spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமோடியால்... பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பற்ற புகலிடம் ஆகியிருக்கிறது பாகிஸ்தான்!

மோடியால்… பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பற்ற புகலிடம் ஆகியிருக்கிறது பாகிஸ்தான்!

- Advertisement -

imran khan modi

சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழியை இந்தியாவை மிரட்டுவதற்காக பாகிஸ்தான் பயன்படுத்த நினைத்தால் அதை வைத்தே பாகிஸ்தானை மிரட்டுகிறார் மோடி.

சீனா பாகிஸ்தானிலே முதலீடு செய்திருக்கும் தொகை மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் கோடி. சவூதி பாக்கிஸ்தானிலே முதலீடு செய்யவிருப்பதாக சொல்லியிருக்கும் தொகை ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடிகள்.

இங்கே ஆண்டுக்கு முதலீடு செய்யப்படும் 4-5 லட்சம் கோடிகளை கணக்கிடும்போது இது குறைவு தான். ஒப்பீட்டுக்கு சவுதி இங்கே இந்த நான்கு ஆண்டுகளிலே மட்டுமே கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடிகளை முதலீடு செய்திருக்கிறது.

இதனால் பாகிஸ்தானே போரை ஆரம்பித்து வைப்பதை சீனா விரும்பாது ஏன்? மூன்று லட்சம் கோடிகள் ஒரு பெரிய தொகையா என கேட்கலாம்.

இல்லை. பாகிஸ்தானிலே இருக்கும் சீனர்களின் எண்ணிக்கை பெரிது. லட்சக்கணக்கில் சீனர்கள் இப்போது பாகிஸ்தானிலே இருக்கலாம் என்கிறார்கள். சீனா பாகிஸ்தானை ஒரு விவசாய கூலி நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

மலாய்க்கா ஸ்ரெயிட்ச் எனப்படும் இந்தோனேசியா சிங்கப்பூர் வழியாகத்தான் சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதியும் போகிறது. அதை அமெரிக்காவால் தடுக்க முடியும் என்று தான் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழி அமைத்தது. காவடர் துறைமுகம், காரகோரம் வழி என ஏகப்பட்ட சாலைகளையும் வழிகளை அமைத்திருக்கிறது.

அதன் மேல் தாக்குதல் நடத்தப்படக்கூடாது என பலுச்சிஸ்தான் சுதந்திர போராட்ட வீரர்களிலே இருந்து மற்ற தீவிரவாதிகள் வரை எல்லோருக்கும் பணம் கொடுத்து சமதானப் படுத்திக் கொண்டிருக்கிறது.

போர் என வந்தால் காரகோரம் வழியின் முக்கியமான மலை சுரங்கப்பாதையை தகர்ந்துவிட்டால் அந்த வழி முழுமையாக துண்டிக்கப்படும். கூடவே சீனர்களும் கொல்லப்படுவார்கள். அந்நிய நாட்டிலே தம் மக்களை இழப்பது என்பது அங்கிருக்கும் அரசியல் வாதிகளின் ஆட்சிக்கே ஆபத்து.

எனவே சீனா சும்மா ஒப்புக்கு இரண்டு தரப்பு பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அறிக்கைவிட்டு பாகிஸ்தானை அமைதியாக இருக்கும்படி சொல்கிறது.

முன்னெல்லாம் இப்படி காஷ்மிரிலே ஒரு பிரச்சினை, பாராளுமன்ற தாக்குதல் என்றால் உடனே உலகநாடுகளின் தலைவர்கள், வெளியுறவு துறை அமைச்சர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வந்து இந்தியா அமைதியாக இருக்கவேண்டும், பொறுமை காக்கவேண்டும் என சொல்லிவிட்டு போவார்கள்.

ஆனால் இப்போது? தாக்குதலே நடந்திருக்கிறது. நமது அமைச்சரே ஆமாம் பாக்சிஸ்தானை தாக்கினோம் என சொல்லியிருக்கிறார்.

ஒருத்தருமே கண்டுக்கவே இல்லை பாருங்க. ஆ ஊன்னா அணு குண்டு போடுவோம் என மிரட்டின பாகிஸ்தான் இப்போ ஏன் அதை பத்தி பேசாம சும்மா நாங்கள் திருப்பி அடிப்போம், எதிர்பாராத விதமாக தாக்குவோம் என்று மட்டும் பம்முதுகள்.

பொருளாதர வளர்ச்சியை வைத்து நம்முடைய பொருளாதார வளர்ச்சியை முடக்கிவிடுவேன் என பாகிஸ்தான் மிரட்டி வந்ததை வைத்து இப்போது திருப்பி அடிக்கிறார் மோடி. சீன முதலீடுகளும் சீன குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் எப்படி வசதி என?

இன்னும் சில மாதங்களிலே உலக நிதிமையத்திடம் இருந்து பாக்சிஸ்தான் 84 ஆயிரம் கோடி கடன் வாங்கவிருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்தால் அதை தடுத்து நிறுத்தமுடியும். சீனாவோ மேற்கொண்டு கடன் எல்லாம் தரமுடியாது என சொல்லிவிட்டது. இப்போ என்ன செய்வது?

