October 13, 2024, 1:34 AM
28.2 C
Chennai

தற்போது… பாரதம் முழுமையாக முன்னேறிய தேசம்!

old and new parliament building

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

எங்கு பார்த்தாலும் வகுப்புவாத போராட்டங்கள், வாக்குவாதங்கள், மோதல்கள், தமக்காக தனிப்பட்ட ஒதுக்கீடுகள்… போன்ற விஷயங்களே செய்தியாகவும், சர்ச்சையாகவும் பரவி வருகின்றன. ஆனால், நடந்துவரும் முன்னேற்றத்தையும் நல்லவற்றையும் அடையாளம் கண்டு பிரச்சாரம் செய்யும் உள்ளத் தூய்மை கொண்ட ஊடகத்துறையும், அரசியல் சாதுர்யமும் இன்று மிக முக்கியமான தேவை. இந்திய குடிமக்களும் வெளிநாட்டவரும் நம் தேசத்தில் நிகழும் மிக ஆச்சர்யமான முன்னேற்றங்களை அறிய வேண்டும். அறியச் செய்ய வேண்டும்.

அந்த வரிசையில் நம்முடையதேயான தேசியத்தை ஐயத்திற்கு இடமின்றி ஸ்தாபிக்க வேண்டியது முக்கியம். வந்தேறிகளின் ஆட்சி முடிந்துபோன பின்னும் அவர்களையே பின்பற்றி, அவர்களின் அடையாளத்தையே பெயர்களிலும் நடைமுறைகளிலும் காலச்சாரத்திலும் நிலைநாட்டி வருகிறோம்.

சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகள் தாண்டி எண்பதாவது தசாப்தத்தில் நுழைந்தாலும், தேசியம் என்ற எண்ணத்தை வலிமையாக நிலைநிறுத்துவதில் இத்தனை காலமாக சரியான முயற்சி நடைபெறவில்லை.

இத்தகு வெளிநாட்டு அடிமைத்தனமே தேசிய உணர்வை மேலெழ விடாமல் தடுத்து, யுக யுகங்களாக உள்ள நம் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மறக்கச் செய்கிறது. வேறெந்த தேசத்திற்கும் இல்லத வரலாறு, விஞ்ஞானம், ராஜநீதி போன்றவை பண்டைய காலம் முதலே பெற்றுள்ள பாரதம், தனக்கு எதுவுமே இல்லாதது போல, மேலைநாட்டு ஆட்சியாளரின் முறைகளையே அமல்படுத்திவருவது சுயமரியாதை இன்மையைக் காட்டுகிறது.

ALSO READ:  புண்ணியம் செய்த மாநிலம் தமிழ்நாடு!

சுமார் நூறாண்டு காலம் நடந்த சுதந்திர போராட்டங்களில் தேசிய உணர்வு,
சுயமரியாதை போன்றவையே முன்னிலை வகித்தன. பாரத தேசத்தை பாரதியர்களே ஆளுவது மட்டுமல்ல, பாரதியம் ஆள வேண்டும் என்ற உணர்வு கொண்டிருந்த போராட்ட வீரர்களும், மேதாவிகளும் அன்று அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

ஆனால் சுதந்திம் கிடைத்தபின், மேலைநாட்டு அபிமானிகளும், மேலை நாட்டை வழிபடுபவர்களும் முக்கிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். மேலைநாட்டு வழிமுறைகளையும், தேசத்தை துண்டாக்கிய ஆக்கிரமிப்பாளர்களையும் கௌரவித்து அவர்களின் வழிமுறையிலேயே ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினார்கள். ‘இந்த தேசம் என்றுமே சுதந்திர நாடாக முடியாது’ என்ற எண்ணத்தை குடிமக்களின் மனதில் விதைத்தார்கள்.

உலகனைத்தும் தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறிக்
கொண்டிருந்த காலம் வந்த பின்னும், நம் தேசத்தில் தகுந்த மாற்றங்களைச்
செய்யவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. ஒரு பத்தாண்டு காலத்திற்கு முன்பிருந்து தேசிய உணர்வும், தேசிய சிந்தனையும் பாரத தேசத்தை உலகிலேயே பிரத்தியேக இடத்தில் நிறுத்தி வருகிறது. தேசிய ஞானத்தாலும் வளங்களாலும் உலகமே வியக்கும் வண்ணம் முன்னேற்றத்தை அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகிறோம்.

ரயில்வே, தொழிற்சாலை, சாலை வசதி, மலைகளிலும் நீர்நிலைகளிலும் கூட சிறந்த போக்குவரத்து வசதிகள், சுயசார்பு, மீள்தன்மை போன்றவை வெற்றி கரமாக விஸ்வரூபமாக கண்ணெதிரில் காட்சியளிக்கின்றன. பாதுகாப்புத் துறையிலும் அதிநவீனமான வலுவான பரிணாமங்கள் நடந்து வருகின்றன.

ALSO READ:  சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (42): ஸ்தாலீ புலாக நியாய:

இந்தப் பின்னணியில் சட்டம், நியாயம் போன்ற அம்சங்களிலும் தேசியமான வழிமுறைகள், நவீன மாற்றங்கள் ஆகியவற்றை எடுத்து வரும் விதமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பாரத நீதித்துறையில் நூதன அத்தியாயத்திற்கு வழி பிறந்தது என்று அனைவரும் புகழும் விதமாக புதிய செக்ஷன்களும் நல்ல திருத்தங்களும் எடுத்து வந்துள்ளார்கள்.

எந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தாலும் உடனே எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனை, பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீது அதிகரிக்கும் குற்றங்களுக்கான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற சட்டம் போன்றவை நல்ல தீர்மானங்கள்.

‘இந்தியன் பீனல் கோட் 1860’ – என்பது “பாரதிய நியாய சம்ஹிதை 2023” ஆக
மாறியது. ‘கிரிமினல் ப்ரோசீஜர் கோட் 1973’ – “பாரதிய நாகரிக சுரக்ஷா சம்ஹிதா 2023 “ என்றும் ‘தி இந்தியன் எவிடென்ஸ் ஆக்ட் 1872’ – “பாரதிய சாக்ஷியா அதினியம் 2023” என்றும் மாறியது. இவ்விதமாக நம் தேசிய சொற்களால் மாற்றம் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேர், ஸ்ரீவிஜயபுரம் என்று
மாறியது. இப்படிப்பட்ட பெயர் மற்றங்களும் தேசிய உணர்வை பிரகாசிக்கச்
செய்யும். நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தும்.

பலப்பல சிறந்த பரிணாமங்களோடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் இந்த தேசத்திலேயே இருந்து வாழ்ந்து தின்று வரும் தேச துரோகிகள் தலைவர்காளாக வலம் வந்து உலக அளவில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

ALSO READ:  ஓணம் பண்டிகையின் சிறப்பான அந்த நான்கு நாட்கள்!

இந்தப் பின்னணியில் தேசிய உணர்வுள்ளவர்கள் அனைவரும் உண்மையை அடையாளம் கண்டு தேசத்தின் உயர்வை பெருமையாக கர்வமத்தோடு பரப்ப வேண்டிய தேவை உள்ளது.


(ருஷிபீடம், மாத இதழ், தலையங்கம், அக்டோபர், 2024)


author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week