சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து பொதிகை விரைவு ரயிலே கவுத்த முயன்ற விவகாரத்தில், சத்திஸ்கர் தொழிலாளர்கள் இருவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே பாம்பகோவில்சந்தை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து கவுத்த முயன்ற சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இரு தொழிலாளர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .
செங்கோட்டை – சென்னை இடையே இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் கடந்த 26-ம் தேதி சென்னை சென்ற போது, கடையநல்லூர் – பாம்பகோவில் சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்ற போது, தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி இன்ஜினின் முன் பக்க தகடு சேதமடைந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில் அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் பணியாற்றி வரும், சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பால்சிங் பகேல்(21), ஈஸ்வர் மேடியா(23) ஆகிய இருவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .