December 5, 2025, 10:12 PM
26.6 C
Chennai

தேசத்தை நிர்மாணித்த பெருந் தலைவன் வாஜ்பாய்! நவீனத்தை நோக்கிய பார்வையில்…!

atalji 1 - 2025

சோர்ந்து கிடந்த தேசத்தை புனர் நிர்மாணம் செய்த பெருந்தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய். மியூசிக்கல் சேர் போல் பிரதமர்கள் மாதங்களுக்கு ஆட்சியில் நாற்காலியில் அமர்ந்து தேசத்தை சோர்வுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், புயலென வேகமெடுத்து புதுப்பாதை காட்டியவர்.

அத்தகைய அடல்ஜி குறித்த ஆத்மார்த்தமான பதிவு இது…

தங்கத்தை இங்கிலாந்தில் அடமானம் வைத்து அரசாங்கம் நடத்திய இந்தியாவில் நீங்கள் பிரதமராக பதவியேற்ற பின்தான்… உங்கள் ஆட்சியில் தான்…

இந்தியா முழுவதும் நாங்கள் விபத்தில்லா நான்கு வழிச் சாலை கண்டோம்.

சர்வசிக்ஷ அபியான் மூலம் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி கற்றோம்.

பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா மூலம் நாங்கள் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டோம்.

வங்கி வீட்டுக் கடன் வட்டி குறைந்து நாங்கள் வீடு கட்டினோம்.

வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வாகனக் கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த நாங்கள் வாகனங்கள் வாங்கினோம்..

விறகு அடுப்பும் மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய நாங்கள், பெரும் செல்வாந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய கேஸ் (சமையல் எரிவாயு ) தாராளமாக வாங்கினோம்..

அதிகப்படியாக இருளில் இருந்த எங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது ..

போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான தேசிய நெடுஞ்சாலைகள் கிடைத்தன. அவற்றில் தமிழகத்தில் NH 66 கிருஷ்ணகிரி – பாண்டிச்சேரி,  NH 68 சேலம் – உளுந்தூர் பேட்டை, NH 208 மதுரை – கொல்லம், NH 45A விழுப்புரம் – நாகப்பட்டினம், NH 206 NH 67 திருச்சி – ராமேஸ்வரம், NH 207 NH 209 சாம்ராஜ்நகர்- திண்டுக்கல், NH 45B ஆகியவை கண்டோம்.

தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறையக் கண்டோம் ..

நான்கரை ஆண்டுகள் உயராத விலைவாசி கண்டோம்; உயராத பெட்ரோலிய பொருட்கள் கண்டோம் லிட்டருக்கு ரூ. 36 என்ற அளவில்!

IMG 20180816 182757 - 2025

செல்வந்தர்கள் மட்டுமே பெரிதும் பயன்படுத்தி வந்த தொலைபேசி இணைப்புகளை, அதுவும் பதிவு செய்து 6 மாதம் கழித்து கிடைத்த தொலைபேசி இணைப்புகளை, 1000 ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்களான நாங்களும் பெற்றோம். வணிகத்தை அதன் மூலம் பெருக்கினோம்..

250/- ரூபாயும் 2 ரூபாயும் செலுத்தி செல்லுலார் தொலைபேசி சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்.

மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது.

அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவி பொக்ரான் அணுகுண்டு வெடித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிரச் செய்தீர்கள்,

நீங்கள்தான் மேதை விஞ்ஞானி அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கினீர்கள்,

பனிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றி வாகை சூடினீர்கள்..

சுற்றுலா கூட போகமுடியாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் (ஸ்ரீநகரில்) பயங்கரவாதிகளை அடக்கி சுற்றுலா சுலபமாக்கினீர்கள்..

வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5 லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடன் கொடுக்கும் நிலையை உருவாக்கினீர்கள்..

எதிர்க்கட்சியாக இருந்தாலும் எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சிலிகான் பள்ளத்தாக்கு ஆக்க 1500 கோடி உடன் ஒதுக்கி மென்பொருள் உற்பத்தியை தன்னிறைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறையைப் போக்கினீர்கள்..

IMG 20180816 182815 - 2025

உங்கள் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது ..
உங்கள் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.
உங்கள் ஆட்சியில்தான் இமாச்சல் மாநிலத்தில் (மண்டி) முதல் பெரிய சுரங்கப்பாதை 9KM அமைக்கப்பட்டு போக்குவரத்து சுலமாக்கப்பட்டது.

உங்கள் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான சுரங்கப் பாதைகள் அமைக்கப் பட்டன. கடல் பாலங்கள் கொண்ட கொங்கன் ரயில்வே மங்களூர் – மும்பை பாதை அமைக்கப் பட்டது.

உங்கள் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25 கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,..
உங்கள் ஆட்சியில்தான் வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தரப்பட்டது,.

உங்கள் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப் பட்டது.

உங்கள் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாள் ஆக்கப்பட்டது.
நாட்டு மக்களுக்காக திருமணமே செய்து கொள்ளாத உங்களின் இன்னும் பல சாதனைகளைச் சொல்லிக் கொண்டேபோகலாம்.

.சுதந்திர இந்தியாவின் சிற்பியான உங்களுக்கு ஒரு பாரதரத்னா போதாது… இருக்கும் அனைத்து விருதுகளும் கொடுத்தாலும் கூட எங்களின் ஆசை அடங்காது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories