காந்தி மீதும் அவர் பேச்சை மறுதலிக்காமல் தலையாட்டிக் கொண்டிருந்த தலைவர்கள் மீதும் மானம் இழந்து, அல்லல்பட்டு நாடு திரும்பியவர்களுக்குக் கடும் கோபம் உண்டானது.
டெல்லி நகர வீதிகளிலே உணவிற்காகவும் இருப்பிடத்திற்காகவும் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தவர்களுக்கு கண் முன்னே கண்ட காட்சிகள் கொதிப்படையச் செய்தன.
அந்த பண்டைய நகரத்தில், தேசத்தின் பெருமை மிகு தலைநகரத்தில் ஏதோ இந்த நாடு தங்களுக்கே உரிமையானது போல ஏராளமான முஸ்லீம்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
அரசாங்கத்திலே செல்வாக்கு பெற்ற முஸ்லீம்கள், தொழிலிலே, வணிகத்திலே கொடி கட்டிப் பறந்த கொண்டிருந்த முஸ்லீம்கள்… நகரத்தின் மையப்பகுதியிலே முஸ்லீம்களுக்கென பிரத்யேகமாக எல்லா வசதிகளும் நிறைந்த காலனிகள்..
இந்தக் காட்சிகள் குருதியைக் கொப்பளிக்கச் செய்தது.
போதாக்குறைக்கு.. காந்தியோ…. அகதிகள் முகாமிற்கு வருகை தந்தார்…
எதற்காக? முஸ்லீம்களின் நலன்களை பாதுகாக்க…
அகதிகளால் முஸ்லீம்களுக்கு எந்த பிரச்னைகளும் வந்து விடக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக… முஸ்லீம்கள் ஆங்காங்கே அவர்கள் தங்கி இருந்த பகுதிகளிலேயே இருக்க வேண்டும்… எங்கும் போய் விடக் கூடாது என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஹிந்துக்களிடமும், சீக்கியர்களிடமும் ஆயுதங்கள் இருந்தால் உடனே அவர்களிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்று நேருவிடமும், பட்டேலிடமும் காந்தி வலியுறுத்தினார்.
முஸ்லீம்கள் எவ்வித பயமுமின்றி வாழ வகை செய்ய வேண்டும் என்று கூறினார். காந்தியின் இந்த செயல்களையெல்லாம் கண்ட அகதிகள் முகம் சுளித்தனர். காந்தியின் இந்த செயல்களெல்லாம் அவர்களுக்கு வக்கிரத்தனமாகத் தோன்றியது.!
முதுகெலும்பில்லாத தங்கள் தலைவர்களைக் கண்டு மனம் வெதும்பினர். பாகிஸ்தான் தங்களை இப்படி நடத்தவில்லையே ?
இவர்கள் மட்டும் ஏன் இப்படி..?! கட்டுக்கடங்கா கடும் கோபத்துடன் முஸ்லீம்கள் மீது பாய்ந்தார்கள்… பாரதத்தில் வாழ் முஸ்லீம்கள், வேறு முஸ்லீம்கள் எனும் பாகு பாடெல்லாம் அவர்களுக்குத் தோன்றவில்லை.
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.. எனும் எண்ணமே மேலோங்கியது… அவர்கள் கண்களுக்கு எல்லா முஸ்லீம்களுமே எதிரிகளாகத் தோன்றினார்கள்..!
நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்த பின்பு இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்பதாக எண்ணினார்கள். டெல்லி வாழ் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக திரும்பிய தங்கள் ஹிந்து சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
முஸ்லீம்களுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினார்கள். பல்வேறு குழுக்களாக தங்களை பிரித்துக் கொண்டு, என்னவெல்லாம் ஆயுதங்கள் தங்கள் கைகளுக்கு கிடைத்ததோ, அவற்றையெல்லாம் திரட்டிக் கொண்டு முஸ்லீம்களை அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டி அடித்தார்கள்.
டெல்லியிலிருந்த அனைத்து முஸ்லீம்களின் மசூதிகள் மற்றும் வழிபாடு இடங்களையும் கைப்பற்றினார்கள். வந்து கொண்டிருந்த குளிர்காலத்தை எதிர்கொள்ள தங்களுக்குத் தேவைப்பட்ட வசிப்பிடங்களை அவர்களே தேடிக் கொண்டார்கள்.
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்





