December 6, 2025, 7:08 PM
26.8 C
Chennai

வேற்று மத ஆட்சியால் படும் பாடு!

aurangazeb - 2025

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

ஹிந்துக்களைத் தவிர பிறரிடம் தெளிவாக, வெளிப்படையாகத் தெரியும் குணங்கள்…

  1. மக்கள் அனைவரையும் தம் மதத்திற்கு மாற்றவேண்டும்.
  2. தேசத்தை தம் மத நாடாக மாற்ற வேண்டும்.
  3. ஹிந்து அடையாளங்களை முழுவதும் அழித்து விட வேண்டும்.
  4. அதற்காக ஹிந்து மதச் சின்னகளையும், பழக்க வழக்கங்களையும், நூல்களையும் பழித்து தூற்ற வேண்டும்.

பிற மதங்களில் சிலர் தாராள மனம் உள்ளவர்களும் இருக்கலாம். ஆனால் அவர்கள் தம் மதத்தில் உள்ள சகிப்புத்தன்னைமையற்ற வழிமுறைகளையும் அடிப்படைவாதத்தையும் துளியும் விமரிசிக்க மாட்டர்கள். ‘இது தவறு… செய்யாதே!’ என்று கண்டிக்க மாட்டார்கள். இதன் காரணமாகவே ஒட்டு வங்கி அரசியல் கொழிக்கிறது. இந்த தலைவர்களுக்கும் அந்த மத அரசியல் வாதிகளுக்கும் நாட்டு முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, நாட்டு நலன், நாட்டின் பாதுகாப்பு, நாட்டு வளம்… போன்றவை குறித்த கவலை கிடையாது. பதவிகளை பாதுகாத்துக் கொள்வது, நிரந்தரமாக ஆட்சியில் இருப்பது… இவை மட்டுமே அவர்களின் லடசியங்கள்.

உண்மைகளைப் புறக்கணித்து, அவர்களின் வாதங்களுக்கு ஆதரவாகவே அதிக சதவிகிதம் மீடியா வர்க்கம் கட்டுப்பட்டு இருப்பது மற்றுமொரு விசித்திரம்.

அப்படிப்படட் சூழ்நிலைகளை கவனித்து சமூக வலைத்தளங்கள் மூலம் உண்மைகளை அறிந்து கொண்டு இப்போதுதான் ஆங்காங்கு ஹிந்து தற்காப்புக் குரல்கள் காதில் விழுகின்றன. ஆனால் ஹிந்து மதத்தில் மட்டுமே தென்படும் ஹேது வாதிகளும் நாஸ்திக வாதிகளும் பதவி மோகம் கொண்ட ஹிந்துக்களும் இந்த குரல்களை கேட்கமாட்டார்கள். கேட்க விடவும் மாட்டார்கள்.

இந்தியாவில் தோன்றிய நம் புராதன தர்மம் அநாதையைப் போல் அநியாயமாக இகழப்பட்டும், எதுவும் தெரியாத உறக்கம் நம்மவர்களை இன்னும் விட்டபாடில்லை.

ஓரங்கசீப் போன்ற கொடூரமான முரடர்களின் அரசாட்சியில் எந்த நிலைமை இருந்ததோ அதே நிலைமை தசாப்தங்களாக நீடித்தாலும் யாரும் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. நம் கோவில்கள் மீது மட்டுமே நாட்டாண்மை செலுத்தி, கோவில்களின் வருமானத்தில் அதிக சகதவிகிதம் கட்டாயம் அரசாங்கத்தின் கணக்கில் சேர்க்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் தலைவர்களின் முயற்சி வெற்றிபெற்று வருகிறது.

ஒவ்வொரு கோவிலின் வருமானமும் சிறிது பாகம் கூட கோவிலுக்கும், தர்மத்திற்கும் செலவழிக்காமல் அரசாங்கக் கணக்கில் போடப்படுகிறது.

இது ஹிந்துக்கள் தம் மதத்தைக் கடைபிடிப்பதற்காக கட்டும் வரியன்றி வேறென்ன?

கோவில்களில் சொத்தின் விவரங்கள் வெளிப்படையாக இல்லை. அவை பிறர் கைகளில் சிக்கி, அக்கிரமமாக கொள்ளையடிக்கப்பட்டு, அரசியல் வாதிகளின் வீடுகளிலும் ஆஸ்திகளிலும் சேரும் செய்திகள் வந்தபோதிலும் கேள்வி கேட்கும் நாதியே இல்லை. பரபரப்புச் செய்தி வெளியிடும் ஊடகமும் இல்லை.

புரிதல் இல்லாத குடிமக்களை கையில் போட்டுக் கொள்வதற்கு குங்குமப் பொட்டு, அங்கவஸ்திரம் சகிதம் பண்டிகைகளின் போது வாழ்த்து தெரிவித்து, “நாங்களும் உங்களவர்களே!” என்று ஹிந்துக்களை பிரமிப்படையச் செய்துவிட்டு, பிற மதங்களை ஆதரிக்கும் தலைவர்களின் நடிப்பு பகிரங்க ரகசியமே!

பிறமத விசுவாச நிலையங்களின் செல்வங்கள் அவர்களின் மதப் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் பரப்புதலுக்கும் மட்டுமே செலவு செய்யப்படுகின்றன. அதில் அரசாங்கம் ஒரு பைசா கூடத் தொடாது. அதோடு அந்த மதத்தவருக்கு பரிசுகள், நிதிகள், மத நிலையங்களை கட்டுவதற்கு முதலீடுகள் போன்றவை பெருமளவில் அரசாங்க சொத்திலிருந்து ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் ஹிந்து கோவில்களின் வருமானம் கொள்ளையடிக்கப்பட்டு பிற மதத்தவருக்கு தாரை வார்க்கப்படுகிறது. கோயில் வருமானம் அரசாங்கச் செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பிற மதத்தவரின் பண்டிகைகளில் தள்ளுபடிகள், பரிசுகள் அரசாங்கம் அறிவிப்பது சகஜமாகி விட்டது. ஆனால் தீபாவளி போன்ற நம் பண்டிகைகளிலும் அவர்களுக்கு காணிக்கைகள் அளிப்பதுதான் விசித்திரமாக இருக்கிறது.

மறுபுறம் சங்கராந்தி, சிவராத்திரி, வேறு ஏதாவது பண்டிகைக்கு ஊருக்குச் செல்லும் ஹிந்துக்களுக்கும் யாத்ரீகர்களுக்கும் அதிகப்படி போக்குவரத்து கட்டண விலை உயர்வு வசூலிக்கப்படுகிறது. பல மாநில அரசாங்கங்களும் இந்த முறையையே கடைப்பிடிக்கின்றன.

ஒரு மாநிலத்தில் அதே வேலையாக ஏதேதோ காரணங்களைச் சொல்லி கோவில்களை துவம்சம் செய்து வருகிறார்கள். மற்றொரு மாநிலத்தில் சாமானியர்களுக்கு கடவுள் தரிசனம் செய்வதில் கடினமான தொல்லைகளை ஏற்படுத்துகிறார்கள். விஐபி.களுக்கு வரவேற்பு அளிக்கும் கொண்டாட்டத்தில் மூழ்கி, பக்தர்களை அலட்சியப்படுத்தும் செயல் முறையே காணக்கிடைக்கிறது.

ஹிந்துக்களுக்கு தங்கள் கோவில்களுக்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தைக் கெடுத்து பங்கம் செய்வதற்கு இது ஒரு தந்திரம். யாராவது கேள்விகேட்டால் தவறான குற்றச்சாட்டு சுமத்தி தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள்.

என்றுமே ஒற்றுமை குணமோ, தம் மதத்தின் மீது சுயமரியாதையோ, சிரத்தையோ இல்லாத இனம் ஹிந்து இனம் என்ற விஷயம் இந்த அரசியல்வாதிகளுக்கு நன்றாகத் தெரியும்.

இத்தகைய அருவருப்பான போக்கு ஹிந்து மதத்திற்கு மட்டுமல்ல … தேச முன்னேற்றத்திற்கே ஆபத்து. மீண்டும் தேர்தலுக்காக களத்தில் இறங்கப் போகும் பதவி மோகம் பிடித்த அரசியல் வாதிகள் இன்னும் என்னென்ன விபரீத வஞ்சனைகள் செய்யப்போகிறார்களோ!
அவற்றை அடையாளம் கண்டு தேசத்தையும் தர்மத்தையும் காப்பாற்றிக் கொள்ளும் வழியில் தேசபக்தர்களும் தார்மிகர்களும் விழிப்படைய வேண்டுமென்று விரும்புவோம்!


(Source- தலையங்கம் – ருஷிபீடம் மாத இதழ் பிப்ரவரி, 2022)


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories