spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்பாரதி-100: கண்ணன் பாட்டு (8)

பாரதி-100: கண்ணன் பாட்டு (8)

- Advertisement -
subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 8, கண்ணன் – என் தந்தை

     இந்தப் பாடலும் நொண்டிச் சிந்து பாணியில் அமைந்துள்ளது. இதன் பிரதான ரஸம் அற்புதம் என பாரதியார் குறிப்பிடுகிறார். முதலில் பாடலைக் காண்போம்.

பூமிக் கெனைய னுப்பி னான்; – அந்தப்

பதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;

நேமித்த நெறிப்படி யே – இந்த

நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே

போமித் தரைகளி லெல்லாம் – மனம்

போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்.

சாமி இவற்றினுக் கெல்லாம் – எங்கள்

தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். 1

செவ்வத்திற்கோர் குறைவில்லை; – எந்தை

சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;

கல்வியில் மிகச் சிறந்தோன் – அவன்

கவிதையின் இனிமையோர் கணக்கி லில்லை;

பல்வகை மாண்பி னிடையே – கொஞ்சம்

பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;

நல்வழி செல்லு பவரை – மனம்

நையும்வரை சோதனை செய் நடத்தை யுண்டு. 2

subramanya bharathi
subramanya bharathi

நாவு துணிகுவ தில்லை – உண்மை

நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;

யாவருந் தெரிந்திட வே – எங்கள்

ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;

மூவகைப் பெயர் புனைந்தே – அவன்

முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;

தேவர் குலத்தவன் என்றே – அவன்

செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். 3

பிறந்தது மறக் குலத்தில் – அவன்

பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;

சிறந்தது பார்ப்பன ருள்ளே; – சில

செட்டிமக்க ளொடுமிகப் பழக்க முண்டு;

நிறந்தனிற் கருமை கொண்டான்; – அவன்

நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!

துறந்த நடைக ளுடையான் – உங்கள்

சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். 4

ஏழைகளைத் தோழமை கொள்வான்; – செல்வம்

ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;

தாழவருந் துன்ப மதிலும் – நெஞ்சத்

தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்;

நாழிகைக்கொர் புத்தி யுடையான்; – ஒரு

நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.

பாழிடத்தை நாடி யிருப்பான்; – பல

பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். 5

இன்பத்தை இனிதென வும் – துன்பம்

இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;

அன்பு மிகவு முடையான்; – தெளிந்

தறிவினில் உயிர்க்குலம் எற்ற முறவே,

வன்புகள் பல புரிவான்; – ஒரு

மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;

முன்பு விதித்த தனையே – பின்பு

முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். 6

வேதங்கள் கோத்து வைத்தான் -அந்த

வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;

வேதங்க ளென்று புவியோர்- சொல்லும்

வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;

வேதங்க ளென்றவற் றுள்ளே – அவன்

வேதத்திற் சிலசில கலந்ததுண்டு

வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்த

மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 7

நாலு குலங்கள் அமைத்தான்; – அதை

நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,

சீலம் அறிவு கருமம் – இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;

மேலவர் கீழவரென்றே – வெறும்

வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்

போலிச் சுவடியை யெல்லாம் – இன்று

பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 8

வயது முதிர்ந்து விடினும் – எந்தை

வாலிபக் களையென்றும் மாறுவதில்லை

துயரில்லை; மூப்பு மில்லை – என்றும்

சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;

பயமில்லை, பரிவொன்றில்லை, – எவர்

பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை

நயமிகத் தெரிந்தவன் காண்; – தனி

நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்பான். 9

துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத்

தூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்;

அன்பினைக் கைக் கொள் என்பான்; – துன்பம்

அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்

என்புடை பட்ட பொழுதும் – நெஞ்சில்

ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான;

இன்பத்தை எண்ணு பவர்க்கே – என்றும்

இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,893FollowersFollow
17,300SubscribersSubscribe