என்.ஐ.ஏ., அமைப்பிற்கு அதிக அதிகாரம்… மக்களவையில் நடந்தது என்ன?

nia bill amitsha - 2026

என்.ஐ.ஏ., அமைப்பிற்கு அதிக அதிகாரம்… மக்களவையில் நடந்தது என்ன? யார் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தனர்? வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்ப்பு நாடகம் போட்டு ஏமாற்றியவர்கள் யார்?…

மக்களவையில் அதிரடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கெடுப்பு நடத்தி சட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொன்னது ஏன்?…

NIA அமைப்பிற்கு அதிக அதிகாரம் தரும் சட்டத்தை எதிர்த்து 6 எம்பிக்கள் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

NIA அமைப்பிற்கு அதிக அதிகாரம்…
1) அயல் நாடுகளில் உள்ள இந்தியர்கள் மீது நடக்கும் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டது…

2) அயல் நாடுகளில் உள்ள இந்திய சொத்துகள் மீது நடக்கும் பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம்…

3) பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த தற்போது உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தை சிறப்பு நீதிமன்றமாக மாற்றம் செய்து விசாரணையை விரைவில் நடத்தும் அதிகாரம்…

ஏனெனில் பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது…

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

4) சைபர் கிரைம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம்.
முறைகேடான பண பரிவர்த்தனை மற்றும் தீவிரவாதிகள் ஆள் சேர்ப்பு,
பயங்கரவாதத்தை பரப்புதல் போன்ற குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம்…

5) மனித கடத்தல்கள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் விற்பனை, கள்ளப் பணம், போன்ற குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் தரப்பட்டுள்ளது…

மக்களவை விவாதத்தில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி,
சமாஜ்வாடி கட்சியின் ஆசம் கான்
அசைவுதீன் ஓவைஸ்ஸி மற்றும் இவர்களுக்கு ஆதரவாக திமுக டி.ஆர்.பாலு, ஆ ராசா பேசினார்கள்.

இதற்கு பதிலடியாக இந்த எதிர் கட்சிகளுக்கு புரியும் அதே மொழியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா,

“தீவிரவாதத்திற்கு மதம், இனம், மொழி, ஜாதி கிடையாது என்று பதிலடி தந்துள்ளார். மேலும் தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் மற்றும் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்…

எங்களுக்கு அச்சமாக உள்ளது என்று ஓவைஸ்ஸி கூறியதற்கு,…
நீங்கள் அச்சமாக இருப்பதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று அமித் ஷா பதிலடி தந்தார்…

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

மேலும் வாக்கு வங்கி அரசியலுக்காக POTA சட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் ரத்து செய்து விட்டார்கள்.
அதன் பிறகு தீவிரவாதிகள் தாக்குதல் அதிகமாக நடந்து உள்ளது.

2008 மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு NIA அமைப்பை காங்கிரஸ் ஆட்சியில் தான் ஏற்படுத்தப்பட்டது…

ஆனால் இந்த NIA அமைப்பிற்கு அதிகாரம் குறைவாக உள்ளது.
எனவே தான் NIA அமைப்பிற்கு அதிக அதிகாரம் தரும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்…

மேலும் எதிர்ப்பு நாடகம் ஆடிய டி.ஆர்.பாலு குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட திருத்தம் நிறைவேற்றலாம் என்று கூறியுள்ளார்…

ஓவைஸ்ஸி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அமித் ஷா, வாக்கெடுப்பு நடத்தி யார் யாரெல்லாம் ஆதரவு, யார் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வாக்களிக்கிறார்கள் என்று இந்திய தேசம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே வாக்கெடுப்பு நடத்தலாம் என்று அறிவித்தார்…

மிகப்பெரிய டிவிஸ்ட் நடந்தது…  NIA அமைப்பிற்கு அதிக அதிகாரம் தரும் சட்டத்தை ஆதரித்து 278 வாக்குகள் கிடைத்தன.  சட்ட திருத்தத்திற்கு எதிராக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது…

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

சமாஜ்வாடி கட்சி ஆசம் கான் வாக்களிக்க முடிவு செய்து சீட்டில் வாக்களித்த தான் கையெழுத்து போட்ட சீட்டை தந்து விட்டு திடீரென திரும்பப் பெற்றுக் கொண்டார்.

NIA சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்காத கட்சிகள்… திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கள் ஒருவர் கூட அதிக அதிகாரம் வழங்கும் NIA சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

– செந்தில் அரசு (Senthil Arasu)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories