spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 132)

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 132)

- Advertisement -

நகர்வாலாவின் உத்தரவினை ஏற்று அந்த இரண்டு டெல்லி போலீசாரும் அன்று மாலையே டெல்லி செல்வதற்கு ரெயில் ஏறினர்.24 மணி நேரம் பயணித்து டெல்லியை சென்றடைந்தனர்.

ரெயில் நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸியில் நேராக தங்கள் தலைமையகத்திற்கு சென்றனர்.

பம்பாயில் தாங்கள் செய்தவற்றைப்பற்றி உயரதிகாரிகளுக்கு விளக்கிக்கூறினார்கள்.

கார்கரேயை கைது செய்ய இயலவில்லை,அந்த ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகை ஆசிரியர் யார் என்று தெரிந்துகொள்ளவும் இல்லை ; அதற்கான காரணங்களையும் விளக்கினார்கள்.

தாங்கள் பம்பாயில் அந்த மாகாண போலீசாரால் நடத்தப்பட்ட விதம் குறித்தும்,பம்பாய் போலீசார் மிகுந்த இறுமாப்புடன் நடந்துக்கொண்ட விதம் குறித்தும் கூறினார்கள்.

‘’ நாங்கள் ஒரு விதமான வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டோம் ‘’ என்று பதிவுச்செய்தார்கள்.

அடுத்த நாள் காலையில்,அந்த இரண்டு டெல்லி போலீசாருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்த தகவல்கள் டெல்லியின் இன்ஸ்பெக்டர் ஜெனரலும்,புலனாய்வுத்துறையின் டைரக்டருமான T.G.சஞ்சீவியை அடைந்தபோது,அவர் அதனை பெரிதுப்படுத்த விரும்பவில்லை.

காந்தியை கொலை செய்யும் சதியில் சம்பந்தப்பட்டவர்கள்,பம்பாய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக தெரிந்தபடியால்,அவர்களை கண்டுபிடிக்க பம்பாய் போலீசாரின் முழு ஒத்துழைப்புத் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தபடியால் வேறு வழிகளில் முயற்சிக்க முடிவுச்செய்தார்.

பம்பாய் புலனாய்வுத்துறையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் U.G.ராணா ஒரு பணிநிமித்தமாக அப்போது டெல்லி வந்திருந்தார்.

சஞ்சீவி,ராணாவை வரவழைத்து அவரிடம் மதன்லால் பஹ்வாவின் முழு வாக்குமூலத்தின் நகலையும்,அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பையும் கொடுத்தார்.

அதனை தன் பொறுப்பில் எடுத்துச்சென்று பம்பாய் போலீசாரிடம் கொடுத்து அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தபட்டவர்களை கைதுச்செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கூற அறிவுறுத்தினார்.

ராணாவிடம் உத்தரவு கொடுக்கப்பட்ட நாள் ஜனவரி மாதம் 25ந்தேதி.

அவர் அன்று பிற்பகல் விமானத்தை பிடித்திருந்தாலும் இரவு 9 மணியளவில் பம்பாயை அடைந்திருக்கமுடியும்.

விமானத்தில் பயணிக்க சீட் கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஏனென்றால் இந்தியாவில் ஒவ்வொரு விமானத்திலும் அரசு அதிகாரிகள் பயணிக்கவென்று 4 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.அரசுப்பணியில் பயணிக்கவேண்டியவர்கள் யாரும் பயணிக்காவிட்டால் கடைசிநேரத்தில் அவை வேறு பயணிகளுக்கு ஒதுக்கப்படும்.

ஆனால் ராணா விமானத்தில் பயணிக்கவில்லை.மாறாக ரயிலில் பயணித்தார்.அதுவும் நேராக பம்பாயிற்கு அல்ல.அலகாபாத்திற்கு.

இன்னும் பார்த்தால்,ஆப்தேயும் நாதுராமும் டெல்லியிலிருந்து தப்பிச்செல்ல எப்படி பயணித்தார்களோ கிட்டத்தட்ட அப்படியே.சொல்லபோனால் அவர்களைவிட இன்னும் தள்ளியே.

பின்னாளில் இதுபற்றி விளக்கமளித்த ராணா,டாக்டர்கள் தன்னை விமானத்தில் பயணிப்பதை தவிர்க்கச்சொல்லி கூறியிருந்ததாகவும் அதனாலேயே விமானத்தில் செல்வதை தவிர்த்ததாகவும் தெரிவித்தார்.

பம்பாயிற்குச் நேரடியாகச்செல்லும் எந்த ரயிலிலும் இடம் கிடைக்கவில்லையென்றும் அதனாலேயே சுற்றி பயணிக்க நேரிட்டது என்றும் விளக்கமளித்தார்.

அவரைக் கேள்வி கேட்கும் நிலையிலிருந்த உயரதிகாரிகள் யாரும் அவரை கேள்வி கேட்டதாகவே தெரியவில்லை,அவருடைய விளக்கம் குறித்து வியப்பும் தெரிவிக்கவில்லை.

ஜஸ்டிஸ் கபூர் இதுபற்றி குறிப்பிடுகையில்,போலீசார் நத்தை வேகத்தில் சாவகாசமாக செயல்பட்டதாக கண்டனம் தெரிவித்தார்.

ராணா செயல்பட்டவிதம்குறித்து இன்னொரு விளக்கமும் கொடுக்கப்பட்டது.

ராணா வெகுவிரைவில் பணியிலிருந்து ஓய்வுபெறும் நிலையிலிருந்தார்.

டெல்லிக்கு அவர் ஒரு பணி நிமித்தமாக வந்திருந்தார்.

ஒரு நல்ல ஹிந்து என்ற முறையில்,பம்பாய் பயணிக்கும் முன்னர் அலகாபாத்தில்,கங்கை,யமுனை,சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும்,திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடிவிட்டுச் செல்லலாம் என்று எண்ணியிருக்கலாம்.

அலகாபாத்தில் அவருக்கு தேவைப்பட்டது இரண்டு மணி நேரம்தான்.

அலகாபாத் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் டெல்லி-கல்கத்தா மெயிலை அடுத்து வரும் கல்கத்தா- பம்பாய் மெயிலை பிடித்துவிடலாம் என்றெண்ணியிருக்கலாம்.

பயணிகள் இந்த முறையில் பயணிப்பது வழக்கமே.

திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுவது ஹிந்துக்களுக்கு புனிதமான ஒன்றல்லவா !

ஒரு விஷயம் தெளிவாகிறது….

காந்தியை கொல்ல நடந்த சதி ‘ சீரியஸாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை ‘.

அதற்கு இயற்கையான மெத்தனம் காரணமா அல்லது காந்தி கொல்லப்படுவதாக இருந்தால் கொல்லப்படட்டும் என்று வேறு சிலரும் எண்ணி விட்டு விட்டார்களா?

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

~ எழுத்து: யா.சு.கண்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe