கிறிஸ்தவ மதத்திலே குழப்பம் விளைவித்தேனாம்? –
சர்ச்சுகளைப் சபித்தேனாம் –
பாதிரியார்களை பழித்தேனாம் –
கன்னிகாஸ்திரிகளை கடுமையாகத் திட்டினேனாம் –
– இப்படியெல்லாம், குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் நான் – ஆம், கிறிஸ்துவ மதத்திலே குழப்பம் விளைவித்தேன் – மதங்கள் கூடாது என்பதற்காக அல்ல –
மதம் மாற்றும் பக்கிகளின் துண்டுச் சீட்டு ரோதனை கூடாது என்பதற்காக !
ஆம், சர்ச்சுகளைச் சபித்தேன் – சர்ச்சுகள் கூடாது என்பதற்காக அல்ல – சர்ச்சுகள் நவீன யுகத்தின் லாட்ஜ்சுகள் ஆகி விடக் கூடாது என்பதற்காக –
பாதிரிகளைப் பழித்தேன் –
அவர்கள் பாதிரிகள் என்பதற்காக அல்ல –
நிஜமாகவே ஃபாதர் ஆக தினம், தினம் முயல்கிறார்கள் என்பதற்காக –
கன்னிகாஸ்திரிகளை கடுமையாகத் திட்டினேன் –
அவர்கள் கண்ணியம் மறந்து காமுக பாதிரிகளுக்குத் துணை போனார்கள் என்பதற்காக –
உனக்கேன் இவ்வளவு அக்கறை ,உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள் –
நான் ந.முத்துராமலிங்கம் – அந்த அப்பழுக்கற்ற தேசியவாதியின் பெயரை வைத்துக் கொண்டு நான் கேட்கக் கூடாதா?-
சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல –
நமது நாட்டில் தான் – பிழைக்கவந்த, கொள்ளையடிக்க வந்த கூட்டத்தையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் கூத்தாடிகளைக் காண்கிறேன் –
நாய்களுக்கு எழும்புத் துண்டுகளை வீசுவது போல; ரொட்டித் துண்டுகளைக் காண்பித்து மதம் மாற்றியவனையெல்லாம் –
தூய்மையான பாதிரியாராக சித்தரித்த சினிமாக்களைக் காண்கிறேன் –
அறநெறியாம் திருக்குறளை கிறிஸ்துவ நூல் என்று பிதற்றும் திருடர்களைக் காண்கிறேன் – வெட்கமே இல்லாமல் விஷ்னு சகஷ்கரநாமத்தை –
ஏசு சகஸ்கரநாமம் என்று பெயர் மாற்றி சர்ச்சுகளில் பாடி மகிழும் கேவலத்தைக் காண்கிறேன் –
ஐந்து முறை ஆண்ட இந்துக் கடவுள்களை மட்டும் இல்லை என்று கூறும் ஒரு கட்சியின் ஆஸ்தான பாதிரி – பிங்க் பாவாடை அணிந்துவந்து இந்த நாட்டை கிறிஸ்துவ நாடென்று அறிவிக்கும் கொடுமையைக் காண்கிறேன் –
போராடுகிறேன் என்ற போர்வையில் பனிமயமாதா ஆலயத்திலிருந்து கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு 13 பேர் சாவுக்குக் காரணமான பாதிரிகளைக் காண்கின்றேன் –
அத்தனைக்கும் மேலே – இந்த பாதிரிகளின் காம வலையில் சிக்கிச் சின்னாபின்னமாகும் எண்ணற்ற குழந்தைகளின், குடும்பப் பெண்களின் கதைகளை பாலிமர் TV மற்றும் தினமலரில் மட்டும் அனுதினமும் காண்கிறேன் –
இதோ இன்று கேரளத்தில் இந்தப் பாதிரிகளால் கண்டமாக்கப்பட்டு கதிகலங்கி நிற்கிறாளே இந்தப் பெண் அவள் பெயர் தேவையில்லை – அவள், செய்த குற்றம் என்ன?-
பாவம், தளபதி ஸ்ரீவித்யா போல அறியாத வயதில் செய்த சின்னஞ் சிறு தவறுக்காக மனம் வருந்தி – பாதிரியாரிடம் பாவமன்னிப்புக் கேட்கப் போனாள். _
ஆனால், அந்தப் பாதிரியார் அவள் பாவத்தை மன்னிக்க விலையாகக் கேட்டது –
அந்த அபலையின் கடைக்கண் பார்வையை – அத்தோடு விட்டானா அந்தப் பாதிரி?-
தனது தோஸ்த் பாதிரிக் கெல்லாம் போன் போட்டு, போன் போட்டு –
கடைசியில் பங்குத் தந்தைகள் எல்லாம் பங்கு போட்டுக் கொண்டார்கள் அந்தத் தங்கையை –
போதாக்குறைக்கு இவன்கள் சாப்பிட்ட பில்களுக்கெல்லாம் அவள் அப்பாவிக் கணவனின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை வேறு உறுவியிருக்கிறார்கள் –
இவர்களின், லீலைகளை அறிந்து கொண்ட அந்தக் கணவன் ஓடினான், ஓடினான் மீடியாக்களைத் தேடி ஓடினான், போலீசைத் தேடி ஓடினான். –
பிஷப்புகளைத் தேடி ஓடினான் – யாராவது அவனது ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்
– வாட்டத்தைப் போக்கி இருக்க வேண்டும் –
செய்தார்களா? இந்த மதசார்பற்ற மீடியாக்கள் –
வழக்கு பதிவு செய்தார்களா இந்தக் காவல்துறை –
அதனால்தான் நான் எழுதினேன் –
இன்று, அந்தப் பாதிரிகளின் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது காவல்துறை –
இன்னும் இவர்களையும், இவர்களைப் போன்றவர்களையும் கைது செய்து தண்டிக்கும் வரை எழுதுவேன் –
மதமாற்றம் தேசிய அபாயம் – என்பதை நடுநிலை இந்துக்கள் உணரும் வரை எழுதுவேன்
– தேசப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம் –




