
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
நாட்டு முன்னேற்றத்தை விரும்பாத பகைக் கூட்டங்களின் தீய சதிகள் ஒருபுறம், பயங்கரவாதிகளின் அழிவுத் திட்டங்கள் மறுபுறம் என்று தேசத்தை அலைக்கழிக்கையில், அவற்றைக் கண்டுபிடித்து, தேசத்தைக் காத்து வரும் உயர்ந்த ஆட்சியமைப்பை ‘நமோ’ என்று வணங்கிப் பாராட்டத்தான் வேண்டும். தேசபக்தி, தேச நலன் என்ற விருப்பம் கொண்ட யாரானாலும் இந்த தேசத்தின் குடிமகனாக இருந்தால் இதனை ஏற்பார்கள்.
அண்மையில் டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும், அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக இருக்கையில், அவை அனைத்தையும் கண்டறிந்து அந்தக் குற்றங்களைத் தடுத்த நம் உளவுத் துறையையும் பாதுகாப்பு அமைப்பையும் பாராட்ட வேண்டும்.
கண் மூடாமல் இரவும் பகலும் இமயம் முதல் குமரி வரைத் தேடி பகை நாடுகளின் வியூகங்களைக் கழுகுப் பார்வையோடு கவனித்து சிரமம் பாராமல் உழைக்கும் வலுவான பாதுகாப்புத் துறையை ஏற்பாடு செய்து, அவர்களை உற்சாகப்படுத்தும் தேசபக்தியே ஒரு உருவமெடுத்து இந்த தேசத்தை ஆண்டுவரும் தருணம் இது.
அதே நேரம், ஒவ்வொரு இந்தியனும் கவனிக்கவேண்டிய சில செய்திகள் உள்ளன. துருக்கி போன்ற பகை நாடுகளின் மதவெறி பிடித்த பயங்கரவாதிகளின் வியூகத்தால் காஷ்மீரில் வடிவம் பெற்ற வன்முறையாளர்கள், நம் தேசமெங்கும் பல இடங்களில் தம் நிலையங்களை ஏற்படுத்திக் கொண்ட செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏழ்மையும் பின்தங்கிய நிலையும் மட்டுமே மத வெறியர்கள் உருவாவதற்கான காரணங்கள் என்ற வாதம் உண்மையல்ல என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. தம்முடைய மதத்தில் போதிக்கப்படும் ‘பிற மத வெறுப்பு’ மட்டுமே தம் தர்மம் என்ற கொள்கையே இவற்றின் பின் உள்ள உண்மையான துண்டுதல்.
அதனைச் சிறுவயது முதல் போதித்து, மத வெறியர்களாக வளர்த்து, குறிப்பிட்ட ஆண்டிற்குள் இந்த தேசத்தையும் உலக நாடுகளையும் தம் மத தேசங்களாக மாற்ற வேண்டும் என்ற சதித் திட்டத்தோடு இத்தகு வன்முறைகள் நடந்துவருகின்றன.
ஹிந்து கோவில்களில் தீர்த்தத்திலும் பிரசாதத்திலும் கலப்பதற்கு மருத்துவக் கும்பல் ஒன்று விஷப் பொருளைத் தயார் செய்து வருவதும், உயர் கல்வி கற்றவர்கள் கூட மத மூடநம்பிக்கைக்கு உட்பட்டு தேசத்தின் பல இடங்களில் யூகிக்க இயலாத வகையில் ஒன்றுகூடுவதும் அதிர்ச்சியை விளைவிக்கின்றன.
தேசப் பிரிவினையின் போது அதற்குக் காராணமான மதத்தவர்கள், துண்டாடப்பட்ட பகுதியைத் தம் மத நாடாக அறிவித்துக் கொண்டபோது, மீதியிருந்த பகுதியை ஹிந்து தேசமாக அறிவிக்காமல் போனது கடுந்தவறு. அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இங்கேயே குடியேறி அப்போதிலிருந்து தேப் பற்றில்லாமல், இந்த தேசத்தையும் தம் மத தேசமாக மாற்றுவதற்குச் சதித் திட்டம் தீட்டி பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்று, ஹிந்துக்களைக் கொல்வதற்கு முயற்சித்து வருகிறார்கள் என்பது தெளிவு.
வாக்கு வங்கி அரசியலின் முழு ஒத்துழைப்பு அவர்களுக்கு இருக்கிறது. தேசியவாத அரசாங்கம் அனைவரின் நலனுக்காகவும் முயற்சித்து வருகையில், தம்முடைய அழிவுத் திட்டம் ஈடேராது என்று உணர்ந்து இந்த நல்ல ஆட்சிக்கு மதச் சாயம் பூசி, தம்மைச் சார்ந்தவர் ஆளும் மாநிலங்களில் ஹிந்து எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டி வருகிறார்கள். பல இடங்களில் அரசியல்வாதிகளின் துணையோடு கோவில்களில் உத்யோகிகளாகவும், பொருட்களை விநியோகிப்பவராகவும், சுற்றுப்புறக் கடைகளின் உரிமையாளராகவும் கோவில்களைச் சுற்றிலும் கூட்டமாகப் பலர் நிலைபெற்று வருகின்றனர்.
பார்ப்பதற்கு முற்போக்குவாதிகள் போலவும், நல்லவர் போலவும் தோற்றமளித்து வாய்ப்பும் தேவையும் வரும்போது தம் மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும் துணையும் அளிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு தேசம், முன்னேற்றம், வளர்ச்சி போன்றவற்றை விடத் தம் மதம் நிலைபெறவேண்டும் என்பதே முக்கியம். பிற மதங்களையும் பிற மதத்தவரையும் அழிப்பதே அவர்களின் நோக்கம்.
அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கும்பல்கள் சற்றும் வெட்கமின்றி நாட்டு நலனையும் பொருட்படுத்தாமல் நடந்து கொள்கின்றன. “எங்கள் கட்சியால் உங்கள் மதம் நன்றாக வளர்கிறது” என்று ஒரு அரசியல் கட்சி கூறுகையில், “எங்கள் மதத்தவரால் உங்கள் கட்சி வென்றது” என்று அவர்கள் கூறுகிறார்கள். இத்தகு அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லை, மானமில்லை.
ஹிதுக்களனைவரும் விழித்துக் கொண்டு ஜாதி, பிரிவு, ஆத்திகர், நாத்திகர் என்ற வேறுபாடுகளை விட்டு ஒன்றிணைய வேண்டும். எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வீடுகளிலும் கோவில்களிலும் புகுந்து வன்முறையில் ஈடுபடுவதற்கு வன்முறை மதவாதிகள் பின்வாங்க மாட்டார்கள். எங்கெங்கே பயங்கரங்களையும் கொலைகளையும் நடத்த வேண்டும் என்று முன்னதாகவே எல்லா ஏற்பாடும் செய்து கொண்டு வருகிறார்கள்.
அண்டை நாடான பங்களாதேஷ் போலவே சதிகளை நிறைவேற்றுவதற்குத் திட்டம் தீட்டி வருவதைப் பார்க்கிறோம். அரசாங்கத்தைச் சீர்குலைத்து தாம் பொம்மலாட்ட பொம்மைகளாக ஆட்டி வைக்கும் மனிதர்களை நிறுத்துவதற்குச் சதி செய்யும் வெளிநாட்டுத் திட்டத்திற்கு இவர்கள் துணை போகிறார்கள். இந்தக் கைப்பாவைகள் கிழிக்கும் சாதனைகளான தேச துரோகச் செயல்கள், அசட்டை, மூடத்தனம் போன்றவை ஆபத்தான நிலையை எட்டியுள்ளன.
மத வெறியர்களால் நடக்கும் கொடுமைகளுக்கு ஹிந்துக்கள் மட்டுமின்றி பலரும் பலியாகிறார்கள். முன்னேற்றத்திக்குத் தடை ஏற்பட்டால் குடிமக்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். அமைதியாகவும் சுகமாகவும் அனைவரும் வாழவேண்டும் என்று விரும்பும் யாரானாலும் சரி, மத பயங்கரவாதத்தை எதிர்க்கவேண்டும். இன்னும் பல வியூகங்களோடு பல இடங்களில் குடியேறி இருக்கும் பயங்கரவாதிகள் எல்லோரும் பிடிபடுவதற்கு ஒவ்வொருவரும் உதவவேண்டும். உளவுத் துறையின் கண்காணிப்புத் தேடல் வெற்றியடைய வேண்டும் என்று விரும்பவேண்டும்.
எல்லாவற்றையும் விட, தேசத்தைக் காக்கும் தெய்வீக சக்தியும், தவ யோக பலமும் மேலும் பெருக வேண்டும். அசுர சக்திகளின் திமிரைப் பல முறை அடக்கிய பராசக்தியின் பராக்கிரமம் மீண்டும் மீண்டும் இந்தப் புண்ணிய பாரத பூமியைக் காத்தருள வேண்டும்.
(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், டிசம்பர் 2025)




