தில்லி அணிவகுப்பில் தமிழக மானம் பறிபோனதா?!

Published:

republic parade - 2026

]தில்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகத்தின் சார்பில் கொண்டு வரப்பட்ட வாகனம் குறித்து பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் முன் வைக்கிறார்கள் நெட்டிசன்கள்.

குறிப்பாக, இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம். ஆளுமைமிக்க நம்மை உலகுக்கு அடையாளம் காட்டும் விதத்தை பாருங்கள்.. கோவணத்தோடும்,குடிசைகளோடும்
குடியரசு தின ஊர்வலத்தில்.. வீரம் விளைந்த மண்ணில்  அடிமைகள் ஆண்டால் இப்படித்தான்..! – என்று ஒரு கருத்தை வேறு பதிவிட்டு, பரவவிடுகிறார்கள்.

republic parade2jpg - 2026

ஆனால், ஏழை எளியவர்கள், விவசாயிகள் என்பதை எப்படிக் காண்பிப்பதாம்? என்றும், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை முறை அப்படிப்பட்டது தான் என்றும், எனவே, வாகனத்தின் முன்னும் பின்னும், தமிழக கலாசாரத்தை மையப்படுத்திய வடிவமைப்பே இடம்பெற்றிருந்தது என்றும் கூறுகிறார்கள் வேறு பிரிவினர்.

உண்மையில், மதுரை வந்த காந்தி, அரையாடை மனிதர் ஆனார். கோவணத்துடன் அவர் மீண்டும் ஊர் போய்ச் சேர்ந்தார். அதற்குக் காரணமாக அமைந்தது மதுரையைச் சேர்ந்த விவசாயிகளின் அரையாடைதான்! ஆகவே இந்த சர்ச்சைகள் தேவையற்றவை என்பதுதான் பலரின் வேண்டுகோள்!

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img