மறு சீராய்வு மனு குறித்த விவாதம் உச்ச நீதிமன்றத்தில் திறந்த நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க அளவில் ஐயப்ப நம்பிக்கையாளர்களுக்கு சாதகமாகவே உள்ளது. அடுத்த விசாரணை தேதி மண்டல காலம் கடந்தே என்பதே பல நடைமுறை சிரமங்களுக்கு, நம்பிக்கையாளர்களுக்கு மன நிம்மதி இல்லாதாவதற்கு இடம் கொடுப்பதாக உள்ளது.
மறு சீராய்வு மனு உச்ச நீதி மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே பாதி வெற்றிதான். ஏற்கனவே கொடுத்த தீர்ப்பு பல விஷயங்களை கருத்தில் கொள்ளவில்ல மேலும் விசாரணை தேவை என்பதையே உணர்த்துகிறது
மறு சீராய்வு மனு விசாரணையில்.உள்ளதால் கேரள அரசு நேர்மையான, மக்களுக்கு மதிப்பளிக்கும் அரசாக இருந்தால் சபரிமலை விஷயத்தில் அடம் பிடித்து ப்ரச்னை செய்யாது உச்ச நீதி மன்ற மறு தீர்ப்பிற்கு காத்திருக்கலாம்.
அனைத்து வயது பெண்கள் போக சட்டப்படி தடை இல்லை. ஆனால் இளம் பெண்களை அங்கு. கேரள அரசு கொண்டு போக வேண்டும் என்ற உத்தரவும் அரசுக்கு இல்லையே. பின் ஏன் அரசுக்கு அவசரம் ?
தற்போது அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு உச்ச நீதி மன்ற ஸ்டே இல்லை. முந்தைய தீர்ப்பிற்கும் ஆர்டருக்கும் ஸ்டே இல்லை என கோர்ட் இன்று கூறியுள்ளது.
உண்மையில் முந்தைய உச்ச நீதி மன்ற தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு உள்ளதே தவிர, கேரள அரசிற்கு ஆர்டர், டைரக்ஷன் எதுவும் இல்லை.
இளம் பெண்களை அங்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உத்திரவாதம் எடுத்து அதை கேரள அரசு செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்டர் கேரள அரசுக்கு கோர்ட் கொடுக்கவே இல்லை. அவ்வாறு இருக்க , பல நீதி மன்ற தீர்ப்புகளை கிடப்பில்.போட்ட, போட்டிருக்கும்.கேரள கம்யூனிஸ்ட் பிணராய் அரசு சபரிமலை.விஷயத்தில் மட்டும் அவசரம் காட்டும் அவசியம் என்ன?
லட்சக்கணக்கில் கேரள அரசு செலவு செய்து. இளம் பெண்கள் சபரிமலை வரவைக்க விளம்பரத்திற்கு செலவு செய்வதோடு வேறு மறைமுக சலுகைகளாகவும் கொடுத்து பெண்களை சபரிமலை கொண்டு செல்ல பல விதங்களில் கேவலமாக கம்யூனிச அரசு முயன்று செயல்படுகிறது.
இனியாவது, இந்த மண்டல காலத்தில், கேரள கம்யூனிஸ்ட் அரசு, உச்ச நீதி மன்றத்தில் உள்ள மறு சீராய்வு மனுவின் விசாரணை முடிந்து மறு தீர்ப்பு வரும்வரை இந்த விஷயத்தில் பக்தர்களின், நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, சபரிமலை நம்பிக்கை தகர்க்க வேண்டும் என்ற நோக்கம் மாற்றி செயல்பட வேண்டும்.
இந்த மண்டல காலமும்., அதற்குபின்பும், ஐயப்ப நம்பிக்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் வரை சபரிமலை நம்பிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை யல்லாதவர் களுக்குமான போராட்ட களமாகவும், அவ்வாறு களத்தில்.உள்ளோருக்கும், உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்த இந்து உணர்வாளர்களுக்கும் உணர்வு மிகு வினாடிகள் கொண்ட காலங்களுமாகவே இருக்கும்.
ஐயப்பன். நடத்தும் இந்த சோதனை , பரீட்சை காலம் இந்துக்கள் ஒற்றுமையுடன் , நம்பிக்கையுடன் போராடி அவனருளால் தர்ம ஜயமாக சுபமாக வெல்வோம்.
சரணம் ஐயப்பா ..
– அனு சந்திரமௌலி