இப்போ இதே உத்தியை மும்பை தாக்குதல், பாராளுமன்ற தாக்குதலிலே பயன்படுத்தியிருக்கலாமே என கேட்கலாம். கண்டிப்பாக. பயன்படுத்தியிருக்கலாம் ஆனால் செய்யவில்லை. ஏன் என்று தான் உங்களுக்கே தெரியுமே?

அப்போதும் விமானப்படை இப்படி ஒரு தாக்குதல் நடத்த அனுமதி கேட்டது. மன்மோகன் சிங்கும் வாஜ்பேயியும் ஒத்துக்கொள்ளவில்லை. மோடி அனுமதி கொடுத்தார்.

சரி இதனால் பாக்சிஸ்தான் இங்கே அணுகுண்டு போடுமா? ஏவுகணை வீசுமா என்றால் செய்யாது. ஏன்? அதன் பின்பு திரும்ப பாகிஸ்தான் என்றொரு நாடே இருக்காதே. சீனாவே அதை விரும்பாது.

சீனாவை பொறூத்தவரை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை பூச்சாண்டி காட்ட, குரைத்து பயமுறுத்த வைத்திருக்கும் நாய் தான் பாகிஸ்தான். நமக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டு இருப்பது, இங்கே குண்டுவைப்பது, மதக்கலவரத்தை உண்டக்குவது, பாகிஸ்தானிய அடிவருடிகளை கொண்டு நம் நாடு வலிமையாகாமல் பார்த்துகொள்வது தான் பாகிஸ்தானின் வேலை.

சுருக்கமாக நாம் ஒரு பெரிய சக்தியாக பெரும் பொருளாதாரமாக வளர்ந்து விடக் கூடாது. அதற்கு கைக்கூலி பாக்சிஸ்தான். பாகிஸ்தானே இல்லை என்றா?

சீனா நேருக்கு நேராக சண்டையிடாது. அவர்களின் மொழியிலே இரும்பு தட்டிலே சோறு என்றொரு கருத்து உண்டு. அதாவது சோத்துக்கு பிரச்சினை வந்துவிடக்கூடாது என. அதை சீனா இழக்க தயாராக இல்லை.

இந்த சூழ்நிலையிலே ஏவுகணை வீசி லாகூரையும் இல்ஸாமாபாத்தையும் தாக்கினால் கூட பாகிஸ்தான் பொத்திக்கொண்டு தான் இருக்கவேண்டி நேரிடும். படியளக்கும் எசமான்களை மீறி செய்ய முடியுமா? அதான் விஷயம்.

மோடி இது தான் அருமையான வாய்ப்பு என இறங்கி அடிக்கிறார். அவ்வளவு தான் வித்தியாசம். மோடி சிறந்த தலைவர் என்பதால் பொதுமக்களின் மீது குண்டு வீச சொல்லாமல் தீவிரவாதிகளின் மீது வீச சொல்லியிருக்கிறார். ஆனால் அடுத்து முசாபராபாத்தோ லாகூரை தரைமட்டமாக்கப்படாது என எந்த உத்தரவாதமும் இல்லை.

பாகிஸ்தான் சோத்துக்கு பிச்சை தான் எடுக்கவேண்டும். இதை இன்றே பாகிஸ்தான் பத்திரிக்கைகள் எழுத ஆரம்பித்துவிட்டஞ. இப்போது தான் ஏதோ முதலீடு வர ஆரம்பித்திருக்கிறது. அதையும் சண்டை என கெடுத்துவிட வேண்டாம் என.

பாகிஸ்தான் ஏன் அமைதியாக இருக்கிறது, ஏன் அணுகுண்டு மிரட்டல் எல்லாம் விடவில்லை என்பதற்கான காரணம் இது தான். இங்கே வழக்கம் போல பல கபோதிகள் மும்பை தாக்குதலின் போது பதில் தாக்குதல் நடத்தாமல் இருந்து தான் உலக நாடுகளின் நன்மதிப்பை மன்மோகன் சிங் பெற்றார் அதை இப்போது மோடி செலவழித்துக் கொண்டிருக்கிறார் என.

உலக நாடுகளின் நன்மதிப்பா? சரியான காமெடி. அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றைக்கு வியட்நாமிலே வடகொரிய கம்னினாட்டிஸ்ட் சர்வாதிகாரி கிம் ஜோங் உன் உடன் அணு ஆயுத ஒழிப்பு மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார்.

மருந்துக்கு கூட எந்த நாட்டிடமும் இருந்து அறிக்கை இல்லை. ஆஸ்திரேலியா, ஐரோப்பா எல்லாம் பாகிஸ்தான் தன்னுடைய நாட்டிலே இருக்கும் தீவிரவாத முகாம்களை ஒழிக்கவேண்டும். ஒழித்தால் ஏன் இந்தியா தாக்கப்போகிறது என அறிக்கை விட்டிருக்குதுகள்.

இனி அடித்தால் திருப்பி அடிக்கப்படும் என்பது உறுதி. அணு ஆயுத பூச்சாண்டி காட்டமுடியாது என்பதும் உறுதி. உலகநாடுகள் ஏதும் நம்மை அமைதிக்காக சொல்லாது என்பது உறுதி. அப்புறம் என்ன?

ஏ பாயாச மோடியே தான்.!

கட்டுரை: – ராஜா ஷங்கர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe