December 5, 2025, 7:38 PM
26.7 C
Chennai

ஒரு நூல் – ஒரு கருத்து: காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ…

காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ… என்ற அச்சம் தலைதூக்குகிறது. #தகுதியே_தடை

கடந்த வாரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் (OUP) வெளியிட்டுள்ள “Cost of Democracy – Political Finance in India”, Edited by Devesh Kapur, Milan Vaishnav எனும் நூலை படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த புத்தகத்தை படித்தபோது பணம் படைத்தவன் தான் தேர்தலில் நிற்க முடியும். காசு செலவு செய்தால் தான் வெற்றி பெற முடியும். இது தான் இன்றைக்கு தேர்தலில் நிற்கும் வேட்பாளரின் தகுதிகள். இது தான் தேர்தலின் சூத்திரமாக உள்ளது. இன்றைக்குத் தேர்தலில் நடப்பது தனி மனிதனின் ஆதாய – வியாபார (Trait Politics) அரசியல் களம் தான்.

பொது வாழ்வில் மக்கள் நலப் பணிகளால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இப்படித் தான் தேர்தல் அரசியலின் போக்கு செல்கின்றனது என்ற வகையில் ஆதாரங்கள், தரவுகள், நிகழ்வுகள், புள்ளி விவரங்களோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நூலின் முதல் அட்டைப் படத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களோடு, விலைப்பட்டியல் போன்று அவர்கள் வாக்குக்கு கொடுக்கும் பணத்தையும், அவர்களின் சின்னத்தையும் படமாக போடப்பட்டுள்ளதைப் பார்க்கவே அவமானமாக உள்ளது. அதில் அதிகபட்சமாக ஒரு வாக்குக்கு ரூ. 8,000/- என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.democracy book - 2025

தேர்தலில் பணம் முக்கியக் காரணியாக இருந்து ஜனநாயகத்தை அழிக்கிறது என்பதன் நோக்கத்தை இந்த நூலில் சொல்ல நினைத்தாலும், அந்த நோக்கத்தை விட நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது மணல் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகள் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று இந்த நூலில் இலைமறைவு காயாக கூறுகின்றது.

பண பலம், ஜாதி, புஜ பலம், ஆள் பலம், தகுதியற்ற தன்மை போன்ற நிலைப்பாடுகள் தான் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கிறது என்ற இந்த நூல் சம்பவங்களோடு சொல்கின்றது. இந்த நூலை சாதாரணமான பதிப்பகங்கள் வெளியிடவில்லை. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூல்கள் வெளியிடும் குழுவிற்கு தொடர்புள்ள அறிஞர்கள், அனைத்தையும் ஆய்வுச் செய்து களப்பணிகள் செய்து எடுக்கப்பட்ட தரவுகள் பொய்யாகுமா? இதைப் படிக்க படிக்க நாமும் அரசியலில் இருக்கின்றோமா என்று வேதனைப்படத் தோன்றுகிறது.

ஐந்தாண்டுகள் தன்னுடைய சொந்தத் தொழிலைப் பார்த்துவிட்டு எந்த மக்கள் பணியிலும் ஈடுபடாமல் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம், சட்டமன்றம் ஏன் அமைச்சர் கூட ஆகிவிடலாம் என்ற நிலைப்பாடுகள் ஏற்புடையதுதானா? பொது வாழ்வில் எந்த தியாகமும் இல்லாமல், அரசியலைப் பற்றி தெரியாத, செய்தித்தாள் படிக்காதவர்கள் கூட அமைச்சர்கள் ஆகிவிடலாம் என்றால், அப்படிப்பட்ட ஜனநாயகம் தேவைதானா?

சமீபத்தில் யேல் பல்கலைக்கழகம், தகுதியற்றவர்களை எல்லாம் பெரும்பான்மையோடு ஆதரித்துவிட்டார்கள் என்ற காரணத்தினாலே அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக, ஜனநாயகக் காவலர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தை ஒரு ஆய்வரங்கத்தில் வெளியிட்டது.

தகுதியானவர்கள் தேர்தலில் நிற்பதற்கே இன்றைய சூழ்நிலையில் யோசிக்கின்றார்கள். நமக்கென்ன வந்தது, நம்மால் முடிந்த பணிகளை செய்துவிட்டு போவோம் என்று நல்லவர்கள் எல்லாம் நினைக்கத் தொடங்கி விட்டனர். பிறகெப்படி ஆரோக்கியமான மக்கள் நல அரசியல் நிலைத்து நிற்கும்.
ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு “Elections for Sale, Edited by, Fredrice Charles Scaffer” நூலில் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தது.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories