
Cambridge Analytica வும் சமீபத்திய தமிழ் நாட்டு அதிரி புதிரி டமால் டுமீல் போராட்டங்களும் ….தலைப்பு பெரிசு தான். ஆனால் விஷயமும் மிகவும் ஆழமான ஆபத்தானதே.
ஒரு காலத்தில் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்திருந்த தமிழகம் கடந்த சில வருடங்களில் நாளொரு போராட்டமும், தினமொரு தீவிரவாதமுமாக அமைதி இல்லாத இடமாக மாறிப் போனது எப்படி?
இதன் பின்னணியில் சர்வதேச மத வியாபாரிகள், ஆயுத வியாபார முதலைகள், போதைப்பொருள் வியாபாரிகள், வெறுப்பு அரசியல் தலைவர்கள், Special Interest Groups இருப்பதை நான் கொஞ்ச காலமாகவே சந்தேகித்திருந்தேன்.
அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகளில் பலரும் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, கம்போடியா போன்ற பகுதிகளில் தீவிர மதப் பிரச்சாரம் செய்வதற்காகவே லீவு போட்டு விட்டுப் போய் தங்கள் ‘கடமைகளை’ச் செவ்வனே ஆற்றிவிட்டு வருவதை நான் கவனித்திருக்கிறேன்.
இது ஆர்வக் கோளாறால் அல்ல, இது ஒரு Organized and Well Funded Propaganda Machine. கிறித்துவத்தின் பல உள்பிரிவுகளும் இதைத் தங்கள் போப், பிஷப், ரெவ்ரன்ட் இன்னபிற அமைப்பாளர்களின் ஆசீர்வாதத்துடனேயே, பண பலத்துடனேயே முன்னெடுக்கின்றன. நவீன சவுதி அரேபிய ஆதரவு வஹாபி இஸ்லாமும் இதை அரசொப்புதலுடன் முன்னெடுக்கிறது.
இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை உள்ள ஏழை நாடுகளின் அதிகப் படிப்பறிவு இல்லாத கடற்கரை கிராமங்கள், மலைக்குடி மக்களை இவை குறிவைத்து முதலில் தாக்குவதும் நமக்குத் தெரியாத ஒன்றல்ல.
இவை பின்பு படிப்படியாக முன்னேறிப் பெரு நகரங்களான சென்னை, கோயமுத்தூர் போன்றவை நோக்கி நகர்கின்றன.
இத்தகைய Undeclared War Machine களின் புதிய நவீன ஆயுதமே தற்கால சோஷியல் மீடியா.
அதுவும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியா தளங்கள் பல கோடி மெம்பர்களை, அவர்களுடைய Complete and Personal Profile களைப் பெற்றுவிட்ட பிறகு, நவீனத் தொழில்நுட்ப ஆயுதங்களான Big Data, Data Warehousing, Data Analytics, Artificial Intelligence, Data Manipulation இவற்றின் உதவியுடன், பல லட்சம் மக்களை ஒரு ஸ்விட்ச் போட்டவுடன் ஆடவைக்கத் தேவைப்படும் மிகத் துல்லியமான உள் கட்டுமான வசதிகளை Cambridge Analytica போன்ற பல வியாபாரிகள் சோஷியல் மீடியா பின்னணியில் அவர்கள் ஆதரவுடன் கிளம்பி அமோகமாக வியாபாரம் செய்து வருகிறார்கள்.
உங்களிடம் பணம் மட்டும் இருந்து விட்டால் போதும். பப்ளிக் கன்சல்டன்சி என்கிற போர்வையில் பல லாபியிங் ஹைடெக் கம்பெனிகள் வாஷிங்டன் டிசி, பெவர்லி ஹில்ஸ், சான் ஃப்ரான்சிஸ்கோ, சாக்ரமெண்டோ, நியூயார்க், சிகாகோ போன்ற நகரங்களில் நிறையவே இருக்கின்றன.
இந்தக் கம்பெனிகளிடம் நீங்கள் குறிப்பிட்ட தொகைக்கு இத்தனை காலத்துக்கு, இந்தக் குறிப்பிட்ட நாட்டில், இன்ன இடத்தில், இந்த மாதிரியான ‘விழிப்புணர்வு’ போராட்டங்கள், கலாட்டாக்கள், ஸ்ட்ரைக்கள், டீவி மற்றும் ப்ரின்ட் மீடியா ப்ரொராம்கள் வேண்டும் என்று ஆர்டரே செய்து கொள்ளலாம். அவர்களே திட்டங்களையும் போட்டு பட்ஜெட்டும் சொல்வார்கள்.
சர்வதேச சட்ட திட்டங்களுக்கு ‘உட்பட்டே’ அதாவது அவற்றை வளைக்கவேண்டிய விதத்தில் வளைத்தோ உடைத்தோ பட்டி பார்த்துத் டிங்கரிங் செய்தோ, லஞ்சம் கொடுத்தோ, எப்படியோ காரியத்தை முடித்துக்காட்ட வேண்டியது அவர்களின் பொறுப்பு.
Fake News, Memes, Opinion Polls, Presstitutes, அல்லது நேரடி குட்டி, புட்டி லஞ்சம், விளம்பரங்கள், பேனர்கள், ஃப்ளெக்சி போர்டுகள் – இப்படி எல்லா தந்திரோபாயங்களையும் பயன்படுத்திக் காரியங்கள் கன கச்சிதமாக முடித்துத் தரப்படும்.
தமிழ்நாட்டில் இதற்கான பொலிடிகல் ஏஜெண்ட்கள் யார் யார் என்பது உங்களுக்கே தெரியும். மீடியாவை வளைத்துக் கையில் போட்டுக்கொண்டு தினமொரு அறிக்கையும் நாளொரு போராட்டமுமாக யார் ‘ஆதாய அரசியல்’ செய்கிறார்கள் என்பதும் உங்களுக்குப் புரியாததல்ல. இது அவர்களுடைய தொழில். அதற்கு மொழி, ஜாதி, இன, குழுப் போர்வைகள் சுற்றி உலா வருவதும் அதில் ஒரு அங்கமே.
இது புரியாவிட்டால் உங்களைப் போன்ற வடிகட்டிய அடி முட்டாள்கள் உலகத்திலேயே கிடையாது. You deserve what you get.
ஒரு காலத்தில் தேச ஒற்றுமையின் சின்னமாகத் திகழ்ந்த விகடன், ஹிந்து போன்ற பல பத்திரிகைக் குழுமங்கள் தரம் தாழ்ந்து பிட் நோட்டீஸ் கடைகளாக இப்போது மாறி விட்டதையும் இங்கே மனதில் வைத்து ஒப்பு நோக்கத் தவறாதீர்கள். புற்றீசலாய்க் கிளம்பி இருக்கும் பல டீவி சேனல்களும் இதில் அடக்கம்.
இந்திய நாட்டின் ஒற்றுமையை, தேசியவாதத்தைக் கிண்டல் செய்து, அதை உடைத்து நிர்மூலமாக்கி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா இவற்றுடன் தமிழக மோதல் போக்கு, மொழிச் சண்டைகள், நதிநீர்ப்பங்குச் சண்டைகள் இவற்றை நாடெங்கும் ஊக்குவிப்பதும் நான் மேலே சொன்ன வியாபாரிகளின் அஜெண்டாவே.
நியூயார்க் நகரத்தின் 87வது மாடியில், மிதமான ஏசியில் ஆடம்பர ஆஃபீஸ் ஒன்றில் உட்கார்ந்து ஒரு கிளாசில் உயர்தர ஒயின் சப்பிக்கொண்டு, கூடங்குளத்திலோ அல்லது இன்னொரு இந்திய குக்கிராமத்திலோ ஒரு ‘கஸ்டம்’ போராட்டத்தை ஆர்டர் செய்யமுடியும் என்பது அதிரடி ஹாலிவுட் திரைப்பட ஸ்க்ரிப்ட் அல்ல. நடைமுறையில் மிகச் சாத்தியமான ஒன்று.
அமெரிக்க எலெக்ஷன்களின் ரஷ்யா கை வைத்து விட்டதோ, அய்யய்யோ, அது இன்னும் என்னென்ன செய்யுமோ என்கிற பயத்தின் காரணமாகவே Cambridge Analytica மாய்மாலங்கள், ஃபேஸ்புக் பித்தலாட்டங்கள் ஓரளவுக்காவது இப்போது வெளிவந்திருக்கின்றன. இன்னும் வெளிவராத சோஷியல் மீடியா மர்மங்கள் ஆயிரம்.
உணர்ச்சிபூர்வமாகப் போராளிகளாகத் துள்ளாமல், எதையும் ஆழ்ந்து யோசித்துத் தெளிவுடன் முடிவெடுக்காத வரை, தற்போதைய தமிழகத்தின் நிலைமையும், தமிழனின் எதிர்காலமும் கவலைக்கிடமே.
The Price of Freedom is Eternal Vigilance.
கட்டுரை -லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்



