மக்கள் பணத்தில் வெடி வைத்த நகை கடை!

Published:

goodwin - 2026

மகாராஷ்டிரத்தில் தீபாவளிக்கு முந்தைய தினமான சனிக்கிழமை பிரபல நகைக்கடையான கூட்வின் ஜுவல்லர்ஸின் டோம்பிவாலி கிளை மூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக அப்பகுதி காவல்துறை அதிகாரி சுரேஷ் அஹிர் கூறுகையில், கூட்வின் நகைக்கடையின் உரிமையாளர்கள் மீது ரூ.10 கோடி மோசடி செய்ததாக சுமார் 300 வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். எனவே அந்த நகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

கூட்வின் நகைக்கடையின் வாடிக்கையாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதன் உரிமையாளர்கள் சுனில் நாயர் மற்றும் சுதிர் நாயர் ஆகியோரது வீட்டுக்கு முன்பு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கடந்த 4 நாட்களாக அந்த நகைக்கடை திறக்கவில்லை. விடுமுறைக்கான எவ்வித முன் அறிவிப்பும் இல்லை. தாங்கள் சீட்டு கட்டிய பணத்துடன் அவர்கள் தப்பித்து விட்டார்கள் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்வின் நகைக்கடையில் ரூ.2 லட்சம் வரை நான் செலுத்திய பணம் உள்ளது. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவற்றை நகையாக எடுத்துக்கொள்ள வந்தபோது கடை பூட்டப்பட்டிருந்தது. எனவே இங்கு கூடியிருந்த 300-க்கும் மேற்பட்டோர் காவல்துறையில் புகார் அளித்தோம் என்று வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img