காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 108

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
godse gandhi - 2026

ஜனவரி மாதம்19ந் தேதி இரவு…

மதன்லால் பஹ்வாவும்,கோபால் கோட்ஸேயும் ஹிந்து மஹா சபா பவனில்,அறையில் உறங்கினார்கள்.

திகம்பர் பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவும் வரவேற்பறை ஹாலில் உறங்கினார்கள்.

கார்கரே,ஆப்தே மற்றும் நாதுராமுடன் அன்றைய இரவை மெரினா ஹோட்டல் அறையில் கழித்தார்.

இரவு முழுவதும் மழை தூறிக் கொண்டே இருந்தது.

விடியற்காலையில் தூறல் நின்று,காலை 7.30 மணியளவில் வானம் தெளிவாகி விட்டது.

அவர்கள் அனைவரும் காலையில் ஹிந்து மஹா சபா பவனில் சந்திக்க வேண்டும் என்பது ஏற்பாடு.

ஆனால் 8.30 மணியளவில்,ஆப்தேயும்,கார்கரேயும் மட்டுமே வந்தனர்.

நாதுராமிற்கு அடிக்கடி வரக்கூடிய ‘மைக்ரெய்ன் ‘ தலைவலி காரணமாக ஹோட்டல் அறையிலேயே படுத்திருப்பதாகவும்,அவர் பின்னர் வந்து தங்களோடு வந்து சேர்ந்துக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆப்தே, திகம்பர் பாட்கேயையும்,ஷங்கர் கிஷ்டய்யாவையும்,தன்னோடு பிர்லா ஹவுஸிற்கு வரும்படியும்,

அவர்கள் அங்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அங்கு சென்ற பின் தெரிவிப்பதாகவும் கூறினார்.

’ கொலைத் திட்டத்தில் ‘ மதன்லால் பஹ்வாவிற்கும்,கோபால் கோட்ஸேயிற்கும் முக்கியமான பாத்திரங்கள் யோசிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் உடனடியாக பிர்லா ஹவுஸிற்கு செல்லவில்லை.

இதற்கு முன்பாக அவர்கள் அங்கு சென்றதும் இல்லை.

குளிப்பதற்கு தண்ணீர் சூடாவதற்காக ஹிந்து மஹா சபா பவனிலேயே அவர்கள் காத்திருந்தார்கள்.

கார்கரே,தாங்கள் செயல்பட வேண்டிய பிர்லா ஹவுஸ் வளாகத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டபடியால்,தற்போது போவது தேவையற்றது என்று கருதி பவனிலேயே தங்கி விட்டார்.

ஒரு டாக்ஸியில்,ஆப்தே,திகம்பர் பாட்கே மற்றும் ஷங்கர் கிஷ்டய்யா ஆகிய மூவரும் பிர்லா ஹவுஸிற்கு சென்றனர்.

சில நிமிடங்கள் பிரதான வாயில் அருகே இருந்தபின், அவர்கள் இருவரையும் வீட்டிற்கு பின்புறமிருந்த பணியாட்களுக்கான QUARTERSக்கு SERVICE ENTRANCE வழியாக ஆப்தே அழைத்துச் சென்றார்.

பிர்லா ஹவுஸின் தோட்டம் இரண்டு மட்டத்தில் இருந்தது.

பிரதான வீட்டிலிருந்து ஒரு சிறிய ‘ கோடை வீட்டிற்கு ‘ ( சில பணக்காரர்களின் வீட்டில் இப்படி ஒரு ஏற்பாடு இருக்கும் ) செல்லும் வழி அகன்ற புல்வெளியாக இருந்தது.

பிரார்த்தனை நேரத்தில் காந்தி அமரக்கூடிய இடத்தை ஆப்தே,பாட்கேயிற்கு சுட்டிக் காட்டினார்.

அது புல்வெளியின் மேல்மட்டத்தில் இருந்தது.

வீட்டின் பின்புறமிருந்த பணியாட்களுக்கான வீடுகளில்,ஒரு வீட்டின் பின்புற ஜன்னலிலிருந்து காந்தி உட்காரும் இடம் 4 அல்லது ஐந்து அடிகள் தூரத்திலிருந்தது.

எண் 3 என்று இலக்கமிடப்பட்டிருந்த இந்த அறை CHOTU RAM எனும் பிர்லா குடும்பத்தின் பிரதான கார் ஓட்டுனருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.’

ஆப்தே குறிப்பிட்ட ஜன்னல் ‘ ஒரு அலங்கார சிமெண்ட் ஜாலி ‘.

இந்த ஜாலியைப் பற்றிய நல்ல விளக்கத்தை,
காந்தி கொலை வழக்கின் போது,

டெல்லி போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் சர்தார் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,

‘ அது குறுக்கு நெடுக்காக அமைந்த நேர் அமைப்பு அல்ல.அதிலிருந்த பல்வேறு துவாரங்களும்.வெவ்வேறு அளவில் இருந்தன.

அதிலிருந்த மிகப்பெரிய துவாரத்தின் அளவு 6’’ x 3’’.இது போன்று,இந்த அளவிலான துவாரங்கள் 8 இருந்தன.அந்த ஜாலியில் மொத்தம் 26 துவாரங்கள் இருந்தன’.

பின்னாளில்…

தன் வாக்குமூலத்தில்,பாட்கே கூறுகையில்,
‘’ ஆப்தே ஒரு நூலைக்கொண்டு ஜாலியின் துவாரங்களை அளவெடுத்தார் ‘’.

( தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

கீழே காணும் இந்த சிமெண்ட் ஜாலி வழியாகத்தான் 20/01/1948 அன்று காந்தியை சுட்டுக் கொல்ல திட்டமிடப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.