கடந்த சில வருடங்களாக பொங்கல் என்பது ஒரு இறைவழிபாடற்ற ஒரு தமிழர் சடங்கு என்பதாக ஒரு கூட்டம் சொல்லி வருகிறது ..

இது உண்மையா என்பதை காண “அபிதான சிந்தாமணி ” என்கிற 19 நூற்றாண்டில் வெளிவந்த ஒரு நூலில் கூறப்பட்ட செய்திகளையும் பார்ப்போம்.

தமிழர்கள் நெடும்காலமாக இந்திரனையே வழிபாட்டு வந்தனர் ..

சிலபத்திகாரம் மற்றும் மணிமேகலை .. பூம்புகாரில் இந்திரனை போற்றி நடை பெற்ற “இந்திரவிழாவை ” பற்றி விரிவாக பேசுகிறது ..

மணிமேகலை ….

“அகத்திய முனிவர் கட்டளைப்படி … “தூங்கெயிலேறிந்த தொடித்தோட் செம்பியன் ” என்பவனால் தொடங்கப்பட்டு காவேரி பூம்பட்டினத்தில் சோழ பரம்பரையினரால் நடத்தப்படுவது ..

இதனை நெடுமுடிக்கிள்ளி என்போன் நிருத்தியாதால் .. பூம்பட்டினம் கடல் கொண்டது … ”

சிலபதிகாரத்தில் … கோவலனும் கண்ணகியும் கலந்து கொண்ட இந்திர விழா பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன ..

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

வேத காலம் முதல் இந்திரன் வருணன் அக்னி முதலான தேவர்களை வணங்கி …லோகயுதமான .. உலக சுகங்களை பெற்று வந்த மக்களை திருத்த ..

கிருஷ்ணா பகவான் ..எல்லா பூசைகளும் நாராயணன் ஆகிய தனக்கே என்று கூற …

இந்திரன் வெகுண்டு … அதிகப்படியான மழை பொழிவிக்க .. பகவான் கோவர்த்தன மலையை தாங்கி அனைவரையும் காத்தார் ..

இந்த பண்டிகை .. மூன்று நாட்கள் நடைபெறும் ..

போகி … இது நமது இந்திரியங்கள் (sensory organs ) கடவுளான இந்திரன் வழிபடும் நாளாக … செய்து பின்னர் மறுநாள் மகர சங்கரண … மகர ராசியில் நுழைகின்ற சூரிய நாராயண வழிபாடும் நாளாக கொண்டாட கிருஷ்ணர் ஆணையிட்டார் .. (இதை முன்னமே பதிவிட்டு இருந்தென் … என்னால் ரெண்டு நாளாக தேடியும் 18000 பக்க மகாபாரதத்தில் நான் படித்த அந்த பக்கத்தை பிடிக்க முடியவில்லை )

பொங்கலுக்கு மறுநாள் … வெள்ளத்தில் … இந்திரன் பெய்வித்த மழையால் துன்பப்பட்ட மக்களையும் அவர்களின் பசு மாடுகளையும் உணவிட்டு ஆரத்தித்து , கிருஷ்ணர் சென்று பார்த்த நாளை காணும் பொங்கல் என்று கொண்டாடி மகிழ்ந்தனர் …

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இந்த நாள் கிருஷ்ணன் காட்டிய திருநாள் …

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending