spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ராம ராஜ்யம்!

ராம ராஜ்யம்!

- Advertisement -
ayodhya ram
#image_title

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

(ருஷிபீடம் மாத இதழ் தலையங்கம், பிப்ரவரி, 2024)

ஜய் ஸ்ரீராம்

யுகங்களுக்கு முன் விளங்கிய முதல் தலைநகரம், வைவஸ்வத மன்வந்தரத்தின் தொடக்கத்தில் உருவான மகாநகரம், காலையில் எழுந்தவுடன் நினைக்கவேண்டிய சக்கிரவர்த்திகள் அரசாண்ட தெய்வீக நகரம், மோட்ச பட்டணங்களில் முதன்மையாக  குறிப்பிடப்படும் தீர்த்தமும் க்ஷேத்திரமும் கொண்ட இடம்,  ஸ்ரீமந்நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்து பல காலம் அரசாண்ட பாரத சாம்ராஜ்ஜியத்தின் ஆதார மையம் – அயோத்தி.

நாம் இழந்த ராமஜென்மபூமி ஆலயத்தை பல கால போராட்டங்கள், கவலைகள், வருத்தங்கள், இயக்கங்கள் முயற்சிகள், சிரமங்களுக்குப் பின் இன்று கட்ட முடிந்திருக்கிறது. மாபெரும் மகா உறச்சவமாக முன் எப்போதும் பார்த்தோ கேட்டோ இல்லாத விதமாக தேசம் முழுவதும் ஸ்ரீராமமயமாக உலகம் முழுதும் ஆனந்தமாக நினைக்கும் தருணம் இது. (ஆலய பிராண பிரதிஷ்டை தினத்திற்கு முன்பாத எழுதப்பட்டது இந்த கட்டுரை) 

இதன் முக்கியத்துவம், வரலாறு, அவசியம் ஆகியவற்றைப் மறந்து  அமானுஷ்யமான  சுயநல அரசியல் அவதூறுகளை எழுப்பும் கரதூஷணர்கள் இந்தச் சந்தர்ப்பத்திலும் தோன்றுவது வியப்பளிக்கிறது.

இந்த தெய்வீக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்த அனைத்து அரசியல்வாதிகளும், நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல,  நாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று பசப்பு வார்த்தை கூறிவருவது முரண். அவர்கள் நிச்சயம் இந்து மத எதிர்ப்பாளர்கள். பிற மதங்களை திருப்திபடுத்துபவதற்காக பாடுபடுபவர்கள்.   

சோம்நாத் கோயிலை புனரமைப்பதில் முக்கியப் பங்காற்றிய சர்தார் படேல் எந்த கட்சியைச் சேர்ந்தவரோ அதே கட்சியைச் சேர்ந்தவர்களே இதனை எதிர்க்கிறார்கள். சர்தார் படேலின் நினைவைத் துடைத்தெறிந்து விட்டு, அந்நாட்களில் அந்த கட்சியில் இருந்த ஒரு பிரதான மனிதரை அனுசரித்து, பல தசாப்தங்கள் அரசாண்ட இந்து விரோத தலைவர்கள் எத்தகையவர்கள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.

எந்தச் சூழ்நிலையிலும் ராமர் கோவில் கட்டப்படக்கூடாது என்று தம் பல பத்தாண்டு கால ஆட்சியில் அயராது உழைத்தார்கள். அது இந்துக்களுடையதே என்ற வரலாற்றுச் சான்றுகளை பொது மக்களிடமிருந்து மறைத்தார்கள். புராணம், இதிகாசம் மற்றும் காவியங்களின் ஆதாரங்களை கேலி செய்தார்கள். இவர்களுக்குத் துணையாக இடதுசாரிகள், நாத்திகர்கள் மற்றும் தேச துரோகிகள் ஒன்று கூடினார்கள்.

இப்போது, இது அரசியல் நோக்கத்திற்காக ஒரு கட்சி மற்றும் ஒரு சங்கம் செய்யும்  வேலை என்று காரணம் காட்டி ஒதுங்கி நிற்கிறார்கள். சொல்லப்போனால், இந்த சம்பவத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பிற மதங்களை திருப்தி செய்யும்  அரசியலால் வாக்கு வங்கியைக் காக்கிறார்கள். இவர்கள்தான் அரசியல் நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் உணரமாட்டார்கள என்ன? 

இவர்களின் அக்கிரமத்திற்குத் துணையாக ஹிந்து மதப் பெரியவர்கள் சிலரைக் கொண்டு, கட்டி முடிக்காத கோவிலில் அதற்குள் பிராண பிரதிஷ்டை எதற்காக என்று கேட்க வைக்கிறார்கள். ஆனால், அந்த அரசியல் ஹிந்துத் தலைவர்கள் இந்து மத தர்மத்திற்கு   எதிராக, எதையும் யோசிக்காமல் பேசுவது கண்டிக்கத் தக்கது.. அதோடு ஏதோ சாஸ்திரத்திற்குப் புறம்பான செயல் நடைபெறுவதாக சில ஹிந்துக்களே எதிர் வாதங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

சில ஹிந்து பெரியவர்கள் தமக்கென சில நிலையான கருத்துகளையும் வெறுப்புகளையும் உருவாக்கிக் கொண்டு அந்தக் கண்ணோட்டத்தில் தவறுகளைத் தேடி,  இல்லாததை  கற்பனை செய்து எதிர்த்து வருகிறார்கள். இதுவே பிறமதத்தின் கட்டிடமாக இருந்தால்   அம்மதத்தவர் யாருமே எதிர்க்க மாட்டார்கள். அவர்கள் ஒரே கட்டுப்பாட்டில் நிற்பார்கள். அத்தகு கட்டுப்பாடும் ஒருமித்த கருத்தும் ஹிந்துக்களிடையே இல்லாதது குறைபாடு.

ஏழைகளின் பசியைப் போக்கலாமல்லவா? மருத்துவமனைகளையும் கல்வி நிறுவனங்களையும் கட்டலாமல்லவா? என்று ஆட்சேபித்தவர்கள், தாம் பதுக்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் பணத்தில் அதைச் செய்யலாமே. இந்துக் கோவில்களின் வருமானத்தை அரசுக் கருவூலத்திற்கு அனுப்பி அநியாயமாகப் பயன்படுத்துபவர்கள் இந்தப் பேச்சுக்குத் தகுதியானவர்கள் தானா?  தங்களின் பல தசாப்த   கால ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்க முடியாத வைத்தியசாலைகள், கல்வி நிலையங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் எல்லாம், கடந்த சில வருடங்களில் நாட்டில் நடப்பது இவர்களுடைய கண்ணில் படவில்லையா? எந்த பிற மதங்கள் தம் மத  நிலையங்களின் வருமானத்தை மத சார்பற்ற நோக்கங்களுக்காக செலவிடுகின்றன என்று சொல்ல முடியுமா?

உண்மையில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களின் நிதியில் இந்தக் கோயில் கட்டுமானம் நடைபெறவில்லை. இது கட்சி நிகழ்ச்சி அல்ல. அரசு பணத்தில் கட்டப்படவில்லை. கோடிக்கணக்கான இந்துக்கள், சாமானியர் முதல் பெரியவர்கள் வரை தம் சேமிப்பிலிருந்து கட்டி கொள்ளும் ஆலயம் இது. வெளிநாட்டு மத அமைப்புகளின் சட்டவிரோத நிதி எதுவும் இதில் சேரவில்லை. இது ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறங்காவலர்களின் நிர்வாகத்தின் கீழ் நடக்கிறது. அந்த டிரஸ்டின் அறங்காவலர்கள் ஒவ்வொரு விவரத்தையும் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.

கிராமங்களும் நகரங்களும் ஏழையும் பணக்காரரும் ஒன்று சேர்ந்து பக்தி சிரத்தையுடன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு கோவில் கட்டி வருகிறார்கள்.

தம் வாக்குறுதியில் ராமர் கோவில் கட்டுவதை முக்கியமாகக் குறிப்பிட்ட தலைவர்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர். பாரத தேசத்தின் பெருமைக்குரிய இந்த நிகழ்ச்சியை இராம பக்தரும் அனுஷ்டானத்தில் சிறந்தவரும் நன்னடத்தை கொண்டவருமான தேசத்தின் தலைவர் முதன்மையாக இருந்து நடத்துவதே சிறந்தது.

இந்த உண்மைகளைப் புறக்கணித்து, இந்துக்களில் அதிருப்தியடைந்த பிரிவினர் சிலரைப் பயன்படுத்தி, சில பாரம்பரிய சங்கரபீடங்களின் வார்த்தைகளைத் திரித்து, பொய்யான செய்திகளைப் பரப்புவதன்மூலம் பிரிவினை வாதம் செய்யும் முயற்சி கூட நடந்தது.   ஆனால் அந்த பீடங்களின் ஜகத்குருக்கள் இந்த பெருமைமிக்க பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு தம் முழுமையான திருப்தியையும் ஆசீர்வாதத்தையும் அளித்தது மட்டுமல்லாமல்,  தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையாக, ராம தாரக மந்திரத்தை ஜபம் செய்து இதனை  வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்களிடம் தெளிவாக அறிவித்து அழைப்பு விடுத்தனர். ராமர் கோவில் பிராண பிரதிஷ்டைகாக தீட்சையோடு பல்வேறு சடங்குகளையும் மேற்கொண்டார்கள். அவர்கள் தேச நலனையும் தர்ம நலனையும் கோருபவர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

அரசியல் சுயநல ஊடகங்கள் செய்திகளைத் திரித்து வெளியிட்டனவே தவிர, இந்த உண்மை நிகழ்வுகளையும் பீடாதிபதிகளின் ஆசிகளையும் வெளியிடவில்லை.. நம் தேசத்தில் மங்களகரமாக, மிக வைபவமாக நடக்கும் புகழ்பெற்ற ஒரு நிகழ்வுக்கு பொதுமக்களின் உணர்வைப் பிரதிபலிக்க முடியாத செய்தி நிறுவனங்கள் நம்பகத்தன்மையை இழக்கின்றன.

எது எப்படியானாலும் மகரிஷிகளின் நல்ல சங்கல்பமும் சில நூற்றாண்டுகாகச் செய்த  தியாகத்தின் பலனும் கோடிக்கணக்கான மக்களின் ராம பக்தியும் நிலையான தெய்வீக  ஆலயமாக உருக்கொண்டுள்ளது.

சாஸ்திர முறைப்படி மூல விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்வதற்குத் தேவையான முழுமையான நிர்மாணத்தோடு சம்பூரணமான சாத்திர முறைகளோடு நிஷ்டையோடு ஜபம் செய்த மந்திர சக்தியை நிரப்பிக் கொண்ட யந்திரங்களின் பிரதிஷ்டையோடு    ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுகிறது.

சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை அப்படியே திடமாக ஸ்ரீ ராமர் கோயில் தெய்வீக பாரதத்தின் ஆத்மாவாக முழு பிரபஞ்சத்திற்கும் ஒளியைப் பரப்பி பிரகாசமாக விளங்கும். 

ஸ்ரீராம ஜயராம ஜயஜய ராமா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe