சிக்கலில் பாகிஸ்தான்! சிக்கியது யார்?!

pak aircraft f16 - 2026

மிகப்பெரும் சிக்கலில் பாகிஸ்தானை தள்ளியிருக்கின்றது இந்தியா, நிச்சயம் மிக்பெரிய ராஜதந்திர நகர்வு அது..! என்ன அது?

பாகிஸ்தான் எப் 16 விமானத்தை இந்தியா ஏன் மிக சிரமப்பட்டு வீழ்த்தியது, அதுவும் அபிநந்தன் உயிரை பணயம் வைத்து மீட்டது என்பதில் பல விஷயங்கள் உள்ளன, அவை சுவாரஸ்யமானவை.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அதிநவின எப்16 விமானங்களை கொடுக்க முயன்ற பொழுது இந்தியா ஆட்சேபித்தது, எங்களுக்கும் வேண்டும் என்றது. அமெரிக்கா இருவருக்கும் அப்பொழுது கொடுக்கவில்லை.

பின் என்னாயிற்று என்றால் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டே இருக்க “தற்காப்புக்கு மட்டும் எப்16 ரக விமானத்தை பயன்படுத்தலாம், இந்தியா மேல் தாக்க கூடாது” என்ற நிபந்தனையில் பாகிஸ்தானுக்கு கொடுக்க சம்மதித்தது! அப்பொழுதும் முன்பு ஹாஜி நீர்மூழ்கி போல சும்மா கொடுக்கவில்லை, பாகிஸ்தான் பணம் கொடுக்க வேண்டும் என்றது, அவ்வளவு பணம் பாகிஸ்தானிடம் இல்லை!

இதனால் ஜோர்டானிடம் இருந்த பழைய எப்16 விமானத்தை வாங்கினார்கள்! அமெரிக்காவோ அதே பழைய நிபந்தனையுடன் பாகிஸ்தான் எல்லையினைவிட்டு இவை நகரக் கூடாது என கண்டிப்புடன் அனுமதித்தது!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

ஜோர்டான் ஒரு அமெரிக்க அடிமை பொம்மை நாடு என்பது ரகசியமல்ல‌! இப்படித்தான் எப்16 பாகிஸ்தானுக்கும் வந்தது, இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுகோய் ரகங்களை வாங்கினாலும் பாகிஸ்தானின் எப்16ஐ குறித்துக் கொண்டே இருந்தது!

f16 pakistan - 2026

இந்நிலையில் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதும் நிச்சயம் பாகிஸ்தான் தாக்க வரும் என கணித்த இந்தியா எந்த வகை விமானம் வரும் என கணக்கிட்டது!  பாகிஸ்தானிடமும் மிராஜ் உண்டு, சீன தயாரிப்பான செங்க்டு உண்டு மற்றும் ஜே17 என்ற வகை உண்டு ஆனால் சிறந்தது எப்16 ரகமே!

இந்தியாவின் கணக்கு வேகமானது மற்ற விமானங்கள் வருவதை விட எப்16 வந்தால் விடக்கூடாது அதில் அரசியல் காரணங்கள் உண்டென கருதித்தான் மிக சிரமபட்டு எப்16ஐ வீழ்த்தியது

கவனித்தீர்களா? அதை வீழ்த்தியவுடன் “எங்களை தாக்க வந்த‌ பாகிஸ்தானின் எப்16ஐ வீழ்த்தினோம்” என சொல்லிக் கொண்டே இருந்தது இந்தியா!

பாகிஸ்தானோ வாய்திறக்கவில்லை! ஆனால் ஆதாரம் அவர்கள் ராணுவத்தில் யாரோ எடுத்த படத்தில் வந்தது! ஆம் பாகிஸ்தான் பகுதியில் வீழ்ந்து கிடக்கும் எப்16 விமான பாகங்களை பாகிஸ்தான் வீரர்கள் பார்க்கும் படங்களை அவர்கள் தரப்பே வெளியிட்டது!

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

அவ்வளவுதான் இந்தியா அதை கச்சிதமாக பிடித்துக் கொண்டு, சொல்லவேண்டிய இடத்தில் சொல்லிற்று! எங்கள் நாட்டுக்குள் தாக்க வந்த பாகிஸ்தான் விமானங்களை சுட்டோம், பாகிஸ்தான் தாக்க வந்த ஆதாரம் வேண்டுமா?

“இதோ இம்ரான்கானே இந்தியா மேல் தாக்குதல் நடத்த எங்களால் முடியும் என காட்டவே எம் விமானங்கள் இந்தியாவில் நுழைந்தன..” என சொல்லியிருகின்றார்

(ஆம் வாயால் மாட்டினான் அழகன்) ஆக எப்16 இந்தியாவினை தாக்கக் கூடாது என்ற உங்கள் நிபந்தனை மீறப் பட்டுள்ளது, பாகிஸ்தான் ஒரு பொய் நாடு” என சொல்லியது இந்தியா!

aircraft - 2026

பாகிஸ்தான் பல்லைக் கடித்துக் கொண்டு அபிநந்தனை இழுத்துச் செல்லுங்கள் என சொல்லிக் கொண்டிருக்க இப்படிப் பட்ட காரணங்களும் உண்டு!

இனி பாகிஸ்தான் எப்16 விமானம் மூலம் தாக்க வருவது சிரமம், சீன தயாரிப்பு விமானங்கள் வந்தால் என்னாகும் என உங்களுக்கே தெரியும்!

அதுவும் பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து செய்தால் எப்படி இருக்கும்? இந்திய ராணுவம் மிகத் தந்திர் உபாயமான நடவடிக்கையில் ஈடுபட்டு பாகிஸ்தானை கட்டிப்  போட்டிருக்கின்றது!  பாகிஸ்தான் அமெரிக்க ஆயுதங்களால் அவமானப் படுவது முதல்முறை அல்ல‌~!

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

பேட்டர்ன் டாங்க் கொடுத்தார்கள், உடைக்க முடியா அதை இந்திய படைகள் உடைத்து அவமானம் கொடுத்த பின் பாகிஸ்தானிடமிருந்து அதை திரும்பப் பெற்றார்கள்!

பெரும் நீர்மூழ்கியினைக் கொடுத்தார்கள், ஹாஜி என அதை வைத்து 1971ல் பாகிஸ்தான் கண்ணாமூச்சி ஆடியது! இந்திய கடற்படை அதை நொறுக்கிப் போட “நீ நாசமாய் போ..” என ஒதுங்கியது அமெரிக்கா!

இப்பொழுது அவர்களின் சாகச விமானமான எப்16ஐ இந்தியா நொறுக்கிப் போட “ஏண்டா உனக்கு எவ்வளவு உதவினாலும் உருப்பட மாட்டியா?” என ரகசியமாக முறைக்க தயாராகிறது அமெரிக்கா!

வீரத்தில் மட்டுமல்ல தந்திர நகர்வுகளிலும் முத்திரை பதிக்கின்றது இந்தியா!

ராயல் சல்யூட் இந்தியா!

கட்டுரை:– ஸ்டான்லி ராஜன் (Stanley Rajan)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories