
சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 54 (தொடர்ச்சி)
தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
கோமுக வ்யாக்ர ந்யாய: – பசுந்தோல் போர்த்திய புலி
கோமுக: – பசுவைப் போன்ற முகம். வ்யாக்ரம் – புலி
சில தசாப்தங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம்:
உள்நாட்டுத் தடுப்பூசியின் பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டின. குரங்குகளின் மேல் அந்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மனிதர்களின் மீது முயற்சிப்பதற்கு முன்பாக அவ்வாறு பரிசோதனை செய்வது ஆராய்ச்சியின் ஒரு பகுதி. ஹைதராபாதில் என்.ஐ.என். அமைப்பில் இந்த ஆய்வுகள் நடந்தன. ஆனால் ‘விலங்கு ஆர்வலர்கள்’ என்ற பெயரில் ஒரு கும்பல் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தைத் தாக்கி அந்த வானரங்களை விடுவித்தது. அதன் பலனாக தடுப்பூசித் தயாரிபில் பின்னடைவு ஏற்பட்டு, கால தாமதமானது. வெளிநாட்டு தடுப்பூசிக் கம்பெனிகள் சதித்திட்டம் தீட்டி ‘ப்ளூ க்ராஸ்’ குழுவினரைத் தூண்டி, இந்தத் தாக்குதளைச் செயவித்த உண்மை பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது.
ஸ்லீப்பிங் செல்கள்: பஹல்காம் கொடூரம் நடந்த சில மணி நேரங்களிலேயே, இந்திய உள்துறை அமைச்சரின் வருகை பற்றிய விவரங்களும், அரசாங்கத்தால் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களின் தகவல்களும், CRPF படையின் அசைவுகளும் பகை நாட்டைச் சென்றடைந்தன. இது ஒரு தொலைகாட்சிப் நிருபர் வேடத்தில் இருந்த ஒரு பெண் செய்த தேசத் துரோகம். ஜோதி மல்ஹோத்ரா போன்ற பசுந்தோல் போர்த்திய புலிகள் இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ. சிலர் செய்திகளில் இடம்பெற்றனர். பலர் பசுத்தோலைப் போர்த்திச் சதி புரிந்து கொண்டு இன்றைக்கும் வளைய வருகிறார்கள்.
‘புத்தா இன் ட்ராஃபிக் ஜாம்’: துப்பாக்கி பிடித்தால் மட்டுமே நல்ல புரட்சிகளைச் செய்ய முடியும் என்று இளைஞர்களிடம் ஏமாற்றுப் பேச்சுப் பேசி, அவர்களைத் தவறாக வழி நடத்தி, வன்முறையால் தேசபக்தர்களைக் கொன்று, மக்களின் சொத்துக்களை அழித்துவருகிறது ஒரு ஜனநாயக விரோதக் கும்பல். அதனிடம் சிக்கி இளைஞர்கள் சிலர் நக்சலைட்டுகளாக மாறிவருகிறார்கள். அவர்களுக்கு துணைபோகும் சிலர் மறைமுகமாக கல்வி நிலையங்களில் ஆசிரியர்களாகவும், பலகலைக் கழகங்களில் பேராசிரியர்களாகவும் மனித உரிமைப் பாதுகாவலர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் நகரங்களில் இஷ்டத்திற்குச் சுற்றித் திரிகிறார்கள். ஜனநாயகம் ஒரு போலித்தனம் என்று குற்றம் சாட்டும் போலி மேதாவிகள் சிலர். கட்சிகளைத் தொடங்கி அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். போலி மதச்சார்பின்மை பேசுகின்றனர். இவர்கள் அனைவரும் பசுந்தோல் போர்த்திய புலிகளே. இத்தகையவர்களே ‘அர்பன் நக்சல்ஸ்’ எனப்படுவர்.
‘விவேக் அக்னிஹோத்ரி’ என்ற தேசியவாதி, “புத்தா இன் ட்ராஃபிக் ஜாம்” என்ற திரைப்படத்தின் மூலர் இவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். அண்மையில் பாரதப் பிரதமர் திரு மோதிஜி, உரையாற்றுகையில் ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தேசத் துரோகச் செயல்களுக்கும், அழிவுக்கும் நக்சலைட்டுகளும், அர்பன் நக்சல்களும் மறு பெயராக விளங்குகிறார்கள்.
மதமாற்றங்களின் தாய்: சில கும்பல்கள் சேவை, மருத்துவம், கல்வி போன்ற முகமூடிகளில் மறைந்து மத மாற்றங்களை ஊட்டி வளர்த்து வருகின்றன. அதோடு, சமுதாயத்தில் வேற்றுமையைக் கற்பித்து தேசத்தை ஆட்டம் காண வைக்கும் சதிகளையும் தீட்டி வருகின்றன. அத்தகைய மறைமுக அமைப்புகளும் பசுந்தோல் போர்த்திய புலிகளே.
விஷ விதைகள்: சோஷல் மீடியா மூலம் இளைய தலைமுறை மீது பாதிப்பை ஏற்படுத்தி பொழுதுபோக்கு ரீல்கள் என்ற பெயரில் கலாசாரத்தையும் மரபுகளையும் எதிர்க்கும் கருத்துக்களைப் பரப்புகிறார்கள். மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் திரைப்படத் துறையை மாசுபடுத்துபவர்களும் பப்கள், கிளப்புகள் போன்றவற்றின் விரிவாக்கத்திற்குத் தேவையான விதைகளை நாட்டுபவர்களும் இந்த நியாயத்திற்கு எடுத்துக்காட்டுகள்.
வண்ணப் புடவைகள், கரங்களில் வளையல்கள், நெற்றியில் குங்குமம் போன்றவற்றை எதிர்த்தும், ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கையான கர்ம சித்தாந்தத்தையும், திருமண அமைப்பையும், முனிவர்கள் உரைத்த வாஸ்து, ஜோதிடம் போன்ற அறிவியல் உண்மைகளை அவமதித்தும் பேசி வருகின்றனர். சிலர். காலையில் எழுந்தவுடம் நினைவு கூறத் தக்கவர்களான தேவ, தேவியர்களை ஏளனம் செய்தும், வக்கிரமாகப் பேசியும், விஷ நூல்களை பொதுமக்களிடம் விநியோகித்தும் விருதுகளைப் பெற்று வருகிறார்கள். இத்தகைய மறைமுக விஷக் கும்பல்களும் இந்த நியாயத்திற்கு எடுத்துக்காட்டுகள்.
நோய்க்கான காரணங்கள்: விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த தேசிய காங்கிரஸ் ஒரு வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டது. அசாதாரணமான அறிவுக்கும், தேச பக்திக்கும் மறு வடிவங்களாக விளங்கிய பல முக்கிய பிரமுகர்கள் செயல் வீரர்களாக அதில் பங்கு பெற்று விளங்கினார்கள். அந்த தேசிய காங்கிரஸ் அமைப்பு, 1947 சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு அரசியல் கட்சியாக உருமாற்றம் பெற்றது.
நேருவின் வம்ச அரசியல், ஜனநாயகம் என்ற போர்வையில் நிலப்புரபுத்துவத்திற்கு வழி கோலியது. அவர்களுடைய ஆட்சியில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக புதிய பிரச்சினைகளை உருவாகின. தேச பக்தி என்ற பெயரில் நாட்டைப் பிரிப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. அந்தக் கட்சித் தலைவர்களும் வாரிசுகளும் பேசும் வார்த்தைகள், நாட்டு நலனுக்கு தீங்கிழைக்கும் விதமாக இருப்பது (கோமுக வ்யாக்ர) பசுந்தோல் போர்த்திய புலி என்ற பழமொழிக்குச் சரியான உதாரணம்.
அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம், இலக்கியம், விவசாயம் என்று ஒன்றல்ல எல்லா துறைகளிலும் நம் தேசத்தை ஏதோ விதத்தில் சீரழிக்கும் அமைப்புகள் நாய்க்குடைகள் – காளான்கள் போல தோன்றி வருகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது, மும்மூர்த்திகளின் பெயரோ, ஹிந்து தேவதைகளின் பெயரோ வைத்துக் கொண்டு இந்த மிஷினரிகளும் மடங்களும் வேலை செய்கின்றன. இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி வருகின்றன. கல்யுகத்தில் இப்படிப்பட்ட புலிகள் மேலும் அதிகரித்து வருகின்றன. அவைகளிடம் கவனமாக விழிப்புடன் இருக்க வேண்டும் அதற்குத் தேவையான பயிற்சிகளும், புலிகளை எதிர்க்கும் சாகசம் நிறைந்த துணிச்சலும் சுபாவத்தில் சாதுவான ஹிந்துக்களுக்கு ஏற்பட வேண்டும்.
சிறிதளவு அடிப்படை வேறுபாடு இருந்த போதிலும், இந்த நியாயத்தைப் போன்றதே “பயோமுக விஷ கும்பம்” என்ற நியாயமும். “பால் இருக்கும் பானை போலிருந்தாலும் உள்ளே இருப்பது விஷம்” என்பது இந்த நியாயத்தின் பொருள். இதனையே “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது” என்கிறோம்.
பரோக்ஷே கார்ய ஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரியவாதினாம் |
வர்ஜயேத்தாத்ருசம் மித்ரம் விஷ கும்பம் பயோமுகம் ||
பொருள்: எதிரில் இனிப்பான பேச்சு. பின்னாலிருந்து வெறுப்பான பேச்சு. அப்படிப்பட்டவர் நண்பராக மாட்டார். அவர்கள் மேலுக்கு பாற்குடம் போலிருந்தாலும் விஷம் நிரம்பிய பானை போன்றவர் என்பர் பெரியோர்.
இம்மாதிரியான நடத்தை மனித குலத்திற்கு இழைக்கப்படும் அநீதி. இது மனிதர்களுக்கு இடையில் இருக்கவேண்டிய நம்பிக்கையை அழிக்கக் கூடிய அபாயம் நிறைந்தது. சமுதாயத்தில் எங்கோ நடக்கும் சம்பவங்களைப் பரவலாக பிரச்சாரம் செய்வதால் இத்தகைய அபாயங்கள் நேர்கின்றன.
ரயிலில் நீண்ட தொலைவு பயணம் செய்யும் போது எடுத்து வந்த உணவுப் பொருளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது, மகிழ்ச்சியாக ஒன்றுசேர்த்து பயணிப்பது போன்றவற்றை அனுபவித்திருக்கலாம். ஆனால் துறையினரின் எச்சரிக்கை காதில் விழுகிறது. “முன்பின் தெரியாதவர் கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டாம்” என்று. அடுத்து சந்தேகப்படத் தொடங்குகிறோம். பரஸ்பரம் அன்யோன்யமாக இருக்க வேண்டிய உறவினர்களின் இடையே டிவி சீரியல்கள் சந்தேக விஷத்தைப் புகட்டி மாசுபடுத்துகின்றன அல்லவா?
நம்பிக்கை தொடர்பான கதை ஒன்று உண்டு.
ஒரு காட்டுப்பகுதியில் கருணையுள்ள துறவி ஒருவர் வசித்து வந்தார். அந்த வழியாகச் செல்லும் பாதசாரிகளுக்குத் தேவையான உணவும் தண்ணீரும் அளிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அதோடு அவர் மூலிகை மருத்துவத்திலும் சிறந்து விளங்கினார்.
ஒரு முறை அந்த வழியாகச் சென்ற ஒரு செல்வந்தர் நோய்வைப்பட்டபோது, துறவி அவருடைய களைப்பைப் போக்கி தேவையான சேவை செய்தார். அதற்கு நன்றியாக ஒரு நல்ல குதிரையைச் செல்வந்தர் துறவிக்குப் பரிசளித்தார். அந்தக் குதிரையின் உதவியோடு துறவி தேவையானவர்களுக்கு மேலும் சிறந்த சேவைகளைச் செய்தார்.
நல்லது இருக்கும் இடத்திலேயே தீமையும் இருக்கும். அந்தக் காட்டுப்பகுதியில் இருந்த வழிப்பறித் திருடனுக்கு அந்தக் குதிரையின் மேல் கண் விழுந்தது. அந்தத் துறவியின் சேவைகளைப் பெற்றிருந்தாலும், அந்தத் துறவியிடம் சென்று அந்தக் குதிரையைத் தனக்குத் தந்துவிடும்படி கேட்டான். ஆம்புலன்ஸ் போல உதவியாக இருந்த குதிரையைக் கொடுக்க இயலாது என்றார் துறவி.
ஒருநாள் குதிரையின் மேல் சென்று கொண்டிருந்த துறவிக்கு சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் தென்பட்டான். அவர் குதிரையை நிறுத்தி அந்த நோயாளியைத் தன் குதிரையின் மேல் ஏற்றிக் கொண்டு தன் குடிசைக்கு எடுத்துச் செல்ல நினைத்தார். நோயாளிபோல் நடித்தவன் வேறு யாரோ அல்ல. அந்த வழிப்பறித் திருடனே.
துறவியைத் தள்ளிவிட்டு, அந்தக் குதிரையைத் தான் எடுத்துச் செல்லப் போவதாக எக்காளமிட்டான். துறவி அதிர்ந்து போனார். திருடனிடம், “குதிரையை எடுத்துக் கொள். என்னால் உன்னோடு போராட இயலாது. ஆனால், உனக்கு இந்த குதிரை எப்படிக் கிடைத்தது என்ற செய்தியை யாருக்கும் சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு” என்று கேட்டார். திருடன் வியந்து போய், “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு சாது கூறிய பதில் திருடனிடம் மாற்றத்தை உண்டாக்கியது. அவர் என்ன சொன்னார் தெரியுமா? “நோயாளியைப் போல நடித்து என்னை ஏமாற்றி இந்த குதிரையைப் பறித்துக் கொண்டாய் அல்லவா? இது தெரிந்தால் இனிமேல் சாலையோரத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற யாரும் முன் வரமாட்டார்கள். மனிதர்களிடம் நம்பிக்கையைக் குலைக்கும் இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் போவதே மேல்” என்றார். திருடனின் கண்கள் பனித்தன. துறவியின் பாதங்களைப் பணிந்து, அவருக்கு உதவியாளனாக மாறினான்.
“முத்யால முக்கு”: “முத்தியால முக்கு” (முத்து போன்ற கோலம்) என்ற தெலுங்கு திரைப்படம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1975 ல் வெளிவந்தது. பாப்பு, ரமணா என்ற இரட்டையர்கள் இதை எழுதி இயக்கினர். இது உத்தர ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அதில் ஒரு ஒப்பந்தக்காராரின் கதாபாத்திரம் (ராவ் கோபாலராவ்) உண்டு. அவனிடம் ஒரு வியாபாரி வருவான். சர்க்கரையை சந்தைக்கு வராமல் பார்த்துக் கொள்ளும்படிக் கேட்பான். சர்க்கரையை முடக்கி, அதன்மூலம் மக்களிடம் அதிக விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை காண்ட்ராக்டருக்கு அளிப்பதாகக் கூறுவான். அது ஒரு ஏமாற்று வேலை.
இடதுசாரிகளின் வணிகம்: இடது சாரி தீவிரவாதிகள், பார்ப்பதற்கு பசுவைப் போலவும் நல்லவர்களைப் போலவும் நடித்து, உலகளாவிய தொழிலாளர் ஒற்றுமை, நலன் என்று முழக்கம் எழுப்புவார்கள். இவர்கள் தொழிலாளர் யூனியன்களை நிறுவி, அவர்களின் உரிமையைக் காப்பாற்றுவதாக கோஷமிட்டு, நிர்வாகத்தின் மீதான விரோதத்தை வளர்த்து, வேலையின் மேல் கவனத்தைக் குறைத்து, தேசத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான தொழிலகங்களை மூடுவதற்கு காரணமாகின்றனர். இத்தகைய தொழிற்சங்க யூனியன்கள், ‘பசு முகம் கொண்ட புலி’ என்ற இந்த நியாயத்திற்குச் சிறந்த உதாரணம்.
முக்கியமாக இடதுசாரி அரசாட்சி நடக்கும் மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் முக்கியத் தொழில்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. சீனாவின் மீதான அவர்களின் பக்தி நிரூபிக்கப்பட்டது.
வங்காளத்தில் ‘டன்லப் டயர்’ கம்பெனி, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், மேலும் பல சணல் ஆலைகள், ஐடிஎல், ஐடிபிஎல் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டன. பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் தளர்ச்சியடைவதற்கு இவர்களே காரணம். இவர்கள் தாம் வாழும் நாட்டிற்கே சேதம் விளைவிக்கிறார்கள்.
சனாதன தர்மத்தை அடியோடு அழிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ‘ஆப்ரகாமிக்’ மதங்களோடு கைக் கோர்த்து இயங்குவது, இந்த நாத்திகக் கட்சிகள் கடைப்பிடிக்கும் இரட்டை நிலைப்பாடு. “பயோமுக விஷ கும்பம்” என்ற நியாயத்திற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் வர்த்தகம் செய்வதே இவர்களின் குறிக்கோள். தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து உறுப்பினர் கட்டணம், போனஸ்களில் இருந்தும் ஊதியத் தீர்வுகளில் இருந்தும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாருமானத்தின் மேல் இடதுசாரிகளின் வரி விதிப்பு, இவையே இந்த பசுந்தோல் போர்த்திய புலிகள் செய்யும் ‘சேவைகள்’.





