயிலே இருக்கப்படாது; வழிபாடுல்லாம் இருக்கப்படாதுன்னு துர்வாச சாபமும், சிவபெருமான்சாபமும் சேர்ந்து தொரத்தறதுனாலே…. அதையும் மீறி ஏதோஓரிரண்டு இடங்கள்லே இப்டி தனியா உக்காந்துதியானம் தவம்னு இந்த பிரம்மாசந்நிதி கொண்டிருக்கறதாலேஅந்த சாபங்களையும் மீறிநம்ம சாப விமோசனத்துக்கு இந்தபிரம்மா கிட்டே நாம போய்முறையிடறதனாலே…. அடஒண்ணும் செய்யாமதேமேன்னு ரெண்டு கையையும் இறுக்கக்கட்டிட்டிருக்காரோன்னு தோணுது!
(பின் குறிப்பு:
*1: நம்மமதத்துலதான் இப்டில்லாம் போற்றியோ தூற்றியோ சாற்றியோ பாடலும் வசனங்களும் கதைகளும்எழுத அனுமதி உண்டு. எத்தனையோபெரியவர்கள் இதைச் செய்து காட்டிமுன்னோடியாயிருக்கிறார்கள். நம்ம மனநிலைக்கு ஏத்தபடி சாமியைப் பேசுறதுக்குஉரிமையிருக்கற ஒரே காரணத்தாலேயே…. அந்தஒன்றுக்காகவே…. அடஅதுக்காகவே நான்ஒரு ஹிந்துவாக இருப்பதில் பெருமைப் படுகிறேன். என்ன ஒரு சுதந்திரம்! என்ன ஒரு சனநாயகம்!
*2: இதற்காகத்தான்வைணவப் பெரியோர்கள், ஆலயங்களை பரிகாரக் கேந்திரங்களாக முன்னிறுத்தவில்லை. பக்தியை பேரம் பேசும்வியாபாரம் ஆக்கவில்லை!)