திருநெல்வேலி: மாணவன் வளாக ஜனநாயகத்தை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை நாளை, நெல்லையில் மாவட்ட அளவிலான ஏபிவிபி., அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.
இது குறித்து ஏபிவிபி அமைப்பின் மாநகர செயலாளர் விஷ்ணு மண்டல அமைப்புச் செயலர் பிருதிவிராஜன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி கங்காதரன் மாநில செயற்குழு உறுப்பினர் ராமன் ஆகியோர் கூறியவை…
ஏபிவிபி – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பானது மாணவர் களிடையே தேசபக்தி, தலைமைப் பண்பு , சமூகப் பொறுப்புணர்வு ஆகிய நற்பண்புகள் வளர்தெடுப்பதற்கு பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை செய்து வருகிறது.
மாணவர்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டு கல்விலும், சமூகத்திலும் பல மாற்றங்களை நிகழ்த்துவதற்காக தேசிய, மாநில, மாவட்ட அளவில் பல்வேறு தலைப்பின் கீழ் மாநாடுகளை நடத்தி வருகின்றது.
வருகின்ற 24.02.2019 ஞாயிறு அன்று நெல்லை சங்கீத சபாவில் திருநெல்வேலி மாவட்ட அளவிலான மாணவர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு தமிழகத்தில் மாணவர் வளாக ஜனநாயக மீட்டெடுக்க வேண்டும் என்ற தலைப்பில் நடைபெறும்.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் தமிழ் நாயகம் மற்றும் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் திருமதி சவிதா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் மாநில அளவிலான கல்வி பிரச்னைகள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்னைகள், சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்த முக்கிய தீர்மானங்கள், நிறைவேற்றபட உள்ளது.
மாநாட்டின் ஒருபகுதியாக ஊர்வலம் , பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மாணவத் தலைவர்கள் தமிழகத்தில் உள்ள கல்வி பிரச்னைகள் குறித்தும் நெல்லை மாவட்டதில் உள்ள கல்வி மற்றும் சமூக பிரச்னைகள் குறித்தும், மாணவர் ஓட்டு யாருக்கு? என்ற தலைப்பில் எழுச்சி உரையும் நிகழ்த்த உள்ளனர்.
தமிழக பள்ளி கல்வித் துறை மாவட்டங்களான சங்கரன்கோயில், தென்காசி, அம்பை, வள்ளியூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளிலிருந்து சுமார் 1000 மாணவ மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.