January 20, 2025, 1:34 AM
24.9 C
Chennai

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 46: உத்யம ராகவந்யாய:

உத்யம ராகவந்யாய: அல்லது உத்யோக ராகவந்யாய:
உத்யமம் – விடா முயற்சி; ராகவ: – ரகு வம்சத்தில் பிறந்த ஸ்ரீ ராமன்.

ஸ்ரீராமச்சந்திரனுக்கு ரிஷிகளும் தேவர்களும் மட்டுமல்ல, குரங்குகளும், அணில்களும் கூட உதவி செய்தன. ராம காரியத்திற்காக ஜடாயு என்ற பறவை உயிரைத் தியாகம் செய்தது. ஸ்ரீராமர் முனிவர்களுக்கு அபயமளித்தார். வானரர்களுக்கு உயர்ந்த நிலையை வழங்கினார். இந்த நியாயம், ராமனுக்கு உதவி செய்த இயற்கை. ராவணனுக்கு ஏன் உதவவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது.  

நேர்மையான வழியில் நடப்பவருக்கு பறவைகளும் விலங்குகளும் கூட உதவுகின்றன.   அதர்ம வழியில் நடப்பவர்களை சொந்த உறவினரும் விட்டுப் பிரிவர்.

யாந்தி ந்யாய ப்ரவ்ருத்தஸ்ய திர்யன்சோபி சஹாயதாம்
அபந்தானந்து கச்சந்தம் சோதரோபி விமுஞ்சதி  !!

பொருள் – நியாய வழியில் நடப்பவருக்கு விலங்குகளும் பறவைகளும் கூட (திர்யக் ஜந்துக்களும்) உதவும். தீய வழியில் பயணிப்பவரை சகோதரர்களும் விட்டு விலகுவார்கள்.  

ராமனின் வலிமையையும் சாமர்த்தியத்தையும் கண்டு அஞ்சி விலங்குகள் அவருக்கு உதவி புரிந்தனவா? இல்லை. அவருடைய நல்ல சுவாவத்தால் அவர் மீது ஏற்பட்ட கௌரவம், பக்தி ஆகியவற்றால் அது சாத்தியமாற்று. அதுதான் ‘உத்யோக ராகவ’ நியாயத்தில் இருக்கும் நியாயம்.

ராவணனுக்கு அவ்வாறு யாரும் உதவி புரியவில்லை. அனைவரும் அசுர ராஜனுக்கு   உபதேசம் செய்தார்கள். தாத்தா, மனைவி, சகோதரன், பிள்ளைகள் இவ்வாறு பலர் ராவணாசுரனை எச்சரித்தார்கள். ஆனாலும் பலனில்லாமல் போனது. அரச ஆணை என்பதால் விருப்பமின்றியே போரில் பங்கு கொண்டார்கள். சகோதரனான விபீஷணன், ராவணனை விட்டுப் பிரிந்து சென்று ராகவனின் பக்கம் சென்று சேர்ந்தான். அதுவே ‘உத்யோக ராகவ நியாயம்’. சுயநலவாதிகளிடம் கொள்ளும் அச்சத்தால் யாரேனும் உதவலாம். ராவணனுக்கும் ராகவனுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் அதுவே. தார்மிக வாழ்க்கை வாழ்பவருக்கு அவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும் என்பது  இந்த நியாயம் உரைக்கும் நீதி.

ALSO READ:  பொங்கலை பொங்கல் திருநாளாகவே கொண்டாட விடுங்களேன்!

அன்னை வைத்த கூர்மையான சோதனை –
சுவாமி வேவேகானந்தர், தேச யாத்திரைக்குக் கிளம்பியபோது, அன்னை சாரதா தேவியை தரிசனம் செய்து கொண்டார். தன் பயணம் குறித்துத் தெரிவித்தார். ‘எனக்கு ஒரு கத்தி கொண்டு வந்து கொடு, மகனே’ என்றார் அன்னை சாரதா தேவி. சுவாமி விவேகானந்தர்,   கத்தி எடுத்து வந்து அன்னையிடம் அளித்த முறையைப் பொறுத்து சீடனின் மன நிலையைச் சோதித்து, ஆசி வழங்கினார் அன்னை.  “உனக்கு தெய்வம் துணையிருந்து உதவும். சமுதாயம் உன்னோடு இருக்கும். எல்லா தடைகளையும் தாண்டி, முன்னே செல்வாய். இதற்குக் காரணம், உனக்கு சமுதாயத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பற்ற அன்பே” என்றார். அன்னையின் கையில் கத்தியைக் கொடுத்த போது, கூர்மையான பகுதி தன்னைப் பார்த்து இருக்குமாறும். பிடி உள்ள பகுதியை அன்னையில் கைகளில் கொடுத்த சுவாமி விவேகானந்தரின் மனதை விளக்கி சாரதாம்பா இவ்விதம் கூறினார்.

‘விக்கிரமாதித்ய சரித்ரம்’ என்ற நூலில் உள்ள இந்த சுலோகம், சத்துவ குணம்  உள்ளவருக்கு தெய்வத்தின் உதவியும் அதிர்ஷ்டமும் சேர்ந்து கிடைக்கும் என்று கூறுகிறது.

ALSO READ:  காவல் தெய்வத்துக்கு ஐப்பசி பௌர்ணமி சிறப்பு அபிஷேகம்!

உத்யம: சாஹசம் தைர்யம் புத்தி: சக்தி: பராக்ரம:
ஷடதே யத்ர வர்தந்தே தத்ர தேவ சஹாயக: !!

பொருள் – விடாமுயற்றி (உத்யமம்), சாஹசம், மனோ தைரியம், நல்ல குணம், உடல் வலிமை, வீரம் என்ற ஆறு குணங்கள் உள்ளவருக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.  

மனித முயற்சி (புருஷ ப்ரயத்னம்) என்ற தவத்தால் மட்டுமே தெய்வத்தை தரிசனம் செய்து கொள்ள முடியும். அதற்குத் துணையாக அறிவுக் கூர்மையும், உடல் வலிமையும் இருக்க வேண்டும் என்பது இந்த சுலோகத்தின் கருத்து.

மேற்சொன்ன குணங்கள் எல்லாம் நிரம்பிய சத்ரபதி சிவாஜிக்கு மாதா பவானி துணையாக நின்று வாளைப் பரிசளித்தாள். சத்ரபதி சிவாஜி வெறும் இருநூறு படைவீரர்களோடு ஷாயிஸ்தகானின் படை முகாமிற்குள் நுழைந்து அவனுடைய கூடாரத்தைக் கிழித்துக் கொண்டு உள்ளே சென்றது அவர் செய்த சாகசம். அவனை உறக்கத்திலிருந்து எழுப்பி, எதிர்கொண்டது வீரம். தர்மத்தை நிலைநாட்டுவதற்காக சாகசத்தையும் வீரத்தையும் காட்டியவருக்கு வெற்றியை அருளினாள் தேவி.

ALSO READ:  சிறப்புத் தகவல்: ஐயப்பனின் ஐந்து படை வீடுகள்; மண்டல பூஜைகள் தொடக்கம்!

சுயநலம் இன்றி பிறர் நலனுக்காக உழைப்பவருக்கும், இனிய சுபாவம் உள்ளவருக்கும், அனைவரிடமும் இயல்பான பாசம் கொண்ட ஆளுமை உடையவருக்கும் அனைத்திலும்  வெற்றியே கிடைக்கும். இந்த நியாயத்தின் உட்பொருள் இதுவே.

சுவாமி விவேகானந்தரிடம் இருந்த உயர்ந்த குணங்களின் காரணமாக உலக அளவில் பலர் அவருக்கு உதவி புரிந்தார்கள். நோக்கம் சிறந்ததாக இருந்து, இனிமையாகப் பேசும் சக்தியும் இருப்பவருக்கு சமுதாயம் உதவி புரியத் தயங்குவதில்லை. தனி மனிதருக்கு மட்டுமின்றி, அமைப்புகளுக்கும் நாடுகளுக்கும் கூட இந்த சூத்திரம் பொருந்தும்.

தேசத்தை மிகச் சிறந்த மேன்மையான நிலைக்கு எடுத்துச் செல்வதற்காக உழைக்கும் ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம்’ (RSS) பல இடையூறுகளைத் தாண்டி, நூறு ஆண்டுகளாக விடாமுயற்சியோடு (உத்யமம்) புரிந்துவரும் சேவையில் பலர் தம் நேரத்தை ஒதுக்கி பங்களிக்கிறார்கள் அல்லவா? ஆயிரக்கணக்கானவர் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துப்  பணிபுரிவது ‘உத்யம ராகவ நியாயத்திற்கு’ எடுத்துக் காட்டு. சமுதாயத்தின் மீது இயல்பான அன்பும், தேசத்தின் மீது இணையற்ற பக்தியும் உள்ளவருக்கு, ‘நான், நான்’ (அஹமஹம்) என்று உதவி புரிவதற்குப் பலர் வந்து சேருவார்கள். ‘உத்யம ராகவ நியாத்திற்கு’ இது போல் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.  

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...