ஜின்னாவின் முஸ்லீம் லீக் வெறியர்கள், குறிப்பாக கல்கத்தாவில் நடத்திக் காட்டிய ‘ நேரடி நடவடிக்கை, தேசத்தின் சரித்திரத்தில் ஒரு கருப்புப் பக்கம். பாரதத் தாயின் மேனியிலே விழுந்து விட்ட ஆறாத் தழும்பு …
வெறி பிடித்தவர்கள் போல இங்கும் அங்குமாக அலைந்தார்கள் முஸ்லீம் வன்முறையாளர்கள். கல்கத்தா நகரெங்கும்…வங்கத்தின் பிற நகரங்கள்.. கிராமம் கிராமமாக… எங்கெல்லாம் அவர்கள் பெரும்பான்மையில் இருந்தார்களோ அங்கெல்லாம்…
’நவ்காளி ‘ என்று ஒரு மாவட்டம்… அந்த மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமாகச் சென்று வீடுகளுக்கு தீ வைத்தார்கள்… ஆண்களை கொன்று குவித்தார்கள்… ஆட்டு மந்தை போல் பெண்களைத் தூக்கிச் சென்றார்கள்.. ‘ நவ்காளி ‘யில் ஒரு இனப்படுகொலையே நடந்தேறியது…
இந்திய பத்திரிகைகள் யார் யாரைக் கொலை செய்கிறார்கள் என்று குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்தன….
இந்த கல்கத்தா கலவரங்கள் பற்றி குறிப்பாக ‘நவ்காளி கலவரங்கள்‘ குறித்து வாசகர்கள் சற்றே விரிவாகத் தெரிந்து கொள்வது நல்லது!
‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு‘ புத்தகத்தில், அதன் ஆசிரியர் ஹொ.வெ.சேஷாத்ரி எழுதியுள்ளதை பார்க்கலாம். (TRAGIC STORY OF PARTITION by H.V.SESHADRI).
(அமரர்) திரு.ஹெச்.வி.சேஷாத்திரி அவர்களை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்…
பழகுவதற்கு மென்மையானவர்.. அவர் எழுத்துக்களில் ஆவேசமோ,ஆக்ரோஷமோ இருக்காது.ஆதாரங்களும்,மேற்கோள்களும், புள்ளி விவரங்களும் இருக்கும்… அது அவரது பாணி…
அவரது வார்த்தைகளில்…. ஆகஸ்ட் 16ஐ ‘ நேரடி நடவடிக்கை தின ‘ மாக அனுஷ்டிக்க அறைகூவல் விடுத்தது முஸ்லீம் லீக்.
‘’ சுதந்திரமான முழு இறையான்மை கொண்ட பாகிஸ்தான் அமைக்கப்படுவதற்கு குறைவான எதிலும் திருப்தி அடைய மாட்டார்கள் இந்திய முஸ்லீம்கள்.
இஸ்லாமிய தேசம் நேரடி நடவடிக்கையில் இறங்குவதற்கான நேரம் வந்து விட்டது ‘’.
தீர்மானம் நிறைவேறிய பின்னர் பேசிய ஜின்னா அறிவித்தார் :‘’ நாம் சரித்திரச் சிறப்பு மிக்க முடிவெடுத்திருக்கிறோம்.இன்று சட்டத்தின் நடைமுறைகளுக்கு நாம் விடை கொடுத்து விட்டோம்.
இரண்டு தரப்பிலும் நம்மை துப்பாக்கி முனையில் பேரம் பேசச் செய்தார்கள்.ஒரு தரப்பாரிடம் அதிகாரமும்,இயந்திரத் துப்பாக்கியும்,மற்ற் தரப்பின் கையில் ஒத்துழையாமை,சட்ட மறுப்பு நடத்துவோம் என்ற மிரட்டல்.இந்த சவாலை சந்திக்க வேண்டும். நம்மிடமும் துப்பாக்கி உள்ளது.’’
ஜின்னா தனது துப்பாக்கியை தூக்கிய விதம் இதுதான். ஆகஸ்ட் 16 நெருங்க நெருங்க கூட்டங்கள், ஊர்வலங்கள்…
ஹிந்துக்களுக்கு எதிராக ’ஜிஹாத்‘ நடத்தும்படி அழைப்பு, அரசாங்க விதிமுறைக்கு எதிரான எழுச்சி எல்லாவற்றையும், எல்லா சிறிய பெரிய நகரங்களிலும் கட்டவிழ்த்து விட்டது லீக். வங்காளம் மற்றும் சிந்துவிலும் இருந்த முஸ்லீம் லீக் அரசுகள் ஆகஸ்ட்16 ஐ விடுமுறை தினமாக அறிவித்தன.
வங்காள முதல்வராக இருந்த ஹெச்.எஸ்.சுஹ்ரவர்த்தி ( H.S.SUHARWARDY ) மத்தியில் அதிகாரம் காங்கிரஸ் கைக்கு மாற்றப்பட்டால்,வங்காளத்தை தனி நாடாகப் பிரகடனம் செய்யப் போவதாக மிரட்டினார்
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




